Siththan.com » ஞான முத்துக்கள்

சாகாக் கலை
சாகாக் கலை பயில வழி என்ன?

“இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி

துதிக்கையா லுண்பார்க்குச் சோரவும் வேண்டாம்

உறக்கத்தை நீக்கி யுணரவல் லார்கட்கு

இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.”

இடக்கை = இடகலை.

வலக்கை = பிங்கலை.

துதிக்கை = சுழுமுனை;

நுதிக்கை; முனையுள்ள கை.

இடநாடி வலநாடி வழியாகக் கீழிறங்கும் அமுதை மாற்றி மேலேற்றி, உள்நாக்கைத் துதிக்கை போல் வளைத்து நடுத்துளை தவிர மற்றவற்றை அடைத்து, நடுத்துளை வழியக அருந்துவோர்க்கு இறப்புக்கு அஞ்சிச் சோர்வு உண்டாகாது. நித்திரையே எம தூதன். ஆகவே நித்திரை நீக்கி இடையறாது சிவன் திருவடியை எண்ணும் அடியார்க்கு இறப்பும் நேராது. எண்ணும்வரை உடலோடு வாழலாம்.

அன்புடன் செய்யும் பூசை
இறைவனுக்குச் செய்யும் பூசை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகையாம் என்பார்கள். பரார்த்தம் என்பது, தன்னைத் தவிற ஏனைய உயிர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவது.

அர்ச்சகர்கள் பரார்த்த பூசை என்கிற வகையில் பக்தர்களுடைய நலனுக்காக, அருச்சனை, அபிடேகம்(முழுக்காட்டு) முதலியவை செய்தாலும், பிரபஞ்சங்களை எல்லாம் காத்தருளுகின்ற எம்பெருமான் ஆன்மாக்களின் நன்மைக்காக இதைச் செய்கிறான் என்று அன்பு உணர்வுடன் அவர்கள்செய்யும் போது இறைவன் ஏற்றுக் கொள்கிறான். பலன்களையும் தருகிறான்.

ஆனால் பூசை என்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டதை நாம் காண்கிறோம். திருக்கோயில்களில் பக்தர்களுடைய கூட்டம் அலை மோதுவதால், அர்ச்சகர்கள் வெறும் இயந்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். அன்பு காட்ட நேரம் கிடைப்பது இல்லை. செய்யும் பூசையையும் முழுமையாக செய்ய இயலாது.  நாம் எந்த பூஜையிலும், அன்புடன் செய்யும் அறிவு வேண்டும் என்கிறார் திருமூலர்.

பயன் அறி ஒன்றுண்டு பன்மலர் தூவிப்

பயனறி வார்க்கு அரன்தானே பயிலும்

நயனங்கள் மூன்றுடையான் அடிசேர

வயனங்களால் என்றும் வந்து நின்றானே.

நம்முடைய வீடுகளில் கூட, அழகான பூஜை அறை அமைத்திருப்போம். வருகிறவர்களுக்கெல்லாம் பெருமையாக காண்பிப்போம். ஆனால் பூஜை செய்வதற்கு நமக்கு நேரம் இருக்காது. காலையில் வேலைக்குக் கிளம்பும்போது, அவசரம் அவசரமாக பூக்களைத் தூவி விட்டுச் செல்வோம். அன்பு உள்ளத்தில் இருந்தால் போதுமென்ற நினைப்பு! உள்ளத்தில் இருந்தால் மட்டும் போதாது. நமது செய்கையில், தொண்டில், வழிபாட்டுமுறையில் அன்பு வெளிப்பட வேண்டும்.

பழமொழி 600
1.அகத்தினழகு முகத்தில் தெரியும்.

2.அகல உழுகிறதை விட ஆழ உழு.

3.அகல் வட்டம் பகல் மழை.

4.அக்கா இருக்கும்வரைதான் மச்சான் உறவு

5.அக்கா வைச்சிருந்தா அரிசி; தங்கை வச்சிருந்தா தவிடு.

6.அசடுக்கு வாக்கப்பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிட, சமத்துக்கு வாக்கப்பட்டு சட்டுன்னு தாலி அறுக்கலாம்.

7.அசைந்து தின்பது யானை, அசையாமல் தின்பது வீடு.

8.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

9. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.

10.அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

11.அடக்கமே பெண்ணுக்கு அழகு

12.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

13.அடாது செய்தவன் படாது படுவான்.

14.அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் தேனும்.

15.அடிக்கடி  அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே

16.அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் முகத்துக்கு முன் ஆடும்.

17.அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

18.அடியாத மாடு படியாது

19.அடியைப் போல அண்ணன் தம்பி உதவான்.

20.அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரன் நிம்மதி போச்சு.

21.அடுப்பிலெ இருக்கும் சட்டி பொறுத்தாலும் மூடி பொறுக்காதாம்.

22.அடுப்பே வனவாசம்; கடுப்பே கைலாசம்.

23.அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

24.அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது

25.அதை விட்டாலும் கதியில்லை; அப்புறம் போனாலும் விதியில்லை.

26.அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

27.அந்தி மழை அழுதாலும் விடாது.

28.அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

29.அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்

30.அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

31.அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

32.அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

33.அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

34.அயலூரானுக்கு ஆத்தோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.

35.அயல்வீட்டானுக்குப் பரிந்துகொண்டு ஆம்படையானை அடித்ததுபோல்

36.அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

37.அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

38.அரிசி அளக்கும் படிக்கு அரிசியின் விலை தெரியுமா?

39.அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி(கல்) மூன்று வேண்டும்.

40.அரிசி என்று அள்ளிப்பார்ப்பாரும் இல்லை; உமி என்று ஊதிப்பார்ப்பாரும் இல்லை.

41.அரிசி பகையும் ஆம்படையான் பகையும் போல்(கணப்பொழுது)

42.அருக்காணி முத்து கரிக்கோலமானது போல்

43.அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

44.அரைத்துட்டிலே கலியாணம், அதிலே கொஞ்சம் வாணவேடிக்கை

45.அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

46.அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

47.அறச் செட்டு முழு நட்டம் .

48.அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்.

49.அறமுறுக்கினால் அத்துப் போகும்.

50.அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

51.அறிய அறியக் கெடுவார் உண்டா?

52.அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

53.அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

54.அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

55.அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

56.அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

57.அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

58.அறுதாலி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை

59.அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி

60.அறுப்புக் காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்.

61.அற்ப அறிவு அல்லற்கிடம்.

62.அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

63.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

64.அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

65.அழகுக்குச் செய்தது ஆபத்துக்கு உதவும்.

66.அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

67.அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

68.அழுது அழுது பெத்தாலும் அவளே பெறவேண்டும்

69.அவுசாரி ஆனாலும் முகராசி வேணும்

திருமணச் சடங்குகளும் நோக்கமும்
என்  சிறுபுத்திக்கு எட்டியவரை:

அம்மி  மிதிப்பது = பெண்ணின் கால் ஊனமற்ற நிலையில் உள்ளதாஎனச் சரி பார்ப்பதற்கும், உனக்குஎத்துன்பம் வந்தாலும் உன்  காலடியில் நின்று

உன்னைத் தூக்கிக்  கரைசேர்ப்பேன் என உறுதி கூறுவதற்காகவும் இருக்கலாம்.

அருந்ததி பார்ப்பது = பெண்ணின் கண்பார்வையை  சோதிப்பதற்காகவும், அருந்ததியைப்போல்  நீயும் இருக்கவேண்டும் எனச் சொல்லுவதற்காகவும் இருக்கலாம்.

தாலியணிவித்தல் = மிஞ்சி போடுதல் = இப்பெண்ணுக்குத்  திருமணமாகிவிட்டது என அடுத்தவர்களுக்குக்  காட்டுவதற்காக.

பூணூல் அணிதல் =  முறையாக ஞான உபதேசம் பெற்றுவிட்டான். முக்கலை ஒன்றித்தல் வித்தை இவனுக்குத் தெரியும்எனக்  காட்ட

காசி யாத்திரை =  அக்காலத்தில் காசிக்குச் செல்வது மிகக் கடினம்.

காசிக்குச் சென்று பாவங்களைக் கழித்து விட்டான். இனி  திருமணஞ்

செய்யலாம்எனக்  காட்ட

பாக்கி தெரியவில்லை  தெரிந்தவர் விளக்குங்களேன்.

நானும்  தெரிந்து கொள்கிறேன்.

ஐம்பதா? ஐம்பத்தொன்றா?
“முத்திதரு மூலத்தி லட்சரமே நாலு

முதலான சுவாதிட்டான மெழுத்தா  றாகும்

பத்திதரும் பூரகத்தி லெழுத்தோ பத்து

பாங்கான அநாகதத்தி லெழுத்தீ  ராறாஞ்

சித்திரமாம் விசுத்திதனி லெழுத்தீ ரெட்டாம்

சிறந்தவாக் கினையிலெழுத்  திரண்டு மாகும்

சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன் றாச்சு

சார்வாமைம் பத்தோரட்  சரங்கா ணாண்டே.”(ஞானம் எட்டி)

“வட்டமிட்ட சட்கோணபாரின்  மேலும்வளர்ந்த

…………விதழீராறாமங்குலத்தில்

திட்டமிட்டவனாகதத்தில்  வீற்றிருந்த  சிறந்தருளும்

………..ருத்திரனுத்திரியைப்போற்றி

வெட்டவெளிவேதமறை  நான்குமோதும் வேதமெலாந்

……….திருநீறாயானவாறும்

அட்டதிசையறிந்துணர்ந்த  பெரியோர்பாத மைம்பத்

………..தோரட்சரமுங்  காப்புத்தானே.”

வட்டமிட்டுள்ள அறுகோணத்தின்மேல் வளர்ந்திருக்கின்ற பன்னிரு  இதழ்களையுடைய அநாகதத் தானத்தில் வீற்றிருக்கும் உருத்திரன், உருத்திரியைப் போற்றி,  நான்கு வேதங்களால் வெட்டவெளியாய் விளக்கப்படும் திருநீறாய் ஆனவாறும் (வழியான  தெளிவான விபூதிதன்னை) எட்டு திசைகளையும் அறிந்துணர்ந்த பெரியோர்களுடைய  திருவடிகளும், ஐம்பத்தொரு அட்சரங்களும் காப்பாகும்.

“ஓதும் எழுத்தோ  டுயிர்க்கலை மூவைந்தும்

ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்

சோதி எழுத்தின்  நிலையிரு மூன்றுள

நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே.”

ஓதும் எழுத்தோடு(ஓம்)  மூவைந்தும் – ஆக 16 உயிர்

ஆதிமெய் – 35. இரண்டும் சேர்த்து 51  அக்கரம்.

பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் 51. பின் உயிர்ப்புச் செட்டு  நோக்கி முப்பதாக அமைத்தனர்.

ஏனைய ஒலிகளை ஒலிப்பிக்கும் வாய்ப்பாக ஆய்தம்  எனுமெழுத்து

உருவாக்கப்பட்டது. செந்தமிழ் காலத்திற்கு முந்தி  இருந்தவை.

தற்பொழுது ஒழிந்துபட்டவை போக எஞ்சி வழக்கில் உள்ளவை 13

உயிர்(ஃ  சேர்த்து)

இதுதான் 51 அக்கரம்(அட்சரம்).

ஐம்பத்தியொன்று  ஐந்தானது:

‘ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்

ஐம்ப தெழுத்தே அனைத்தாக  மங்களும்

ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்

ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத்  தாமே’

இங்கு மறையை வேதமெனவும், முறையை ஆகமமெனவும் கூறுவர்.

மறையும்  ஆகமமும் 5 எழுத்தில் அடங்கும். அவை ந, ம, சி, வ, ய.

“அஞ்செழுத் தாலைந்து  பூதம் படைத்தனன்”

எனத் திருமூலர் கூறுவதிலிருந்து ஐந்தெழுத்தில்  ஐம்பூதங்களாலாகிய இவ்வுடல் அடக்கம். இதற்கு எழுதலாம் இன்னும் 50  பக்கம்.

திருவைந்தெழுத்து தமிழ் மொழியின் உயிர்க்குறிலாகிய அ, இ, உ, எ, ஒ  என்னும் ஐந்தெழுத்தாம். இவைகளைக்கொண்டே சித்தர்கள் பூடகமாகப் மருமங்களைப்  பாடிவைத்துள்ளனர்.

கால்கள் – நகரம் – நடப்பு – நிலம்  – உ – சிவப்பு

வயிறு – மகரம் – மறைப்பு – நீர் –  எ – பச்சை

தோள் –  சிகரம் – சிறப்பு – அங்கி – அ – பொன்னிறம்

வாய் – வகரம் – வனப்பு – விண் – ஒ  – கறுப்பு

கண்கள்  – யகரம் – யாப்பு – வாயு – இ – வெள்ளிநிறம்

“ஆகின்ற பாதமு மந்நவாய்  நின்றிடும்

ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்

ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க்  கண்டபின்

ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.”(விளக்கம் மேலே)

இதுவே பிண்ட  இரகசியம்.

வழிபாடு:

“மந்திரம் ஒன்றுள் மலரால்  உதிப்பது

உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநீற்குஞ்

சந்திசெய் யாநிற்பர் தாம  தறிகிலார்

நந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.”(திருமந்திரம்)

“நமசிவய”வே  வழிபாட்டு முதன்மை மந்திரம். அதனை நெஞ்சில் நிறுத்தி உயிர்ப்புடன் கணிக்க – மலர்  வழிபாடு எனும் அருட்சுனையாம்(அருச்சனை)

உந்தியினுள்ளே உயிர்ப்புடன் கணிக்க  ஓம வேள்வியாம்.

நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல்,  அமைதியாக்கல்(சாந்தி), அப்பாலாக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால்  செலுத்தப்படுபவன அகர முதலிய எழுத்துக்கள்.

இவைகளை ஐந்து கலைகளென்பர்:  அவையாவன:

நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம்.

இன்னும்  விவரிக்கவியலாது.

அழிந்துபட்ட எழுத்துருக்கள் எனக்குத் தெரியாது.  திருமந்திரத்திலேயே இல்லை.

ஐம்பதென்ன? ஐம்பத்தொன்று என்ன? என அறியாது,  மொழிச்சண்டைக்கு திருமூலனையும் இழுத்து, சித்தர்களின் புனிதத்தை கெடுப்பது  மனவருத்தம் தருகிறது.

ஒரு பாடலை மேற்கோள் காட்டும்போது, அதன் பொருளையும்  சேர்த்துத்தருவது நல்லது. அது இல்லாது, ஒரு இணையதளத்தின் முகவரியை மட்டும் தந்தால்  புரிந்துகொள்ளும் அளவுக்கு நம் வலைப்பதிவர்களின் நிலை இல்லை.

நம் தமிழில்  தொலைத்தது எவ்வளவோ தெரியாது! அவ்வாழியில் மூழ்கி முத்தெடுக்கும் பணிசெய்வோர்  அருகியுள்ளனர். அப்பணி செய்வோருக்கு ஊக்கம் தரவேண்டாம். அங்கதம் பேசாமல்  ஒதுங்கியிருந்தால் அதுவே போதும்.