Tag Archives: நவராத்திரி
நவராத்திரி – ஏழாம் நாள்

ஏழாம் நாளில் அம்மையை சாம்பவியாக அலங்கரித்து வழிபடவேண்டுமென சிலரும், மகாலக்குமியாக வழிபடவேண்டுமென்று பெரும்பான்மையினரும் கூறுவர். தாமரை மலரைக் கரத்தில் ஏந்தியவள்; செல்வத்தை அருள்பவள், மகாலக்குமி. தாமரை இருக்கையில் வீற்றிருந்து, இறையருள் பெற்றோரை ஏற்றுவித்து, அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டுபவளும் அவளே.
செபமாலை, கோடரி, கதை, வில், அம்பு, தாமரை, வச்சிராயுதம், கமண்டலம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், சங்கு, சக்கரம், மணி,மதுக்கலயம், கத்தி, கேடயம், பாசம், சூலம் ஆகியவைகளைத் தன் கரங்களில் ஏந்தியிருப்பவள். பவளம் போன்ற நிறமுடையாள்; திருமாலின் சக்தி.

படையல்: பாசிப்பயறு சுண்டல்
துதிக்கவேண்டிய இராகம்: பிலகரி
நவராத்திரி – ஆறாம் நாள்
ஆறாம் நாளில் அம்மையை நாக இருக்கையில் வீற்றுள்ள சண்டிகையாகப் பூசிக்கவேண்டும். தூம்ரலோசனன் வதத்துக்குறிய தோற்றம் என்பார்கள்.
இன்னும் சிலர் இன்று கெளமாரியையைத் துதிக்கவேண்டுமென்பார்கள். ஆண்மை சக்தியும் ஞானசக்தியும் கலந்த உருவமாகிய இவள் மயில் இருக்கையும் சேவல் கொடியும் உடையவள்; வீரத்துக்கு ஆதாரமானவள். ஓங்கார சக்தியின் ஒட்டுமொத்த உருவமான இவளைப் பூசிக்க எல்லாப் பாவங்களும் தொலையும்.

படையல்: தேங்காய் சாதம்
துதிக்கவேண்டிய இராகம்: நீலாம்பரி
நவராத்திரி – ஐந்தாம் நாள்
ஐந்தாம் நாள் பராசக்தியை மகேசுவரியாக அலங்கரித்து வழிபடவேண்டும். ரிடப வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் தருமத்தின் திருவுருவமாம் இச் சிவ சக்தி அளவற்ற பெரும் உடலைக் கொண்டதால் “மகதீ” என அழைக்கப்படுகிறாள். அனைத்து மங்களங்களையும் தருபவள். உழைப்பவருக்கு அருள்பவள்.
இவளை கெளரியாகவும், சிம்ம வாகினியாகவும் பூசிப்போரும் உண்டு.
சும்ப நிசும்ப அவுணர்களை அழித்து அகிலஉலகையும் உய்வித்தவள்.


படையல்: புளியோதரை
துதிக்கவேண்டிய இராகம்: பந்துவராளி










