ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

Archive for 'துதி'

வேண்டல் 108

ஓம் அகந்தை அழித்து அருளே ஓம் அச்சம் நீக்கி அருளே ஓம் அஞ்சலென அருளே ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருளே ஓம் அடைக்கலம் தந்து அருளே ஓம் அமருலகு சேர்த்து அருளே ஓம் அடியார் தீவினைகள் தீர்த்து அருளே ஓம் அபயம் அருளே ஓம் அவா அறுத்து அருளே ஓம் அழுக்காறு நீக்கி அருளே ஓம் அழுதவர் கண்ணீர் துடைத்து அருளே ஓம் அறியாமை அகற்றி அருளே ஓம் அன்பும் அறமும் வளர்த்து அருளே ஓம் ஆசு [...]

ஞானம் எட்டி-51

51.அண்டபிண்டபுவனத்துக்கும் சந்திரனொளி ………ஆதித்தவருருவு மானதெங்கே சண்டப்பிரசண்டமதாய் மந்திரமோதுஞ் சவுங்கலே ………..தானறியாய்ச் சாற்றிடுவீர்காண் உண்டதோருணவறியார் உவரசத்தினுப்பு ………….வினுவரகற்றி யுண்டுமறியார் கண்டபொருள் விண்டதறியார் கல்லுப்புவந்த …………..காரணத்தைக் கண்டறியாக் கர்மிகளே கேள். ஆடம்பரமாய் ஏகப்பட்ட சத்தங்கள் செய்து மகாசிறப்புடனே மந்திர உச்சடானஞ் செய்கின்ற அறிவு மழுங்கியோரே! உண்டவுணவை யுணராமலும், உவர்ப்பூமியிலுண்டான உப்பையெடுத்து அதனிடமுள்ள உவர்ப்புச் சுவையை நீக்கி அதை உண்ண அறியாமலும், கண்ணால் கண்ட பொருட்களைச் சொல்ல அறியாமலும் கல்லுப்பு வந்த காரணத்தை அறியாமலுமிருக்கின்ற கர்மிகளே! நீங்கள் அண்ட பிண்ட சராசரங்கள் [...]

ஞானம் எட்டி-33

33.அறுந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ அச்செனும் பாவமது கண்டமட்டும் சிறந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ சித்திரச் சாம்புவ னான்காணும் பரந்தபஞ் சதுநூலாம் இழைபிசகா பறைநூ லதுபஞ்ச வர்ணமதாய் நிரந்தர விசிதமெனும் சிவசிவ நிட்டைதனில் மிகுந்த நிர்மலன் காண். அச்சு – உடல் பாவம் – இயக்கம் மிகுதல் – பூரித்தல் பரந்து விரிக்கப்பட்ட பஞ்சு இழைபிசகா நூலாகும். உள்ளே உடலியக்கம் கண்டு அங்கு அறுந்த நூலாம் வாசியைப் பிணைப்பேன். இஞ்ஞனம் உடலினுள் உயிர்மூச்சைப் பிணைக்கின்ற சாம்புவன் (சுடலை காப்போன், வெட்டியான்) [...]