Archive for 'திருப்பாவை'
திருப்பாவை – 27
நாள் இருபத்தேழு – பாடல் இருபத்தேழு கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சன்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவாறக் கூடியிருந்து குளிர்ந்தோலோர் எம்பாவாய். உன்னை கூடி மகிழாது ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வெல்லும் சீரிய கோவிந்தா! இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் [...]
Posted: January 11th, 2010 under திருப்பாவை, பக்தி, வைணவம்.
Comments: none
திருப்பாவை – 26
நாள் இருபத்தாறு – பாடல் இருபத்தாறு மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன போலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்களே போய்ப்பாடுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய். ஊயர்ந்தவனே! மேன்மைமிகுந்தவனே! திருமாலே! நீல நிற மணியின் வண்ணத்தை ஒத்தவனே! மார்கழி நோன்பு நோற்று நீராட வந்த பாவையர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்பாயாகில்…… முழங்கும்போது அகிலத்தை நடுங்கவைக்கும் [...]
Posted: January 11th, 2010 under திருப்பாவை, பக்தி, வைணவம்.
Comments: none
திருப்பாவை – 25
நாள் இருபத்தைந்து – பாடல் இருபத்தைந்து ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தருக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய். வடமதுரையில் தேவகியின் மகனாகப் பிறந்து ஒரு இரவிற்குள்ளாகவே கோகுலத்தில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்தது, அகங்காரத்தினால் கேடு நினைத்த கம்சனுக்கு வயிற்றில் நெருப்புப் போல நின்று [...]
Posted: January 10th, 2010 under திருப்பாவை, பக்தி, வைணவம்.
Comments: none





