ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

ஞானக் குறள்-(211-220)

3.தன்பால் *********** 22. அங்கியில் பஞ்சு (211-220) *****************************   211. அங்கியிற் பஞ்சுபோ லாகாயத் தேநினையில் சங்கிக்க வேண்டாஞ் சிவம். சிதாகாயமாம் பரவெளியில் இருக்கும் நினைவில் மூலாக்கினியைப் பாய்ச்சினால் அனலிற் பஞ்சுபோல் உடனே சிவம் சோதியாய் வெளிப்படும். ஐயுற வேண்டாம்.   212. மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின் அப்பால தாகுஞ் சிவம்.   உயிர்ப்பை அறியும் உள் மெய்த் தத்துவத்தை அறியாதவர் மனதில் தெய்வ சக்தி இல்லாது சிவம் நீங்கி இருக்கும். மடமையே குடியிருக்கும். [...]

ஞானக் குறள்-(71-80)

1. வீட்டுநெறிப்பால் ********************* 8. அர்ச்சனை (71-80) *********************** (அருச்சனை = பூசிக்கும் முறை. = கலைகளைப் பிரகாசம் பெற வைப்பதே. இதை அருட்சுனை என்றும் ஞானியர் கூறுவர்.) 71. மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி அண்டரனை யர்ச்சிக்கு மாறு. அண்டரனை = கண்ணுக்குள் இருக்கும் சிவனாகிய சீவனை. சூரிய, சந்திர, தீ மண்டலங்களை ஒருங்கிணைத்துத் (முக்கலையையும் ஒன்று சேர்த்து) தான் கண்ணுக்குள் இருக்கும் சிவனாகிய சீவனை அருச்சிக்கமுடியும். 72. ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து பூசனைசெய் [...]