ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

Archive for 'திருவாசகம்'

திருவெம்பாவை – 20

நாள் இருபது – பாடல் இருபது போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். திருவெம்பாவையின் இறுதிப் பாடலாக அமைந்த இருபதாம் பாடலில் எங்களைப் பாதுகாப்பாயாக என்பது பிரார்த்தனையாக அமைகிறது. எல்லா [...]

திருவெம்பாவை – 19

நாள் பத்தொன்பது – பாடல் பத்தொன்பது உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். இப்பாடல் பக்தி வைராக்கியத்தை விளக்குகிறது. பக்தர்களாகிய நாங்கள் பக்தர்களன்றி வேறு எவரோடும் தொடர்புடையவர்கள் ஆக மாட்டோம் என்ற வைராக்கியமே இப்பாடலின் கரு. [...]

திருவெம்பாவை – 18

நாள் பதினெட்டு – பாடல் பதினெட்டு அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித் கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். பெண்ணே! திருவண்ணாமலை யானுடைய தாமரைத் திருவடியில் சென்று வணங்கும் அமரர்கள் முடியில் அணிந்துள்ள இரத்தினங்கள் கதிரவன் எழுந்ததும் விண்மீன்கள் ஒளியிழப்பதைப்போல் சிவனின் திருவடிப் [...]