Siththan.com » பக்தி

வேதப் பிராமணத்தி – வெள்ளாள அரசி ?
குலதெய்வத்தைத் தேடிக்கொண்டுள்ளேன்.

வேதப் பிராமணத்தி யார்?

வெள்ளாள அரசி  யார்?

காராளன் எங்குள்ளார்?

இவ்வினாக்களுக்கு விடை தெரிந்த நண்பர்கள் அறிவுறுத்தவும்

மண்ணால் ஆன லிங்கங்கள்
தமிழ்நாட்டு சிவாலயங்கள் சிலவற்றில் கருவறை லிங்கங்கள் மண்ணால் ஆனவை. அப்படிப்பட்ட மண்லிங்கங்கள் இரண்டு வகைப்படும்.

1.ஆமலிங்கம்.

2.பக்குவலிங்கம்.

ஆமலிங்கமானது, புண்ணிய தீர்த்தங்களான ஆறு, கடல், குளம், மண், மலை, நந்தவன மண், புற்று மண் முதலிய மண்ணை பொடி செய்து தானியம், கோதுமை, உளுந்து, குங்கிலியம், குக்கில், அரக்கு, பிசின் இவற்றோடு பசுவின் ஐந்து வகை பொருட்களும் சேர்த்து பிசைந்து படிகப்பொடி அல்லது நவரத்தின பொடி கலந்து உருவாக்குவதாகும்.

இந்த ஆமலிங்கத்தை பக்குவமாக சுட்டெடுப்பது பக்குவலிங்கம் எனப்படும்.

இந்த இரண்டு வகையான லிங்கங்களும்,மயிலாடுதுறை அருகிலுள்ள திருப்பந்தணைநல்லூர், திருப்புன்கூர், திருச்சிறுகுடி தலங்களிலும், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் காணப்படுகின்றன.

ஆன்மிகம் ஒட்டுமா?
தமிழ்நாட்டில் ஆசையூர் என்ற ஊரில் ஒரு மீசைக்காரர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பலாப்பழம் சாப்பிடக் கொள்ளை ஆசை.  ஒருநாள் நடந்து சென்ற போது, ஒரு தோட்டத்தைக் கண்டார். அங்கிருந்த பலாமரம் அவரை வா! வா! என அழைத்தது.  மரத்தில் பலாப் பழங்கள் பழுத்துத் தொங்கி மணம் வீசிக் கொண்டிருந்தன. மீசைக்காரர் அந்தப் பழத்தை எப்படியாவது சாப்பிட வேண்டும் என முடிவு செய்து விட்டார்.

பலாப்பழம் சாப்பிட்டால் அதிலுள்ள பசை கையிலும் மீசையிலும் ஒட்டுமே!  என்ன செய்யலாம் என்று யோசித்தார்.  வீட்டில் மனைவி பலாப்பழம் அறுக்கும்போது கையில் எண்ணெய் தடவிக் கொள்வது நினைவுக்கு வந்தது. உடனே கடைக்கு ஓடினார். நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டு  தோட்டத்துக்கு வந்தார். கையில் எண்ணெயைத் தடவினார். மீசையிலும் தடவிக்கொண்டார். பழத்தைப் பறித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும் என்னும் அவசரம்; ஆசை!  கையில் எண்ணெய் பசையுடன் ஏறினால் வழுக்குமே என்ற சிந்தனை வரவில்லை. மரத்தில் தொற்றிக் கொண்டு ஏறினார். கையில் தடவியிருந்த எண்ணெய் வழுக்கவே தவறி விழுந்து அலறினார். சப்தம் கேட்டு, தோட்டத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். பலாப்பழம் வேண்டுமானால் என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்தால் நானே பறித்துத் தந்திருப்பேனே என்றார் தோட்டக்காரர்.

ஆன்மிகம் என்பது பிசுபிசுப்பான பலாப்பழம் போல! அதை அவ்வளவு எளிதில் பறிக்கவோ, சாப்பிடவோ முடியாது. பறித்தால் முள் குத்தும், பிரித்தால் பசை ஒட்டுவது போல ஒட்டும். நாம் ஆன்மிகத்தின் அருகே நெருங்க நெருங்க அது நம்மை விட்டு விலகி ஓடவே பார்க்கும். பலாவை முள் குத்தாமல் பறித்து, பசை ஒட்டாமல் சாப்பிட வேண்டுமானால் தோட்டக்காரனின் உதவி தேவை. அதுபோல், ஆன்மிகத்தை பக்குவமாக உணர ஒரு குருவின் உதவி தேவை. குரு என்றால் ஏதோ தாடி மீசை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. ஆன்மிகம் பற்றி நன்கு அறிந்தவர்களுடன் ஆன்மிக விடயங்கள் குறித்து விவாதித்தாலே போதும். அதற்கு முடியவில்லை என்றால்  ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், சிவபுராணம் ஆகியவற்றை எளிய நடையில் எழுதியிருப்போரின் புத்தகங்களை படிக்க வேண்டும். தகுதியானோர் பேசும் ஆன்மிக கூட்டங்களுக்கு செல்ல வேண்டும். அங்கே பேசுவோரிடம், நமது சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி படிப்படியாக ஆன்மிகத்தில் காலெடுத்து வைக்கும்போது, அது தானாகவே நம்மை வந்து ஒட்டிக்கொள்ளும்.

(ஆலயத்தில் ஆலமரத்தடியில் கேட்டது)

மின் – நூல் – கந்தர் கலிவெண்பா
அன்புடையீர்,

என் இணைய தளத்தில் வெளிவந்த “கந்தர் கலிவெண்பா” என்னும் பக்தி நூலை மின் – நூலாக்கித் தந்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அதைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது என் முதல் முயற்சி. தவறுகளையும், மேம்படுத்தக் கருத்துக்களையும் njaanam@gmail.com மூலம் அனுப்பவும்.

கந்தர் கலிவெண்பா – 32 இறுதிப் பகுதி
கந்தர் கலிவெண்பா – 32 இறுதிப் பகுதி

32.திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையும் ஈரா(று)

அருள்விழியு மாமுகங்க ளாறும் – விரகிரணம்

சிந்தப் புனைந்த திருமுடிக ளோராறும்

எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண்

எல்லாம் பொடிபடுத்தி யெவ்வரமுந் தந்துபுகுந்(து)

உல்லாசமாக உளத் திருந்து – பல்விதமாம்

ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமுஞ்சீர்ப்

பேசுமியல் பல்காப்பி யத்தொகையும் – ஓசை

எழுத்துமுத லாமைந்தி லக்கணமுந் தோய்ந்து

பழுத்த தமிழ்ப்புலமை பாலித்(து) – ஒழுக்கமுடன்

இம்மைப் பிறப்பி லிருவா தனை யகற்றி

மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் – தம்மைவிடுத்(து)

ஆயும் பழைய வடியா ருடன்கூட்டித்

தோயும் பரபோகந் துய்ப்பித்துச் – சேய

கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண்டு

அடியேற்கு முன்னின்று றருள்.

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று

சீரடி – சிறிய திருவடி

மா – பெரிய

இடுக்கண் – துன்பம்

ஆசு முதல் – ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் நான்கு வகை

ஆசு – உடனே பாடுதல். மதுரம் – இனிமை மிக்க செய்யுள் பாடுதல். சித்திரம் – சித்திரத்தில் அடைத்தற்குறியவாறு பாட்டு எழுதல். வித்தாரம் – விரிந்த காவியம் இயற்றுதல்.

அட்டாவதானம் – எட்டு வகைச் செயல்களை ஒரேகாலத்தில் கவனித்தல்.

பல்காப்பியம் – பல காவியங்களின் தொகுப்பும்.

ஓசை – ஓசை இலக்கணம்

எழுத்து முதலாமைந்து – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

பாலித்து – கொடுத்தருளி

இருவாதனை – பெருந்துன்பம்

மும்மை மலம் – ஆணவம், கன்மம், மாயை

மோசித்து – நீக்கி

ஆயும் – அறிவிற் சிறக்கும்

பரபோகம் – பேரின்ப அநுபவம்

துய்ப்பித்து – அநுபவிக்கச் செய்து

கடியேற்கு – கடுமையான குணமுடைய எனக்கு

அருள் – அருள் செய்க!

அழகிய இடுப்பும், சிறிய திருப்பாதங்களும், சிவந்த திருக்கையும், கருணை பொழிகின்ற பன்னிரண்டு திருக்கண்களும், பெரிய ஆறு திருமுகங்களும், ஒளிக்கதிர்களை விரிவாக வீசும் கிரீடங்கள் அணிந்த திருமுடிகள் ஆறும், எந்தத் திக்கிலும், கண்ணெதிரே தெரியும்படி எழுந்தருளி வந்து, துன்பங்களை எல்லாம் தூளாக்கி ஒழித்து, எல்லா வகையான வரங்களும் கொடுத்து அருளி, பல பகுதிகளை உடைய ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் நால்வகைப் பாட்டுக்களைப் பாடும் திறமையும், எட்டு செயல்களை ஒரே காலத்தில் கவனிக்கக்கூடிய சக்தியும், புகழும் பெருமையும் பொருந்திய பலவகைக் காவியங்களின் தொகுதியும், ஒலி இலக்கணமும்,  எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து வகை இலக்கணமும் தெரிந்து தேர்ச்சியுற்ற தமிழ்ப் புலமையும் கொடுத்தருளி, நல் ஒழுக்கத்தியும் தந்து அத்துடன் இப் பிறவியில் உள்ள பெரிய வேதனைகளையும் நீக்கி, பெரிய குற்றங்களுக்குக் காரணமாகிய மூன்று வகைப் பாசங்களையும் ஒழித்து, சுய நலம் கருதாது ஞான நூல்களை ஆராய்கின்ற பழமையான அன்பர்களுடன் என்னைச் சேர்ப்பித்து அவர்கள் அநுபவிக்கின்ற மேலான சிவானந்தத்தை அடியேன் அநுபவிக்கும்படி செய்து, உனக்கு நெடுந்தூரத்தில் உள்ள அன்பில்லாத வன்னெஞ்சமுடைய எனக்கும் உன் அழகிய செந்தாமரை போன்ற திருவடிகளைக் காண்பித்து, ஆட்கொண்டருளி, எனக்கு முன்பாக நின்றருள் செய்வாயாக!

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று