Siththan.com » பிரபுலிங்க லீலை

பிரபுலிங்க லீலை – 4.6 to 4.10
பிரபுலிங்க லீலை – 4.6

சடை பின்னிவிடுதல்

4.6 மார வேள்சிலை வளைந்திடப் பூட்டிய வண்டு

நாரி யோர்தலை நெகிழ்த் துவிட் டெனவொரு நாரி

கார வாமலர்க் குழற்சடை கைபுனைந் தியற்றி

வீர வேனெடுங் கண்ணிதன் முதுகுற விடுத்தாள்

சிலை – வில்.

நாரி – நாணி.

ஓர் தலை – ஒரு பக்கம்.

நெகிழ்த்து விட்டென – சுழற்றிவிட்டாற் போன்ற.

ஒரு நாரி – ஒரு வண்ண மகள்.

கார் அவாம் – முகிலும் விரும்புகின்ற.

முதுகுஉற – முதுகில் தொங்க.

காமன் மலர் அம்பு பூட்டி விடும்போது மலரில் உள்ள வண்டு ஒரு புறம் சாய்ந்து கிடப்பதுபோல் மாயையின் சடை உள்ளதாம். அச்சடையை ஒரு பெண் தோழி கையால் பின்னிப் புனைகிறாள். வீரவேல் போன்ற நெடுங் கண்களையுடைய மாயை அதை முதுகில் தொங்க விடுகிறாள்.

பிரபுலிங்க லீலை – 4.7

நெற்றியில் திருவும் பிறையும் அணிதல்

4.7 பின்னும் வேணிவார் குழலெனுங் கரியபே ரரவம்

முன்ன மார்தரு சுடர்களை உமிழ்ந்திடு முறைபோல்

கன்னி வாணுதல் மிசைக்கதிர் பிறையோடு கவினப்

பொன்ன வாஞ்சுணங் கவிர்முலை ஒருத்திகை புனைந்தாள்.

வேணி – சடை

கரிய பேர் அரவம் – கரிய பெரிய பாம்பு.

ஆர்தரு – விழுங்கிய.

சுடர்களை – ஞாயிறு திங்கள்களை.

உமிழ்ந்திடு – கக்கிய.

வாள்நுதல் – ஒளிபொருந்திய நெற்றி.

கவின – அழகு செய்ய.

பொன் அவாம் – பொன்னும் விரும்பும்.

சுணங்கு – தேமல்.

பின்னால் தொங்கும் சடை கரும்பாம்பு போலவும், நெற்றியில் அணிந்த திருவும் பிறையும் ஆகிய அணிகள் அப்பாம்பு முன்னம் ஒருமுறை உண்டு இப்பொழுது உமிழ்ந்த சூரியன் சந்திரன் போலவும் தோன்றின.  பின்னும் மாயையை அழகுசெய்யப் பொன்னும் விரும்பும் தேமலுள்ள கொங்கையை ஒருத்தி அழகுசெய்தாள்.

பிரபுலிங்க லீலை – 4.8

மாணிக்கச் சுட்டி அணிதல்

4.8 ஓதி யாகிய அறல்மிசைச் சுவடுற வூர்ந்து

தீதி லாதவொண் சந்தனத் திலகவெண் மதிக்குப்

போது மோர்சிறு பாம்பென மயிர்வகிர்ப் பொருந்தச்

சோதி மாமணிச் சுட்டியொன் றொருத்திதூக் கினளால்.

ஓதி – கூந்தல்.

அறல் – கருமணல்.

சுவடு – வடு.

ஒள் – ஒள்ளிய.

திலகவெண்மதி – பொட்டாகிய வெள்ளி திங்கள்.

போதும் – செல்லும்.

மயிர்வகிர் – மயிரை வகிர்ந்த இடம், (உச்சி).

தூக்கினள் – தொங்கவிட்டாள்.

நெற்றிச் சுட்டியைச் சிறு பாம்பாகவும், திலகத்தைச் சந்திரனாகவும், அச்சந்திரனைப் பற்றுதற்காக உச்சி வகிடாகிய அப்பாம்பு கூந்தலாகிய கருமணல் வழியூர்ந்து வந்ததாகவும், உருவகித்தார். மாயையின் உச்சி வகிர்ந்து அதில் மணிகள் பதிக்கப்பெற்ற சுட்டியை ஒருத்தி அணிவித்தாள்.

பிரபுலிங்க லீலை – 4.9

காதிற் குவளைமலர் அணிதல்

4.9 வேன லம்பதி கொலைவிட மூட்டிய வெவ்வேல்

மான அஞ்சனம் எழுதிய விழிபொர வரலால்

தான தன்பகை தனைத்துணை கொண்டுறுந் தகைபோல்

பான லஞ்செவி மிசையணிந் தனளொரு பாவை.

வேனல் அம்பதி – வேனிற் காலத்திற்குத் தலைவனாகிய அழகிய காமன்.  மான – ஒப்பாக.

அஞ்சனம் – மை.

பொர – போர் செய்ய.

தகைபோல் – தன்மைபோல்.

பானல் – கருங்குவளை.

பாவை – பெண். ஆகுபெயர்.

வேனிற் காலத்திற்குத் தலைவனாகிய அழகிய காமன் தொடுத்த வேல்போன்ற மையெழுதிய கண்ணுடைய மாயையின் செவிமீது குவளை மலரை அணிவித்தாள் மற்றொருத்தி.

குவளை மலர் கண்போறலின் கண்ணுக்குப் பகையாகவும், கண்கள் காதளவும் நீண்டு செல்லுதால் விழி போர் புரிய வருவதாகவுங் கூறினார்.

செவிமேல் நீலமலரை யணிந்தது தன்மேற் போர்செய்ய வரும் விழிகளுக்கு அஞ்சி அவ்விழிகளுக்குப் பகையாகிய நீலமலரைத் துணைச் சேர்த்துக் கொண்டிருப்பதுபோலத் தோன்றியது.

பிரபுலிங்க லீலை – 4.10

காதில் பொன்னோலைச் சுருளணிதல்

4.10 அடுத்து மாதவம் அழிமினென் றனங்கவேள் தமக்கு

விடுத்த வோலையைக் கண்கள்தம் மேற்பழி விளம்பில்

கொடுத்த வேள்மிசை நிந்தைகூ றுதற்குவைத் திருத்தல்

கடுத்து வாழ்தர ஒருத்திபொன் னோலைகா தணிந்தாள்.

அடுத்து – போய்.

அனங்கவேள் – காமன்.

விடுத்த ஓலை – அனுப்பிய வோலை.

பழிவிளம்பில் – நிந்தை கூறினால்.

கடுத்த – ஒத்து.

வாழ்தர – தோன்றும்படி.

மாயை கண்கள் மாதவத்தை யழிக்கும் ஆற்றலுடையன. ஆதலால் காமன் கண்களுக்குத் தனை ஆணை பொறித்த ஓலையனுப்பியதாகக் கூறினார்.

முனிவர்கள் தவத்தை அழிக்குமாறு காமவேள் தமக்கனுப்பிய ஓலையைக் கண்கள் தம்மேற் பழிச்சொல் வந்தால் எடுத்துக் காட்டிப் பழியைக் காமன் மீது போடுமாறு காதுகளிலே செருகி அணிவித்தாள் ஒருத்தி.

பிரபுலிங்க லீலை – 4.1 to 4.5
4. மாயை பூசை கதி

இக்கதியில், மாயை படுக்கையைவிட்டு எழுந்து நீராடுதல், ஆடையணிதல், அணிகலச் சாலைக்குச் செல்லுதல், பலவகையான அணிகலன்களைப் பூணுதல், மதுகைநாதனைப் பூசனை புரியப் பல்லக்கில் புறப்படுதல், அவள் செல்லும் ஆரவாரம், அரிவையர் கூட்டத்தைக் கண்ட ஆடவர்கள் தன்மை, கோயிலடைந்து பூசனை புரிந்து வழிபடல், இறைவன் முன்னிலையில் தேவர்களும் வியக்கும்படியாகத் திருக்கூத்து ஆடல், ஆகிய செய்திகள் விரிவாகக் கூறப்படுகின்றன.

பிரபுலிங்க லீலை – 4.1

4.1 பதியை மேவுறுங் காதல்நெஞ் சகத்தினுட் பதித்து

மதுகை நாதனை வரன்முறை வரிவிழி மாயை

உதய காலையில் பூசைசெய் நாள்களு ளொருநாள்

விதியை யோதுவன் குவிமனத் தவர்கொள விரித்து.

பதியை – தலைவனை,

பதித்து – அமைத்து,

வரன் முறை – விதிப்படி,

வரி – கோடு,

குவிமனத்தவர் – குவிந்த மனத்தினே யுடையவர், குவி, விரிந்து இது முரண்தொடை.

தலைவனைத் தன் காதல் நெஞ்சிலே பதித்து விதிப்படி வரி ஓடிய விழிகளை உடைய மாயை சூரிய உதயத்தில் பூசை செய்யும் நாட்களில் ஒருநாள் குவிந்த மனத்தினை உடையவர் கேட்க விதியை விரிவாக ஓதுவான்.

பிரபுலிங்க லீலை – 4.2

கதிரோன் எழுதுல்

4.2 விதுவைச் சேய்மையிற் கண்டலர் குவளைகள் மெலிய

முதிர்விற் பூணிள முலையெழில் மாயைதன் முகமாம்

மதியைச் சேர்தரு வரிக்கருங் குவளைகண் மலரக்

குதிரைத் தேரவன் எழுந்தனன் குணதிசைக் குன்றில்

விது – திங்கள்,

சேய்மை – தூரம்,

அலர் – மலர்ந்த,

முதிர் வில்பூண் – மிகுந்த ஒளியையுடைய அணிகலம்,

குணதிசைக் குன்று – கீழ்த்திக்கில் ஞாயிறு தோன்றும் மலை.

சந்திரனை அருகில் கண்ட குவளை மலர்கள் மலர்ந்தன. முதிர்வடையாத முலைஎழிலை உடைய மாயை தன்னுடைய மதிமுகத்தில் உள்ள குவளைக் கண்கள் மலர குதிரைத் தேரையுடைய கதிரவன் கிழக்கே உதித்தான்.

பிரபுலிங்க லீலை – 4.3

மாயை படுக்கையை விட்டு எழுந்து நீராடுதல்

4.3 அனைய காலையில் அன்னமென் தூவிபெய் யணைமேல்

தனியண் மமாயில் போல்துயின் றவள் துயில் தணந்து

வினையி னான்மலி மஞ்சனச் சாலையுள் மேவி

இனிய வாசநீ ராடினள் சேடிய ரேந்த.

அனைய காலையில் – அந்தக் காலைப்பொழுதில்,

தூவி – இறகு,

துயில் தணந்து – உறக்கம் நீங்கி,

வினையினால்மலி – தொழிற்பாட்டினாற் சிறந்த,

மஞ்சனச் சாலை – நீராடும் இடம்,

சேடியர் – தோழிப் பெண்கள்.

அக்காலைப் பொழுதிலே, அன்னத்தின் சிறகுகொண்டு செய்யப்பட்ட படுக்கையில் தனியாக மயில்போல் தூங்கிக்கொண்டிருந்த மாயை, துயில் எழுந்து நீராட்டும் கலையில் வல்லவர்கள் நிறைந்த நீராடுமிடத்துக்குச் சென்று, தோழிகள் ஏந்த வாசமிகு நீரில் நீராடினாள்.

பிரபுலிங்க லீலை – 4.4

ஆடையணிதல்

4.4 விலைவ ரம்பறி யாமணிக் கோவைசூழ் விளிம்பு

கலைய ணிந்தொரு தலைமுலை மேலலங் கரித்தாள்

முலையொ டுந்துகில் கண்டநாள் முதல்தொடர்ந் தன்றோ

இலகு றுங்கலை வல்லவர் கடபடா மென்றல்

விலை வரம்பு – விலையின் எல்லை,

மணிக்கோவை – மணிமாலை,

சூழ் – சூழ்ந்துள்ள,

விளிம்பு – கரை,

கலை – ஆடை,

ஒருதலை – அவ்வாடையின் ஒரு தலைப்பை,

இலகுறும் – விளக்குகின்ற,

கலை வல்லவர் – அறிஞர்.

விலை என்ன என சொல்ல முடியாத மணிகள் கோர்த்த கரையை உடைய துகிலை எடுத்து அதன் ஒரு முனையைத் தன் மார்பகத்தைப் பொத்தினாள். அது கண்ட நாள் முதல் புலவர்கள் கடபடாம் என்று பாட ஆரம்பித்தனர்.

கடபடாம் – குடமும் ஆடையும், கடபடாமென்ற எடுத்துக்காட்டிக் கூறுதல் அறிஞர் வழக்கு.  கடம் – குடம், இது முலையையுணர்த்தியது.

பிரபுலிங்க லீலை – 4.5

அணிகலன்கள் பூணுமிடத்தை அடைதல்

4.5 மணிய மைந்தபொற் பாதுகை யொருத்திமுன் வைப்பப்

பிணிய விழ்ந்தசெந் தாமரைப் பதங்கொடு பெயர்ந்தே

அணிய ணிந்திடும் மண்டபத் தணைமிசை யமர்ந்தாள்

பணிய ணிந்திடு மங்கைய ரடைந்தனர் பலரே.

பாதுகை – மிதியடி.

பிணி அவிழ்ந்த – கட்டு விரிந்த.

அணி – அணிகலன்.

அணைமிசை – இருக்கைமீது.

பணி அணிந்திடு – அணிகலன் பூட்டிவிடுகின்ற.

மணிகள் பதிக்கப்பட்ட பொன்னாலாகிய மிதியடி ஒருத்தி முன்னே வைக்க, கட்டவிழ்ந்த செந்தாமரைப் பாதத்தில் அணிந்து அணிஅணிந்திடும் மண்டபத்தின் இருக்கையில் அமர்ந்தாள், மாயை. ஒவ்வோர் அணி பூட்டுவதில் ஒவ்வொருவர் சிறந்தவராக இருப்பதால் பலர் அடைந்தனர் என்றார்.

பிரபுலிங்க லீலை – 3.71 to 3.74
பிரபுலிங்க லீலை – 3.71

சங்கரனே மாயைக்குத் தலைவன் என்று குரு கூறுதல்

3.71 கொங்கவிழ் தொடையினாய் கூன்கொக் கன்றுவான்

கங்கையை யடைவது கடவு ளன்னமே

மங்கையை யணைபவர் மனித ரல்லர்நம்

சங்கர னேயிவள் தலைவ னென்றனன்.

தொடையினாய் – மாலை புனைந்தவனே.

கூன் – வளைவு,

வான் – உயர்வினையுடைய,

சங்கரன் – இன்பத்தைச் செய்பவன்.

கொங்கவிழ் மாலையுடையவனே! கொக்கு கங்கையை அடையாது; அன்னம்தான் கங்கையை அடையும். மாயையை மணக்கப் போவது மனிதர் இல்லை; நம் இறைவன் சங்கரனே இவள் தலைவன் என்றான்.

அன்னம் கங்கையையடைவது போல இவளை அணையும் தலைவன் சங்கரன் என்றனன்.

பிரபுலிங்க லீலை – 3.72

இறைவன் இவளுக்கு எளியனோ எனல்

3.72 மாலுநான் முகனுநா டரிய வள்ளலிவ்

வேலவார் குழலினாட் கெளிய னோவென

ஆலமார் மிடற்றினோ னன்பர் வேண்டிய

கோலமாய் நணுகுமீ துண்மைக் கூற்றென்றான்.

மால் – திருமால்,

ஏலவார் குழலினாள் – மயிர்ச்சாந்துப் பூசப்பெற்ற கூந்தலையுடையவள், ஆலம் – நஞ்சு,

மிடறு – கண்டம்,

கோலம் – வடிவம்,

நணுகும் – சேருவன்,

ஈது – இது.

திருமால், பிரமன் ஆகியோரும் நாட முடியாத வள்ளல் சிவன். மயிர்ச்சாந்துப் பூசப்பெற்ற கூந்தலையுடைய நம் மாயைக்கு எளிதாகக் கிடைப்பானோ? நஞ்சு உட்கொண்டதால் நீல நிறமுடைய கழுத்தை உடைய சிவன் அன்பர்கள் வேண்டிய வடிவம் கொண்டு காட்சி கொடுப்பான். இது உண்மைக் கூற்றே!

பிரபுலிங்க லீலை – 3.73

குரு, மாயைக்கு இறை வழிபாட்டு முறையை உணர்த்தல்

3.73 இன்னணம் அரசனோ டியம்பி மாயையாம்

கன்னியை விளித்தவள் கருத்தி ணங்குறச்

செந்நிலை தனையுப தேசித் தேகினான்

தன்னிகர் குருபரன் தனதி டத்தரோ.

இன்னணம் – இவ்வாறு,

விளித்து – அழைத்து,

செந்நிலை – செம்மையான வழிபாட்டு முறை,

உபதேசித்து – கூறி,

தன்னிகர் – தனக்குத் தானே நிகராகிய.

அகங்காரனாகிய குரு, இப்படியாக அரசனிடம் கூறி மாயையாம் கன்னியை அழைத்து அவள் கருத்தை இணங்கச் செய்து, செம்மையான வழிபாட்டு முறைதனை உபதேசித்துத் தன் இடத்துக்குச் சென்றான்.

பிரபுலிங்க லீலை – 3.74

மாயை, மதுகை நாதனை வழிபடல்

3.74 குருவருள் மொழிநெறி கொண்டு மாயைதான்

வரவன வசைநகர் மதுகை நாதனைப்

பரவினள் அருச்சனை பயின்று பூசனைக்

கருவிகள் முழுவதுங் கடைப்பி டித்தரோ.

வர – மேலான,

பரவினள் – வழிபட்டாள்,

பூசனைக் கருவிகள் – பூசனைக்கு வேண்டிய பொருள்கள்,

கடைப்பிடித்து – தேடிக்கொண்டு,

மதுகைநாதன் – மதுகேசுரன், இது அந்நகர் ஈசன் பெயர்.

மாயை, குரு அருள் மொழி வழிகாட்டியபடி, மேலான வனவசை மாநகர் வாழும் மதுகை நாதனாம் சிவனை, பூசனைக் கருவிகள் அனைத்தும் கொண்டு அருச்சனை புரிந்து முறைப்படி வழிபட்டாள்.

மூன்றாவது மாயையின் உற்பத்தி கதி முடிந்தது.

பிரபுலிங்க லீலை – 3.66 to 3.70
பிரபுலிங்க லீலை – 3.66

மமகாரமன்னன் தன் குரு வரக்கண்டு வணங்கல்

3.66 ஆய்ந்திருந் தனன்மம கார னாயிடைப்

போந்தன னவன்குரு வாகப் போற்றுறும்

சாந்தவாங் காரனாந் தகுதிப் பேரினோன்

வேந்தனு மெதிர்கொளீஇ விதியில் தாழ்ந்தனன்.

ஆய்ந்திருந்தனன் – எண்ணியிருந்தான்,

ஆஇடை – அவ்விடத்து,

போந்தனன் – வந்தான்,

தகுதிப் பேரினான் – தகுந்த பெயரை யுடையவன்,

எதிர்கொளீஇ – எதிர்கொண்டு,

விதியில் – முறைப்படி.

இவ்வாறு யாருக்கு மாயையை மணமுடிப்பது என எண்ணியிருக்கும் வேளையிலே அவ்விடத்தே மமகாரனின் குருவாம் அகங்காரன் வந்தான். அரசனும் முறைப்படி எதிர்கொண்டு தாழ்ந்து வணங்கினான்.

பிரபுலிங்க லீலை – 3.67

அகங்காரன் மாயையைக் காண்டல்

3.67 மன்னவன் வந்தன மரபிற் கொண்டவன்

கன்னித னெழில்நலங் காணப் போயினான்

அன்னவ ளெதிர்நடந் தாரியன் றனைச்

சென்னியின் வணங்குபு சிறப்புச் செய்தனள்.

வந்தனம் – வழிபாடு,

கன்னி – மாயை,

அன்னவள் – மாயையாகிய அவள்,

ஆரியன்றனை – ஆசிரியனை,

வணங்குபு – வணங்கி.

மன்னன் முறைப்படி வழிபாடு செய்தபின் கன்னியாம் மாயையைக் காணப் போயினான். அந்த மாயை ஆசிரியனின் எதிரே வந்து தலைதாழ்த்தி வணங்கிச் சிறப்பு அளித்தனள்.

பிரபுலிங்க லீலை – 3.68

மாயையைக் காரணமாதென ஆங்காரன் அறிதல்

3.68 மாந்தளிர் ஆலிலை வயங்கு கோங்கரும்

பேந்தெழில் மரைமல ரெய்தி யற்புதப்

பூந்துணர் வல்லிநேர் பொன்னைக் கண்டவன்

ஓர்ந்தனன் காரண மாதென் றுன்னியே.

வயங்கு – விளங்குகின்ற,

ஏந்து – மிகுந்த அழகு,

பூந்துணர் – பூங்கொத்து,

பொன்னை – திருமகள் போன்றவளை,

ஓர்ந்தனன் – உணர்ந்தனன்,

காரணமாது – ஒரு காரணம் பற்றி உலகில் தோன்றியவள்,

உன்னி – நினைத்து,

மாந்தளிர் – கை,

ஆலிலை – வயிறு,

கோங்கரும்பு – கொங்கை,

மரைமலர் – முகம்,

வல்லி – கொடி,மாயை

மாந்தளிர், ஆலிலை, கோங்கரும்பு, தாமரை மலர் இவற்றை ஒன்றாகக் கட்டிய பூங்கொத்துப் போன்ற உடலுடைய திருமகள் போன்ற மாயையைக் கண்டவுடன் அகங்காரன் காரணம் யாதென்று உணர்ந்தான்.

மாந்தளிர், ஆலிலை, கோங்கரும்பு, தாமரை மலர் இவற்றை எய்திய பூந்துணர் வல்லியொத்த பொன்.  வல்லி – கொடி.  வேறுபட்ட தளிர் இலை யரும்பு மலர் தாங்கியதால் அற்புதக் கொடி என்றார்.

பிரபுலிங்க லீலை – 3.69

குரு, உன் மகளுக்கு மணவாளன் யாவன்?, என்று அரசனைக் கேட்டல்

3.69 மாதுரு வுறுகுறி மதித்த றிந்தவன்

ஆதர வொடுமுடி யரசை நோக்கிநின்

கோதையை யார்கொலோ தோளிற் கொள்பவர்

ஓதுக என்றலும் உரைத்தல் மேயினான்.

மாது உரு உறுகுறி – மாயையினது வடிவத்திலுள்ள குறியை,

மதித்து அறிந்தவன் – நன்றாக உணர்ந்தவன்,

ஆதரவு – அன்பு,

கோதை – பெண்,

தோளில் கொள்பவர் – மணப்பவர்,

உரைத்தல் மேயினான் – கூறிலானான்.

அகங்காரனாகிய குரு, கன்னி உருவில் உள்ள மாயையை நன்றாக உணர்ந்தவன். அவன் ஆதரவுடன் மமகாரனை நோக்கி உன் மகளை மணக்க வல்லவன் யார் எனக் கூறுக என்றான்.

பிரபுலிங்க லீலை – 3.70

நான் அறியேன் நீயே கூறுக, என்று அரசன் கூறல்

3.70 உணர்ந்திலன் அடியனே னொருநங் கோதைதன்

மணந்தனக் குரியவர் மனிதர் வானவர்

கணங்களு ளொருவரைக் கருத்தில் தேர்ந்துநீ

இணங்குற எனக்கிவண் இயம்பு கென்றனன்.

ஒரு – ஒப்பற்ற,

கணங்களுள் – கூட்டத்தில்,

தேர்ந்து – தெரிந்து,

இணங்கு உற – பொருந்த,

இவண் – இங்கே,

இயம்புக – சொல்க.

மமகாரன், நான் உணரவில்லை; ஆகவே, நம் மகள் மணப்பதிற்கு உரிய மணமகனை, மனிதர், வானவர் ஆகியோர் கூட்டத்தில் இருந்து ஒரு மணமகனைத் தேர்ந்தெடுத்து இங்கே எனக்குச் சொல்வீராக என்றான்.

பிரபுலிங்க லீலை – 3.61 to 3.65
பிரபுலிங்க லீலை – 3.61

பாடி ஆடுதல்

3.61 அங்கொரு மடவர லதிர்ப்பத் தண்ணுமை

மங்கையர் சிலரிசை மரபிற் பாடுறக்

கொங்கவிழ் மலரளி குமுறத் தென்றலால்

பைங்கொடி யசைதல்போற் பாடி யாடியும்.

மடவரல் – மங்கை,

தண்ணுமை – மத்தளம்,

அதிர்ப்ப – முழக்க,

மரபில் – முறைப்படி,

கொங்கு அவிழ் – மணம் விரிந்த,

குமுற – ஒலிசெய்ய.

அங்கொரு மங்கை மத்தளத்தை ஒலிக்கவும், மங்கையர் சிலர் மரபுக்கேற்றவாறு இசை இசைக்கவும் மணம் விரிந்த மலர்கள் தென்றலால் ஆடி அசைந்து ஒலி எழுப்பவும், மாயை கொடி அசைவது போலப் பாடி ஆடினாள்.

பிரபுலிங்க லீலை – 3.62

பந்தடித்தல்

3.62 வருமுலை யிறைக்கிணை யாக வந்துறக்

கரமெனும் ஏவலன் புடைக்குங் காட்சிபோல்

விரைமல ரோதிமேல் மிஞிறி ரைந்தெழப்

பருமணி குயின்றமென் பந்த டித்துமே.

வருமுலை இறைக்கு – வளருகின்ற முலையாகிய அரசனுக்கு,

கரம் எனும் ஏவலன் – கையாகிய வேலையாள்,

புடைகடகுங் காட்சிபோல் – அடித்து விரட்டுந் தோற்றம்போல்,

விரை – மணம்,

ஓதி – கூந்தல்,

மிஞிறு – வண்டு,

பருமணி குயின்ற – பெருத்த மணிகள் பதித்துச் செய்யப்பட்ட.

வளரும் முலையாகிய அரசனுக்கு வேலையாளான கை அடித்து விரட்டும் தோற்றம்போல், வண்டுகள் மொய்க்கும் மணம் வீசும் மலர் சூடிய கூந்தலையுடைய மாயை வடிவில் பெருத்த மணிகள் பொருத்தப் பட்ட பந்தை அடித்து விளையாடினாள்.

பந்து கொங்கை போலிருந்தமையின், கொங்கையின் வேலையாளாகிய கை அதனை அடித்து விரட்டுதல் போலப் பந்தடிக்குந் தோற்றம் இருந்தது.

பிரபுலிங்க லீலை – 3.63

மாலை புனைதல் முதலியன

3.63 பூந்தொடை வார்குழல் புனைந்து நல்விரைச்

சாந்தமும் நானமும் தயங்கப் பூசியும்

ஏந்திழை பலவுறுப் பிசையத் தாங்கியும்

மாந்துறு சுவைபல வகைய மாந்தியும்

வார்குழல் – நெடிய கூந்தல்,

விரை – மணம்,

நானம் – கத்தூரி,

தயங்க – விளங்க,

இழை – அணிகலன்,

மாந்துறு – உண்ணுதற்குரிய,

மாந்தியும் – உண்டும்.

பூவைப்போல உள்ள தொடையைத் தொடுமளவிற்கு வளர்ந்த நெடிய கூந்தல் முடித்து, நல்ல மணம் வீசும் கத்தூரியை விளங்கப் பூசியும், மாயையின் பல உறுப்புக்களும் ஒன்றோடொன்று உரசிப் பிசையவும், உண்ணுதற்குறிய சுவையுடைய உணவு பலவற்றை உண்டும்….

பிரபுலிங்க லீலை – 3.64

கிளி வளர்த்துப் பேசப் பழக்குதல்

3.64 தீங்கனி பாலொடு செம்பொற் பஞ்சரம்

தாங்குறு பைங்கிளி ஊட்டித் தன்மொழி

ஆங்கது பயில்வுற அளித்துங் கற்பகப்

பூங்கொடி யனையவள் பொழுது போக்குநாள்.

பஞ்சரம் – கூடு,

தாங்குறு – தாங்கியுள்ள.

பயில்வுற – கற்கும்படி,

அளித்தும் – பேசுமாறு கற்றுக் கொடுத்தும்.

செம்பொன்னால் செய்த கூட்டில் அடைத்து வைத்துள்ள பைங்கிளிக்குப் பால் பழம் கொடுத்து தான் பேசுவதுபோல் பேசப் பயில்வித்துக் கற்பகப் பூங்கொடி போன்ற மாயை பொழுது போக்கும் நாள்.

பிரபுலிங்க லீலை – 3.65

மமகாரமன்னன் தன்மகள் திருமணங்குறித்து எண்ணுதல்

3.65 தென்னவன் செம்பியன் சேரன் கொங்கண

மன்னவன் மாளுவன் மகத நாட்டிறை

என்னுமிங் கிவர்தமுள் யாவர் கண்ணதோ

கன்னிதன் மணவினைக் கடனென் றுன்னியே.

தென்னவன் – பாண்டின்,

செம்பியன் – சோழன்,

யாவர் கண்ணதோ – எவரிடத்தோ,

மணவினைக்கடன் – திருமணச் செயல்.

உன்னி – நினைத்து.

பாண்டியன், சோழன், கொங்கண மன்னன், மாளுவன், மகத நாட்டரசன் என்னும் மன்னர்களில் யார் மாயைக்கு ஏற்றவர் என்று மமகாரன் எண்ணினான்.