ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'பிரபுலிங்க லீலை'

பிரபுலிங்க லீலை – 4.1 to 4.5

4. மாயை பூசை கதி ******************** இக்கதியில், மாயை படுக்கையைவிட்டு எழுந்து நீராடுதல், ஆடையணிதல், அணிகலச் சாலைக்குச் செல்லுதல், பலவகையான அணிகலன்களைப் பூணுதல், மதுகைநாதனைப் பூசனை புரியப் பல்லக்கில் புறப்படுதல், அவள் செல்லும் ஆரவாரம், அரிவையர் கூட்டத்தைக் கண்ட ஆடவர்கள் தன்மை, கோயிலடைந்து பூசனை புரிந்து வழிபடல், இறைவன் முன்னிலையில் தேவர்களும் வியக்கும்படியாகத் திருக்கூத்து ஆடல், ஆகிய செய்திகள் விரிவாகக் கூறப்படுகின்றன. பிரபுலிங்க லீலை – 4.1 ********************** 4.1 பதியை மேவுறுங் காதல்நெஞ் சகத்தினுட் பதித்து [...]

பிரபுலிங்க லீலை – 3.71 to 3.74

பிரபுலிங்க லீலை – 3.71 ********************** சங்கரனே மாயைக்குத் தலைவன் என்று குரு கூறுதல் 3.71 கொங்கவிழ் தொடையினாய் கூன்கொக் கன்றுவான் கங்கையை யடைவது கடவு ளன்னமே மங்கையை யணைபவர் மனித ரல்லர்நம் சங்கர னேயிவள் தலைவ னென்றனன். தொடையினாய் – மாலை புனைந்தவனே. கூன் – வளைவு, வான் – உயர்வினையுடைய, சங்கரன் – இன்பத்தைச் செய்பவன். கொங்கவிழ் மாலையுடையவனே! கொக்கு கங்கையை அடையாது; அன்னம்தான் கங்கையை அடையும். மாயையை மணக்கப் போவது மனிதர் இல்லை; [...]

பிரபுலிங்க லீலை – 3.66 to 3.70

பிரபுலிங்க லீலை – 3.66 ********************** மமகாரமன்னன் தன் குரு வரக்கண்டு வணங்கல் 3.66 ஆய்ந்திருந் தனன்மம கார னாயிடைப் போந்தன னவன்குரு வாகப் போற்றுறும் சாந்தவாங் காரனாந் தகுதிப் பேரினோன் வேந்தனு மெதிர்கொளீஇ விதியில் தாழ்ந்தனன். ஆய்ந்திருந்தனன் – எண்ணியிருந்தான், ஆஇடை – அவ்விடத்து, போந்தனன் – வந்தான், தகுதிப் பேரினான் – தகுந்த பெயரை யுடையவன், எதிர்கொளீஇ – எதிர்கொண்டு, விதியில் – முறைப்படி. இவ்வாறு யாருக்கு மாயையை மணமுடிப்பது என எண்ணியிருக்கும் வேளையிலே [...]