Siththan.com » அன்பு

அன்பற்ற அறுசுவை உண்டி பாழ்
விவேக சிந்தாமணி – 2.58

கெட்டசாறு தவிடுகஞ்சி கிருமியுண்ட மாவறைக்

—–கீரைவேர் தெளிந்தமோர் முறிந்தபாகு கிண்டுமா

இட்டசோறு கொழியலுப் பிடாதபுற்கை யாயினும்

—–எங்குமன்ப தாக நுங்க இன்பமாயிருக்குமே

பட்டபாகு பசுவினெய் பருப்புமுக் கனிக்குழாம்

—–பாளிதங்க டாளிதங்கள் பண்ணி காரவகையுடன்

அட்டபாற் குழம்புகன்ன லமுதமோடு முதவினும்

—–அன்பினோ டளித்திடாத வசனமென்ன வசனமே.

மனதில் அன்பில்லாது ஒருவர் மற்றவருக்கு இடும் சுண்டக்காய்ச்சிய பால், பசுவின் நெய், வேகவைத்த பருப்பு, முக்கனி, குழம்பு வகைகள், தாளித்த உணவு வகைகள், அப்பங்கள், திரட்டுப்பால், சக்கரை, சோறு ஆகியவைகள் நிறைந்த உணவு நிறைவையும் இனிமையையும் உண்டாக்காது.

அங்ஙனமன்றி, அன்புடனே, கெட்ட சோறு, பதங்கெட்ட குழம்பு, அரிசித்தவிடு, நொய்யரிசிக் கஞ்சி, புழு தின்ற கேழ்வரகு முதலிய தானியங்களின் மாவு, அறைக்கீரையின் வேர்(கட்டை), நீர்மோர், கெட்டுப்போன பால், தவிடு நீக்காத அரிசிச் சோறு, உப்புப் போடாத கூழ் ஆகிய உணவினை இட மனங்குளிர்ந்து உண்ணலாம்.

யாரோ சொன்னது – 1
யாரோ சொன்னது – 1

1.”உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்.”

அன்பும் சிவமும்
அன்பும் சிவமும்

திருமந்திரம்

“அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்

முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்

அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்

அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.”

புறத்தான் = அன்பின் மேலுள்ளவன்.

உடலாயுள்ளான் = அன்பினையே உடலாக உள்ளவன்.

அணுகிய = நெருங்கிய

முன்பினுள்ளான் = உலக உற்பத்திக்கு முன்னும், அதன் அழிவுக்குப் பின்னும்

சிவனாம் சிவம் இன்ப இயல்பை உடையவன். இன்ப இயல்பின் வாயிலாம் அன்பினுள்ளே இருக்கிறான். அந்த அன்புக்குக் காவலாய் புறத்தாகவும் உள்ளான். அன்புக்குப் புகலிடமாய் இருப்பதால் உடலாயும் உள்ளான். “அன்பும் சிவமும் ஒன்றே; அது உடலும் உயிரும் போல” என்னும் கருத்து இருக்கிறது. என்றாலும், உலகத் தோற்றத்துக்கு முன்னும், அதன் மாற்றத்துக்குப் பின்னும், ஒன்றுபோல் என்றும் நின்று நிலவுபவன் சிவன். அவன் முற்றுந் துறந்த முனிவருக்கெல்லாம் முதல்வன். வேறெதற்கும் அகப்படாதவன். அன்பினுள் அமர்ந்து அருளுபவன் அவனே. அடைதற்கு அரிய அரும் பொருள். அவன் இறவாத இன்ப அன்புடையோருக்குத் தன் திருவடியினை அணையாகவும் துணையாகவும் அளிப்பவன்.

“அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்

இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்

முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்

அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.”

ஐந்தில் அமர்ந்து = ஐம்பூதங்கள் என்பார் சிலர். “சிவயநம” என்போருமுண்டு.

எல்லா உயிர்களின்மேல் செலுத்தும் அன்பால் ஒருவருக்கு உண்மையறிவு உண்டாகும். அதனால் அடக்கமுடைமை உண்டாகும். இப்பண்புகளிடமாக நின்று அருளுபவன் சிவன். அதனால் அப்பண்புகளே சிவம் எனக் கூறப்பட்டன. அதுபோல கணவனும் மனைவியும் புணரும்பொழுது சிவசிந்தனையுடன் கூட அதில் கிட்டும் சிற்றின்பமும் சிவமே. ஊழிக்காலத்துக்குப்பின் உலகைத் தோற்றுவிக்கும் பெரும் பொருள் சிவனே. அவ்வாறு தோற்றுவித்து, நிலை நிறுத்திப் பின் பேரொடுக்கம் செய்யும் ஊழிப்பெருமானும் சிவனே.

ஆக, அன்பும் சிவமும் இரண்டறக் கலந்து நிற்பதால் அன்பே சிவமாம்.