Archive for 'தமிழமுது'
விவேக சிந்தாமணி – முடிவுரை
விவேக சிந்தாமணி – முடிவுரை அன்புடையீர், இதுகாரும் வெளிவந்த “விவேக சிந்தாமணி” என்னும் வழக்கிழந்த நூல் பாடல்கள் கண்டோம். இதைத் தமிழுக்காகவும், அரிய நீதிக் கருத்துக்களுக்காவும் படித்த அனைவருக்கும் நன்றி. இனி வருவது “சிவவாக்கியர் பாடல்கள்“ம் “பிரபுலிங்க லீலை“யும்.
Posted: April 24th, 2012 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none
செய்யாதே! – விவேக சிந்தாமணி – 2.99
செய்யாதே! விவேக சிந்தாமணி – 2.99 “தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின் ஊன் கெடினு முண்ணார்க்கைத் துண்ணற்க – வான் கவிந்த வையக மெல்லாம் பெறினு முரையற்க பொய்யோ டிடை மிடைந்த சொல்.” ஒருவன் தான் கெட்டுப் போயிருந்தாலும், யோக்கியருக்கு உதவி செய்யவேண்டும்; அவருக்குத் தீங்கு செய்து பொருளைத் தேடுவதால், தனக்கு சுகம் கிடைப்பதாயினும் அங்ஙனம் தீங்கு நினைக்கலாகாது. நல்ல உணவு அகப்படாமல் உடல் மெலிந்தாலும், உண்ணத் தகாதவரிடத்தே உணவு உண்ணலாகாது. பொய் கூறுவதால் பூமி முழுவதுமே [...]
Posted: April 24th, 2012 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none
பொருளாசை – விவேக சிந்தாமணி – 2.98
பொருளாசை விவேக சிந்தாமணி – 2.98 “எவரையும் மனந்திரிப்பது மீன்றவர் தமக்குத் தவறிழைத் திடப் புரிவதுந் தையலார் தங்கள் கவறில் கற்பினை யொழிப்பதுங் கற்கு நூற்கலைகள் அவையெலாங் கெடக் கெடுப்பதும் பொருள் விருப்பன்றே.“ எப்பேர்ப்பட்டவரின் மனத்தையும் இயற்கைக்கு மாறாக மாறுபடச் செய்வதும், பெற்ற தாய் தந்தையருக்கும் தீங்கு இழைத்திடப் புரியும்படி செய்வதும், மங்கையரின் மாறுபாடற்ற கற்பென்னும் மனத் திண்மையை நீக்குவதும், மனிதர் கற்கும் சாத்திரக் கல்விகள் எல்லாம் மாறுபட்டுக் கெடுதல் அடையும்படி அவற்றை நாசப்படுத்துவதும் பொருளின் மீதுள்ள [...]
Posted: April 24th, 2012 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none





