Archive for 'வைணவம்'
திருப்பாவை – 30
நாள் முப்பது – பாடல் முப்பது
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்.
இருபத்தொன்பதாம் பாடல் பாவை நோன்பை நிறைவு செய்யும் பாடலாக அமைந்துளது. இப்பாடல் திருப்பாவையை நிறைவு செய்யும் பாடல். இப்பாடல்களைப் பக்தியோடு பாடுவோர் அடையும் நலன்களைச் சொல்கிறது.
இப்பாடல்களைப் பாடும் அனைவருக்கும் திருவருள் கிடைக்கும் [...]
Posted: January 11th, 2010 under திருப்பாவை, பக்தி, வைணவம்.
Comments: none
திருப்பாவை – 29
நாள் இருபத்தொன்பது – பாடல் இருபத்தொன்பது
சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே வோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
இப்பாடலில் பாவை நோன்பின் குறிக்கோளை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள், பாவையர்.
விடியற்காலை வேளையில் வந்து உன்னை வணங்கி உன் பொற்பாதங்களை போற்றிப் பாடும் காரணத்தைக் கூறுகிறோம் கேட்டருள்வாய்.
பசுக்களை மேய்க்கும் இடையர்கள் குலத்தில் [...]
Posted: January 11th, 2010 under திருப்பாவை, பக்தி, வைணவம்.
Comments: none
திருப்பாவை – 28
நாள் இருபத்தெட்டு – பாடல் இருபத்தெட்டு
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
நாங்கள் ஆயர்கள். கன்று பசுக்களுடன் காட்டிற்கு சென்று அவைகளை மேய்த்து, அவைகள் உண்ணும்போது நாங்களும் உண்பவர்கள். அறிவற்றவர்கள். அப்படிப்பட்ட ஆயர் குலத்தில் எங்களுடன் நீ பிறந்திருப்பதனால் நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்கின்றோம்.
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்னுடன் [...]
Posted: January 11th, 2010 under திருப்பாவை, பக்தி, வைணவம்.
Comments: none
