5.அயிரை மேட்டில் ஓரிரவு
வரையாத அழகோடு, வடிவான உருவோடு, வலையரின் பத்து மினியாள்; வளையாத வில்லையும், வகிடாத வாளையும், பழிக்கின்ற பருவ எழிலாள்; புரையாத திருமகளின் தோற்றரவில் முன் ஒரு நாள் புலம் காட்டி நின்ற போது, புல்லியே வதுவையுறப் போனதை இன்று அளவும் புவனத்தில் யாரும் அறிய, நுரையோடு திரை ஓங்கும் திரு மலையின் பட்டினத்தில் நுழையோரின் மருக னாக, நுண் அயிரை மேட்டிலே இரவெலாம் கழிப்பதை, நோக்கு நாள் எந்த நாளோ? கரையோடு ஊர் உலவும் காரழகுத் திருமேனி [...]
Posted: April 9th, 2008 under பக்தி, வைணவம்.
Comments: 4





