Archive for 'கந்தர் கலிவெண்பா'
மின் – நூல் – கந்தர் கலிவெண்பா
அன்புடையீர், என் இணைய தளத்தில் வெளிவந்த “கந்தர் கலிவெண்பா” என்னும் பக்தி நூலை மின் – நூலாக்கித் தந்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அதைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது என் முதல் முயற்சி. தவறுகளையும், மேம்படுத்தக் கருத்துக்களையும் njaanam@gmail.com மூலம் அனுப்பவும்.
Posted: May 24th, 2010 under கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி.
Comments: 2
கந்தர் கலிவெண்பா – 32 இறுதிப் பகுதி
கந்தர் கலிவெண்பா – 32 இறுதிப் பகுதி ****************************** 32.திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையும் ஈரா(று) அருள்விழியு மாமுகங்க ளாறும் – விரகிரணம் சிந்தப் புனைந்த திருமுடிக ளோராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண் எல்லாம் பொடிபடுத்தி யெவ்வரமுந் தந்துபுகுந்(து) உல்லாசமாக உளத் திருந்து – பல்விதமாம் ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமுஞ்சீர்ப் பேசுமியல் பல்காப்பி யத்தொகையும் – ஓசை எழுத்துமுத லாமைந்தி லக்கணமுந் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்(து) – ஒழுக்கமுடன் இம்மைப் பிறப்பி லிருவா [...]
Posted: April 13th, 2010 under கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி.
Comments: none
கந்தர் கலிவெண்பா – 31
கந்தர் கலிவெண்பா – 31 ******************** 31.சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றைமணஞ் செய்தோனே – பொய்விரவு காமமுனிந்த கலைமுனிவன் கண்ணரு ளால் வாமமட மானின் வயிற்றுதித்துப் – பூமருவு கானக்குறவர் களிகூரப் பூங்குயில்போல் ஏனற் புனங்காத் தினிதிருந்து – மேன்மைபெறத் தெள்ளித் தினைமாவுந் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கொடியை மணந்தோனே – உள்ளம் உவந்து ஆறுதிருப் பதிகண் டாறெழுத்து மன்பினுடன் கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே – நாறுமலர்க் கந்திப் பொதும்பரெழு சாரலைக்குஞ் சீரலைவாய்ச் செந்திற் பதிபுரக்குஞ் [...]
Posted: April 12th, 2010 under கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி.
Comments: none





