Archive for 'ஞானம்'
சிவவாக்கியர் பாடல்கள் – 98
சிவவாக்கியர் பாடல்கள் – 98 ****************************** கடலிலே திரியுமாமை கரையிலேறி முட்டையிட்டுக் கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல் மடலுளே யிருக்குமெங்கள் மணியரங்க சோதியை உடலுளே நினைந்துநல்ல வுண்மையான வுண்மையே. கடலில் உள்ள ஆமை கரையேறி வந்து முட்டைகளை இடும். பின்னர் கடலுக்குள் செல்லும் ஆமை, கடலுக்குள்ளேயே இருப்பினும் தன் கவனம் முழுவதையும் தன் முட்டைமீதே வைத்திருக்கும். அச்சூட்டில் ஆமை குஞ்சு பொரிக்கும். அது போல, மனம், பார்வை ஆகியவற்றை ஒன்றித்து கவனமுடன் மடலுக்குள் இருக்கும் [...]
Posted: May 14th, 2012 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள், ஞானம்.
Comments: none
சிவவாக்கியர் பாடல்கள் – 97
சிவவாக்கியர் பாடல்கள் – 97 ****************************** இரண்டுமொன்று மூலமா யியங்குசக் கரத்துளே சுருண்டுமூன்று வளையமாய் சுணங்குபோற் கிடந்ததீ முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி யூடுபோய் அரங்கன்பட் டணத்திலே யமர்ந்ததே சிவாயமே. சூரிய சந்திர கலைகள் மூலாதாரத்தில் ஒன்றாகி, அங்கு, மூன்று வளையமாய் தேமல் போல் சுருண்டு கிடக்கும் குண்டலினித் தீயை எழுப்ப, அப்பொழுது சங்கின் ஓசை மூலநாடியின் உள்ளே போய் அரங்கன் பட்டணமாம் திரு+அரங்கத்துள்(சகஸ்ரகாரம்) வந்து அமரும்.
Posted: May 14th, 2012 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள், ஞானம்.
Comments: none
சிவவாக்கியர் பாடல்கள் – 96
96. நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய் சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய் யவ்விரண்டு கண்ணதா யெழுந்துநின்ற நேர்மையிற் செவ்வையொத்து நின்றதே சிவாயமஞ் செழுத்துமே. இரண்டு கால்கள், வயிறு, இரு தோள்கள், சிறந்த வாய், இரு கண்கள் ஆகியவை சேர்ந்துதான் இவ்வுடல் ஆக்கப்பட்டுள்ளது. இவைகள்“நமசிவய” என்னும் பஞ்சாக்கர மந்திரத்தைக் குறிக்கிறது. இப்பாடலுக்கு மேலோட்டமாக இப்படித்தான் பொருள் சொல்லிவிட்டுப் போகின்றனர். இதன் சூக்குமப் பொருள்: “நமசிவய” என்னும் மந்திரம்தான் இவ்வுடல். அதனுள்தான் இறைவனாம் சிவம் உள்ளது. வழிமுறை தெரிந்து [...]
Posted: May 13th, 2012 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள், ஞானம்.
Comments: none





