Siththan.com » விவேக சிந்தாமணி

அன்பற்ற அறுசுவை உண்டி பாழ்
விவேக சிந்தாமணி – 2.58

கெட்டசாறு தவிடுகஞ்சி கிருமியுண்ட மாவறைக்

—–கீரைவேர் தெளிந்தமோர் முறிந்தபாகு கிண்டுமா

இட்டசோறு கொழியலுப் பிடாதபுற்கை யாயினும்

—–எங்குமன்ப தாக நுங்க இன்பமாயிருக்குமே

பட்டபாகு பசுவினெய் பருப்புமுக் கனிக்குழாம்

—–பாளிதங்க டாளிதங்கள் பண்ணி காரவகையுடன்

அட்டபாற் குழம்புகன்ன லமுதமோடு முதவினும்

—–அன்பினோ டளித்திடாத வசனமென்ன வசனமே.

மனதில் அன்பில்லாது ஒருவர் மற்றவருக்கு இடும் சுண்டக்காய்ச்சிய பால், பசுவின் நெய், வேகவைத்த பருப்பு, முக்கனி, குழம்பு வகைகள், தாளித்த உணவு வகைகள், அப்பங்கள், திரட்டுப்பால், சக்கரை, சோறு ஆகியவைகள் நிறைந்த உணவு நிறைவையும் இனிமையையும் உண்டாக்காது.

அங்ஙனமன்றி, அன்புடனே, கெட்ட சோறு, பதங்கெட்ட குழம்பு, அரிசித்தவிடு, நொய்யரிசிக் கஞ்சி, புழு தின்ற கேழ்வரகு முதலிய தானியங்களின் மாவு, அறைக்கீரையின் வேர்(கட்டை), நீர்மோர், கெட்டுப்போன பால், தவிடு நீக்காத அரிசிச் சோறு, உப்புப் போடாத கூழ் ஆகிய உணவினை இட மனங்குளிர்ந்து உண்ணலாம்.

இறைவனை அடையத் துணை யார்?
விவேக சிந்தாமணி – 2.57

அன்பிலா நெஞ்ச மரும்பிணி யெனவு

—–அள்விலாப் பகைநமக் கெனவுந்

துன்பமார் சோக மோகமே முதலாந்

—–துயரெலாம் விளைநில மெனவும்

இன்பவீ டெய்திடற்கிடை யூறா

—–மிருளுமென் றியம்புவார் பெரியோர்

துன்பிலா விறைவர்க் கன்பிலா நெஞ்சே

—–துணையிலை துணையிலை யெனக்கே.

அரும் – தீர்தற்கரிதாகிய

ஆர் – நிறைந்த

சோகம் – சோம்பல்

உலகில் முன்னேறும் வழிகளை உண்மையாக அறிந்த பெரியோர்கள், கடவுளிடத்தே அன்பில்லாத மனமானது தீர்தற்கரிதாகிய நோய் எனவும் நமக்கு அளவற்ற பகை எனவும் இன்னல் மிகுந்த சோம்பல், பெண்ணாசை முதலாகிய துயர் ஆகிய தீவினைகளைப் பயிரிடும் நிலம் எனவும், பேரின்ப மோட்ச வீட்டை அடையத் தடையாகும் எனவும் கூறுவர். ஆகவே துயரை ஒழிக்கும் இறைவனை அடைய அன்பற்ற மனமே எனக்கு நீ துணையில்லை; துணையில்லை. நீ எனக்குத் துணை புரிய வேண்டுமாயின், இறைவனின்பால் பக்தி செலுத்தத் துணை இருப்பாய்.

தலைவைத்துப் படுப்பது எந்த திசையில்?
விவேகசிந்தாமணி – 2-56

இணையிறன திலிலொருவன் கீழ்த்திசையிற்

…..றலைவைக்க வினிய மாமன்

மணிதிகழ்பொன் னெடுமாடத் துறைந்திடிற்றென்

…..றிசையதனில் வைக்க வேண்டும்

அணிபெறுவேற் றூருறையிற் குடதிசையிற்

……சாரவைக்க அடுத்தெப் போதும்

உணர்வின்றி யுத்தரத்தே தலைவைத்துத்

…..துயில்புரித லொண்ணா தாமால்.

இணையில் – ஒப்பற்ற

மணிதிகழ் – இரெத்தினங்கள் பதிக்கப்பட்ட

பொன் – பொன்னால் ஆகிய

நெடு – நீண்ட

அணிபெறு – அழகைப் பெறும்

சார – பொருந்த

உத்தரம் – வடக்கு

ஒரு மனிதன் தன்னுடைய வீட்டில் கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுக்க வேண்டும்.  மாமன் வீட்டில் தெற்குத் திசையிலும்,  வெளியூரில் மேற்குத் திசையிலும் தலை வைத்துப் படுக்க வேண்டும். வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக் கூடாது (ஒரு வேளை காந்த அலைகளால் மூளை பாதிக்கும் என்னும் எண்ணமோ?)

கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுக்க செல்வம் உண்டாகும். தெற்குத் திசையில் தலை வைத்துப் படுக்க ஆயுள் பெருகும்.   மேற்குத் திசையி தலை வைத்துப் படுக்க புகழ் உண்டாகும். அறிவின்றி வடக்கே தலை வைத்துப் படுக்க நோயும் மரணமும் கிட்டும்.

(சும்மா தலை வைத்துப் படுப்பதால் ஒன்றுமே கிடைக்காது)

விருந்தோம்பல்
விவேக சிந்தாமணி – 2.55

விருந்தின னாக வொருவன்வந் தெதிரின்

வியத்தனன் மொழியினி துரைத்தல்

திருந்துற நோக்கல் வருகென வுரைத்த

லெழுதல்முன் மகிழ்வன செப்பல்

பொருந்துமற் றவன்ற னருகுற விருத்தல்

போமெனிற் பின்செல்வ தாதல்

பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பா

னொழுக்கமும் வழிபடும் பண்பே.

ஒருவர் விருந்தினனாக மற்றொருவர் இல்லத்திற்கு வந்து எதிரே நின்றால், அந்த வீட்டுக்குடையவன் விருந்தினர் வரவைப்பற்றி வியப்படைதல், நல்ல  சொற்களைக் கூறுதல், இனிமையாக எடுத்துக் கூறுதல், விருப்பத்துடன் பார்த்தல், வருக வருக என வரவேற்றல், விருந்தினரைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்தல், அவன் எதிரே நின்று மகிழ்ச்சியான செய்திகளைக் கூறல், வந்த விருந்தினருடன் அன்புடன் அருகே அமர்ந்து பேசல், விருந்துண்ட பின் அவர் போய்வருகிறேன் என்றவுடன் அவருடன் சிறிது தொலைவு(வாயில் வரையாகிலும்) சென்று அநுப்பிவிட்டு வருதல் ஆகிய ஒன்பது வகைச் செயல்களையும் உடையனாய் இருத்தல் வேண்டும். இதுவே விருந்தோம்பலின் இலக்கணம் ஆகும்.

வாழ்வைப் பிளக்கும் கோடரி
விவேக சிந்தாமணி – 2.54

கோபத்தாற் கெளசிகன் றவத்தைக் கொட்டினான்

கோபத்தா னகுடனுங் கோல மாற்றினான்

கோபத்தா லிந்திரன் குலிசம் போக்கினான்

கோபத்தா லிறந்தவர் கோடி கோடியே.

கெளசிகன் – விசுவாமித்திரன்

நகுடன் – சந்திர வம்சத்து அரசன்

குலிசம் – வச்சிராயுதம்

விசுவாமித்திரன் கோபப்பட்டு வசிட்டரோடும் இன்னும் மற்றவரிடத்தும் சண்டையிட்டு, சாபமிட்டுத் தான் சேர்த்து வைத்திருந்த தவ வல்லபத்தை(வலிமை) இழந்தான். சந்திர வமிசத்து அரசனான நகுடன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து இந்திர பதவியை அடைந்த பின் முனிவர்களிடம் தன் கோபத்தைக் காட்டியதால் அகத்தியரின் சாபம் பெற்று இந்திர பதவியை இழந்து பாம்பாக மாறிவிட்டான்.  ஒரு காலத்தில் இந்திரன் சினமிகக் கொண்டு உக்கிர பாண்டியரோடு போரிட்டுத் தன் வச்சிராயுதத்தை இழந்தான். இதன்றிக் கோபத்தால் உயிர் இழந்தவர்கள் கணக்கற்றவர்களாம். கோபமே வாழ்வைப் பிளக்கும் கோடரி. துன்பமற்ற  வாழ்வு வாழ கோபத்தை விட்டொழிக்க வேண்டும்.