ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

Archive for 'திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்'

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-1

சிறப்புப் பாயிரம் செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழுங் கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான் – அந்தோ திருமாது சேர்மார்பன் தேர்பாகற் கன்பு தருமால் பகழிக்கூத் தன். திருமாது = இலக்குமி மால் = அழகு, பெருமை இலக்குமியைத் தன் மார்பில் சுமந்திருக்கும் திருமாலே, அருச்சுனனுக்குத் தன் அன்பை ஈந்து தேர் ஓட்டிய பெருமாளே! பகழிக்கூத்தனாகிய நான், திருச் செந்தூரில் வாழும் செந்தமிழுக்கு வாய்த்த கந்தப்பெருமானுக்குப் பிள்ளைத் தமிழ் எழுதியுள்ளேன். அவையடக்கம் அத்தனையும் புன்சொல்லே யானாலும் பாவேந்தர் எந்தனையுங் கண்டுமகிழ்ந் [...]

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-முகவுரை

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் ********************************************* பிள்ளைத்தமிழ் இருவகையாம். இவையாவன: ஆண்பற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ். பிள்ளைத்தமிழில் காப்பு முதல் அம்புலிப்பருவம் ஈறாக ஏழு பருவங்களும் இருபாலருக்கும் ஒன்றே. மற்ற மூன்று பருவங்கள் வேறுபடும். ஆண்பாற் பிள்ளைத்தமிழ் – சிற்றில், சிறுபறை, சிறுதேர் பெண்பாற் பிள்ளைத்தமிழ் – அம்மானை, நீராடல், ஊசல் பிள்ளைப்பருவம் களங்கமற்ற நல்லெண்ணத்தையும் அவ்வெண்ணத்தின் வழியே களங்கமில்லா தூய அன்பையும் விளைவிப்பதாம். இவ்வரிய குணங்களைப் பெற விரும்புவோர் உள்ளத்தைப் பிள்ளத்தமிழ்ப் பாட்டுக்களில் செலுத்தல்வேண்டும். பருவங்கள்: காப்புப் [...]