ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'ஞான முத்துக்கள்'

சாகாக் கலை

சாகாக் கலை பயில வழி என்ன? “இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி துதிக்கையா லுண்பார்க்குச் சோரவும் வேண்டாம் உறக்கத்தை நீக்கி யுணரவல் லார்கட்கு இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.” இடக்கை = இடகலை. வலக்கை = பிங்கலை. துதிக்கை = சுழுமுனை; நுதிக்கை; முனையுள்ள கை. இடநாடி வலநாடி வழியாகக் கீழிறங்கும் அமுதை மாற்றி மேலேற்றி, உள்நாக்கைத் துதிக்கை போல் வளைத்து நடுத்துளை தவிர மற்றவற்றை அடைத்து, நடுத்துளை வழியக அருந்துவோர்க்கு இறப்புக்கு அஞ்சிச் சோர்வு உண்டாகாது. [...]

அன்புடன் செய்யும் பூசை

இறைவனுக்குச் செய்யும் பூசை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகையாம் என்பார்கள். பரார்த்தம் என்பது, தன்னைத் தவிற ஏனைய உயிர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவது. அர்ச்சகர்கள் பரார்த்த பூசை என்கிற வகையில் பக்தர்களுடைய நலனுக்காக, அருச்சனை, அபிடேகம்(முழுக்காட்டு) முதலியவை செய்தாலும், பிரபஞ்சங்களை எல்லாம் காத்தருளுகின்ற எம்பெருமான் ஆன்மாக்களின் நன்மைக்காக இதைச் செய்கிறான் என்று அன்பு உணர்வுடன் அவர்கள்செய்யும் போது இறைவன் ஏற்றுக் கொள்கிறான். பலன்களையும் தருகிறான். ஆனால் பூசை என்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டதை நாம் காண்கிறோம். திருக்கோயில்களில் பக்தர்களுடைய [...]

பழமொழி 600

1.அகத்தினழகு முகத்தில் தெரியும். 2.அகல உழுகிறதை விட ஆழ உழு. 3.அகல் வட்டம் பகல் மழை. 4.அக்கா இருக்கும்வரைதான் மச்சான் உறவு 5.அக்கா வைச்சிருந்தா அரிசி; தங்கை வச்சிருந்தா தவிடு. 6.அசடுக்கு வாக்கப்பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிட, சமத்துக்கு வாக்கப்பட்டு சட்டுன்னு தாலி அறுக்கலாம். 7.அசைந்து தின்பது யானை, அசையாமல் தின்பது வீடு. 8.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது 9. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது. 10.அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? 11.அடக்கமே பெண்ணுக்கு அழகு [...]