Siththan.com » பழமொழி நானூறு

பழி வேண்டாம்
பழமொழி 400 – 5.40

கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை

முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய

கல்தேயும் தேயாது சொல்.

நெடுவரை – பெரிய மலைகள்

முற்றும் – சூழப்பட்ட

ஆழி – கடல்

வடு – பழி

பெரிய சக்கரவாளமாகிய மலைகளால் சூழப்பட்ட நீரையுடைய கடலால் சூழ்ந்த உலகிலே, மலைகள் தேய்வடையும்; பழிச்சொல் மாறாது. ஆகையால், இவர்க்கு இத்தீங்கு செய்து பழியை அடைவதைக் காட்டிலும் தனக்கு ஒருசிறிதும் பழியைப் பயவாத செயல்களையே ஒவ்வொருவனும் விரும்புதல் வேண்டும்.

தான் அழிய நேர்ந்தாலும் பழியொடு பட்டவைகளைச் செய்யவேண்டாம்.

பழமொழி

“கல்தேயும் சொல் தேயாது.”

பழமொழி 400 – 5.39
பழமொழி 400 – 5.39

தம்குற்றம் நீக்கலார் ஆகிப் பிறர்குற்றம்

எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் – எங்கும்

வியனுலகில் வெள்ளாடு தன்வளி தீராது

அயல்வளி தீர்த்து விடல்.

வியன் – அகன்ற

வளி – காற்று, வாதம்

அறிவிலார் தாம் செய்த குற்றங்களைப் போக்காமல் பிறருடைய குற்றங்களைப் போக்கும் பொருட்டு வலியச் சென்று புகுதல், அகன்ற உலகத்திலே எவ்விடத்தும் வெள்ளாடு தனக்கு உள்ள சாரல் காற்றால் உண்டாகிய நோய் இருப்பினும் அதைத் தீர்க்காது பிற உயிர்களுக்கு வாதத்தால் உண்டாகும் நோய்களைத் தீர்க்க முற்பட்டதை ஒக்கும்.

ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களைப் போக்கிய பின்னரே பிறர் குற்றங்களை போக்க முயலவேண்டும்.

பழமொழி

“வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல்.”

பழமொழி 400 – 5.38
பழமொழி 400 – 5.38

நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்

பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே

கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும்

ஓர்த்தது இசைக்கும் பறை.

பறை – உடுக்கை, தோல் கருவி

நீர்மை – ஒப்புரவு, குணம், நிலைபரம்

அறிவுடையாரையே அவர் கொண்ட கருத்து தவறு எனத் தெளிவித்தல் முடியாது என்றால் அறிவு இல்லாதவரைத் தெளிவித்தல் முடியவே முடியாது. பறை முதலிய இசைக்கருவிகள் நாம் நினைத்த ஓசையை ஒலிப்பதில் தவறாது. அதுபோல அறிவுடையாரும் கொண்ட கொள்கையிலிருந்து சிறிதளவேனும் தெளியார். ஆகவே, பிறர் சந்தேகப்பட்டபின் அவரைத் தெளிவித்தல் அரிதாகையால் பிறர் சந்தேகப்படாத வகையில் ஒழுகுதல் வேண்டும்.

திருக்குறள்

“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது.”

பழமொழி

“ஓர்த்தது இசைக்கும் பறை.”

பழமொழி 400 – 5.37
பழமொழி 400 – 5.37

தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்

செந்நடை சேராச் சிறியார்போ லாகாது

நின்நடை யானேநட அத்தா! நின்னடை

நின்நின்று அறிகிற்பார் இல்.

அப்பனே! உனது ஒழுக்கத்தை நீயே அறிவாய்; ஆகவே உன்னிடத்திலிருந்து மற்றவர் அறியமாட்டார். தமது ஒழுக்கத்தை ஆராய்ந்து அறியாமலும், தது சுற்றத்தோர் ஒழுகிவந்த வராற்றையும் அறிய மாட்டாமல் செம்மையாகிய நடைமுறை ஒழுக்கத்தில் ஒழுகாத அறிவில் சிறியர் போல் ஒழுகாது, உனக்கு விதிக்கப்பட்ட உன் குடிக்கேற்ப ஒழுக்கத்தின்படி ஒழுகக் கடவாய்.

பழமொழி

“நின்னடை நின்நின்று அறிகிற்பார் இல்.”

இது அக்காலத்தில் சரியாக இருந்திருக்கும். சமுதாய மற்றங்களைச் சந்தித்த பிறகு “குடி ஒழுக்கம்” ஒத்து வராது.

நடைமுறையில் “சீரிய ஒழுக்கத்தின்படி வாழ்க” என்றுதான் அறிவுறுத்த வேண்டும்.

பழமொழி 400 – 5.36
பழமொழி 400 – 5.36

கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்

எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் – தெள்ளிதின்

ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்

பார்ப்பாரும் தின்பர் உடும்பு.

தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாட்டை உடையவனே! பார்ப்பனரும் நாய் கவ்வியதாயினும் உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர். அது போல கள்ளியிடம் பிறக்கும் அகிலையும், கருப்பு நிறக் காக்கையின் சொல்லையும், அது பிறந்த இடம் நோக்கி இகழாமல் உயர்வாகக் கொள்ளுமாறு போல, அறிவில் கீழாயினார் வாயில் இருந்து வந்த வார்த்தையாக இருந்தாலும் அது நல்லுரையாயின் இகழாது எடுத்துக் கொள்ளவேண்டும்.(போற்ற வேண்டும்)

சிறந்த பொருட்களை இழிந்தார் கூறினாலும் இகழாது போற்ற வேண்டும்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு” – திருவள்ளுவர்

பழமொழி

“நாய்கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு.”