ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'பழமொழிகள் 615'

பழமொழி 600

496.பசி வந்தால் பத்தும் பறந்திடும். 497.படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில். 498.படிக்கிறது இராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில். 499.பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். 500.பத்தாம் பேறு பாடையில் வைக்கும் 501.பத்து அரிசியும் வேகவில்லை; பாவியின் ஆவி போகவில்லை. 502.பந்திக்கு முந்து படைக்குப் பிந்து. 503.பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. 504.பனை மரத்தடியில் பால் குடித்தது போல. 505.பழமொழியில் உமி கிடையாது 506.பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததுபோல் 507.பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். 508.பிச்சை [...]

பழமொழி 600

484.நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? 485.நச்ச வாயன் வீட்டிலே நாறும் வாயன் பெண் எடுத்தது போல் 486.நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான். 487.நம்பமாட்டாதவன் பெண்டாட்டிக்கு நாற்பது பேர் மாப்பிள்ளை. 488.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை. 489.நாணமில்லா நாகுவுக்கு நாலு திக்கும் வாசல்படி 490.நான் படும் பாடு நாய்தானும் படாது. 491.நித்திய கண்டம் பூரண ஆயுசு 492.நிறைகுடம் தளம்பாது. 493.நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல். 494.நிழலின் அருமை வெய்யிலில் தெரியும். [...]

பழமொழி 600

459.தடியெடுத்தவன் தண்டக்காரன். 460.தனக்கு அழகு மொட்டை; பிறருக்குக் கொண்டை. 461.தனக்கு என ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் குந்தி அழுவாள். 462.தனிமரம் தோப்பாகாது. 463.தன் பெஞ்சாதியைத் தான் அடிக்க தலையாரியின் அனுமதியா? 464.தன் வினை தன்னைச் சுடும். 465.தம்பியுள்ளான் படைக்கஞ்சான். 466.தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; கோவணைத்தை மிஞ்சிய வறுமையும் இல்லை. 467.தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன. 468.தள்ளி இருக்க உறவு, கிட்ட வந்தால் முட்டப் பகை. 469.தாயிற் சிறந்த கோவிலுமில்லை. 470.தாயில்லாப் பிள்ளை தறுதலை. [...]