ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'விவேக சிந்தாமணி'

பொருளாசை – விவேக சிந்தாமணி – 2.98

பொருளாசை விவேக சிந்தாமணி – 2.98 “எவரையும் மனந்திரிப்பது மீன்றவர் தமக்குத் தவறிழைத் திடப் புரிவதுந் தையலார் தங்கள் கவறில் கற்பினை யொழிப்பதுங் கற்கு நூற்கலைகள் அவையெலாங் கெடக் கெடுப்பதும் பொருள் விருப்பன்றே.“ எப்பேர்ப்பட்டவரின் மனத்தையும் இயற்கைக்கு மாறாக மாறுபடச் செய்வதும், பெற்ற தாய் தந்தையருக்கும் தீங்கு இழைத்திடப் புரியும்படி செய்வதும், மங்கையரின் மாறுபாடற்ற கற்பென்னும் மனத் திண்மையை நீக்குவதும், மனிதர் கற்கும் சாத்திரக் கல்விகள் எல்லாம் மாறுபட்டுக் கெடுதல் அடையும்படி அவற்றை நாசப்படுத்துவதும் பொருளின் மீதுள்ள [...]

மக்கட் செல்வம் – விவேக சிந்தாமணி – 2.97

மக்கட் செல்வம் விவேக சிந்தாமணி – 2.97 “உந்து நீர்க்கட லுடுத்தபார் முழுவது மொருங்கே வந்து தாடொழு மரசியல் வளமெலாம் பெறினும் இந்தி ராதியர் பெரும்பதத் திருக்கை யெய்திடினும் மைந்த ரின்றியே வாழ்வது வாழ்வுமற் றன்றே.“ கடல் சூழ்ந்த இவ்வுலகில் மனிதர்கள் ஒருங்கே கூடிவந்து வணங்கக்கூடிய ஆட்சி முறையில் சிறப்புக்கள் யாவும் பெறினும், இந்திரன் முதலியோருடன் அமரசபையில் இடம் பெற்றிடினும், புத்திரர்கள் இல்லாத இல்வாழ்க்கையானது சிறந்த இல்வாழ்க்கையாகாது. அதாவது மனிதர்கள் உலகில் எத்தைகைய சிறப்புக்களுடன் வாழ்ந்தாலும், அவருக்கு [...]

எமனும் பிணியும் – விவேக சிந்தாமணி – 2.96

எமனும் பிணியும் விவேக சிந்தாமணி – 2.96 “தன்னுரை கொளாத மனை வாழ்க்கையது தன்னின் வெந்நிரயம் வீழும்வகை யேவிழுமி தம்மா அன்னரொடு மேவியம ராடவர் தமக்குப் பின்னுமொரு கூற்றுமுள தோபிணியு முண்டோ?“ உலகில் ஒருவனுக்குத் தன் சொல் கேட்டு நடக்காத இல்லாளுடன் சேர்ந்து வாழ்வதை விட, கொடிய நரகத்தில் விழுவது சிறந்ததாம். பின்னும் இம்மனைவியை விட அத்தகைய கணவனுக்கு எமனும் உண்டோ? இல்லை, நோயும் உண்டோ?