ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'தமிழமுது'

பிரபுலிங்க லீலை – 4.11 to 4.15

பிரபுலிங்க லீலை – 4.11 *************************   மூக்கிலே முத்துமூக்கணி புனைதல் ************************************ 4.11 தன்னை நிந்தைசெய் வெண்ணகை மேற்பழி சார மன்னி யங்கது நிகரற வாழ்மனை வாய்தன் முன்னி றந்திடு வேனென ஞான்றுகொள் முறைமை என்ன வெண்மணி மூக்கணி யொருத்திநின் றிட்டாள்.   வெண்நகை – வெண்பல்; மன்னி – நிலைபெற்று; நிகர் அற – ஒப்பில்லாமல்; வாய்தல் – வாசல்; ஞான்றுகொள் – தூக்குப் போட்டுக் கொள்கிற; வெண்மணி மூக்கணி – வெள்ளை முத்துக் [...]

விவேக சிந்தாமணி – மின்நூல்

விவேக சிந்தாமணி மின்நூல் வலையேற்றம் காண்கிறது.

பிரபுலிங்க லீலை – நூலாசிரியரின் வரலாறு – மீள்பதிவு

பிரபுலிங்க லீலை ****************** நூலாசிரியரின் வரலாறு ************************ தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவர் ஆண்டுதோறும் தவறாது திருவண்ணாமலைக் கார்த்திகை தீபம் கண்டு தொழுதுவரும் தகையாளர். திருவண்ணாமலையார் திருவருளால், சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர், ஞானாம்பிகை எனும் மக்கட்செல்வத்தைப் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார். மக்களின் கல்விப்பருவத்திலேயே, குமாரசாமி தேசிகர் இறையடி சேர்ந்தார். பின்னர், மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு திருவண்ணாமலையெய்தி, ஆங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி [...]