ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

Archive for 'கட்டுரைகள்'

தவிர்க்கவேண்டிய சொற்கள்

தனித்தமிழில் உரையாடும்பொழுது சமக்கிருதச் சொற்களைப் பயன்படுத்தாதிருத்தல் நலம். அத்தகைய சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். இம் மின்னூலைத் தரவிறக்கச் சொடுக்குக:

காலை மணி 8.30

அதிசயம். ஊட்டியா? கொடைக்கானலா? இன்று காலை 8.30க்கு வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. சிம்லாவுக்கு வந்து விட்டோமா? ஊட்டியா? கொடைக்கானலா? எதிர் வீடு கூடத் தெரியாவில்லை. இதெல்லாம் எங்கே? திண்டுக்கல்லில்தான். நம்ம ஊரே இப்படியிருக்க ஊட்டியும் கொடைக்கானலும் ஏனுங்க?

பூந்தியா? (இ)லட்டா?

நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு மாலை வேளையில் அவரைக்காணச் சென்றபோது, அங்கே இருவகை இனிப்புக்கள்,காரப் பணியாரம், தேனீர் கொடுத்தார்கள். அந்தப் பண்டங்களை உண்டுவிட்டு உரையாடத் தொடங்கியபோது, அவ்வில்லத்தரசி,”என்ன? எல்லாம் சுவையாக இருந்தனவா?” எனக் கேட்டார்கள். “ஆம், அம்மணி; ஆயினும் இனிப்பில் சுவை வேறுபாடு ஒன்றுமே தெரியவில்லையே” என்றேன். அதற்கு அவர்கள்,”எங்கள் இல்லத்திற்கு வருபவர்களுக்கு ஒரு இனிப்பு வைப்பது பழக்கமல்ல; இருந்ததோ பூந்தி ஒன்றுதான்; அதையே உருண்டையாகப் பிடித்து வைத்தேன்” என்றார்கள். இந்நிலைதான் இப்பொழுது. சங்கதமா? தமிழா? பூந்தியா? இலட்டா? [...]