பழமொழி 600
1.அகத்தினழகு முகத்தில் தெரியும். 2.அகல உழுகிறதை விட ஆழ உழு. 3.அகல் வட்டம் பகல் மழை. 4.அக்கா இருக்கும்வரைதான் மச்சான் உறவு 5.அக்கா வைச்சிருந்தா அரிசி; தங்கை வச்சிருந்தா தவிடு. 6.அசடுக்கு வாக்கப்பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிட, சமத்துக்கு வாக்கப்பட்டு சட்டுன்னு தாலி அறுக்கலாம். 7.அசைந்து தின்பது யானை, அசையாமல் தின்பது வீடு. 8.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது 9. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது. 10.அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? 11.அடக்கமே பெண்ணுக்கு அழகு [...]
Posted: February 7th, 2009 under சிவவாக்கியர் பாடல்கள், ஞான முத்துக்கள், தமிழமுது, பழமொழிகள் 615.
Comments: none





