Archive for 'பழமொழி நானூறு'
பழமொழி 400 – 5.37
பழமொழி 400 – 5.37 ************************* தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார் செந்நடை சேராச் சிறியார்போ லாகாது நின்நடை யானேநட அத்தா! நின்னடை நின்நின்று அறிகிற்பார் இல். அப்பனே! உனது ஒழுக்கத்தை நீயே அறிவாய்; ஆகவே உன்னிடத்திலிருந்து மற்றவர் அறியமாட்டார். தமது ஒழுக்கத்தை ஆராய்ந்து அறியாமலும், தது சுற்றத்தோர் ஒழுகிவந்த வராற்றையும் அறிய மாட்டாமல் செம்மையாகிய நடைமுறை ஒழுக்கத்தில் ஒழுகாத அறிவில் சிறியர் போல் ஒழுகாது, உனக்கு விதிக்கப்பட்ட உன் குடிக்கேற்ப ஒழுக்கத்தின்படி ஒழுகக் கடவாய். பழமொழி [...]
Posted: May 27th, 2010 under தமிழமுது, பழமொழி நானூறு.
Comments: none
பழமொழி 400 – 5.36
பழமொழி 400 – 5.36 ************************** கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல் எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் – தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு. தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாட்டை உடையவனே! பார்ப்பனரும் நாய் கவ்வியதாயினும் உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர். அது போல கள்ளியிடம் பிறக்கும் அகிலையும், கருப்பு நிறக் காக்கையின் சொல்லையும், அது பிறந்த இடம் நோக்கி இகழாமல் உயர்வாகக் கொள்ளுமாறு போல, அறிவில் கீழாயினார் [...]
Posted: May 16th, 2010 under தமிழமுது, பழமொழி நானூறு.
Comments: none
பழமொழி 400 – 5.35
பழமொழி 400 – 5.35 ************************** விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார் ஒழுக்(கு) உடையர் ஆகி ஒழுகல் – பழத்தெங்கு செய்த்தலை வீழும் புனலூரா! அஃதன்றோ நெய்த்தலைப்பால் உக்கு விடல். தெங்கம் பழம் வயலில் விழுகின்ற நீர் நிறைந்த மருத நிலத் தலைவனே! புகழால் பெருமை பெற்று வாழ்ந்து வந்த குடியில் பிறந்தார், தத்தமக்கு உரிய நல்லொழுக்கத்தினை உடையராகி குடிக்கேற்ப வாழுதல் பசுவின் நெய்யில் பசும் பாலை ஊற்றியதுபோல் இனிமை பயக்குமன்றோ? தங்குடிக்கு ஏற்ப நல்லொழுக்கத்தினனாய் வாழுதல் [...]
Posted: May 7th, 2010 under தமிழமுது, பழமொழி நானூறு.
Comments: none





