Siththan.com » ஞானம் எட்டி

ஞானம் எட்டி – 104
ஞானம் எட்டி – 104

104.நாடித்தசவாய்வு வீரைந்துஞ்சேர்த்துமே நாடியட்டதிசையு நலமாகப் பூட்டியே

வீட்டுக்குவாசலொன்பதுவு முண்டாக்கியே வேடிக்கையாகவு நாடிநரம்பாலே

காட்டியசுக்கில சுரோணிதத்தாலே கருவியெனுங்கரணாதிகள் சூழ்ந்திடில்

ஆட்டியமுட்டுமுடக்குக்கணுவுக ளாக்கைப்பலப்பட நாக்குவுண்ணாக்குடன்.

தசவாயு எனப்படும் 10 நாடிகளை ஒன்று சேர்த்து எட்டு திசைகளிலும் கட்டி, அப்படிக் கட்டப்பட்ட வீட்டுக்கு ஒன்பது வாசல்களையும் உண்டாக்கி வேடிக்கையாக நாடிநரம்பாலும், சுக்கில சுரோணிதத்தாலும் உண்டாக்கப்பட்ட ஐம்பொறிகளாகிய கருவிகரணாதிகள் சூழ, ஆட்டுவதற்கு முடக்கு, கணுவுகள், நாக்கு, உண்ணாக்குடனே இவ்வுடலை(ஆக்கையை) உண்டாக்கி

ஞானம் எட்டி – 103
103.நாலு முழத்தினுங் காலை வளர்த்தியே

நாட்டியே சக்கரம் பூட்டியே வைத்துடன்

மேலு மீரைந்துடன் தாது வினாடியால்

வீட்டுக்கு ஆக்கையைப் பூட்டி வரிந்தியே

மாலு நடுவணை காலு மடியனும்

பாலு மதிவளர் மேலுஞ் சுடரினால்

மூல வன்னிச் சுழிமூவ ரிருப்பிடம்

வாலை குண்டலி தன்மாளிகை யாச்சுது.

மால் – கொட்டில், திருமால், வீடு

நான்கு முழம் வரைக்கும் காலை நீட்டி நட்டு, அதற்கு மேல் சக்கரம் ஒன்று வைத்து, பத்து நாடியினால் ஆக்கையாகிய வீட்டை வரிந்து கட்டி  மால் நடுவணையாகவும், கால் அடிப்பாகமாகவும் சந்திர, சூரிய, அக்கினி ஆகியோரின் இருப்பிடமாம் மூலவன்னிச் சுழியே வாலைகுண்டலிக்கு இருப்பிடமுமான மாளிகை ஆச்சு.

ஞானக் குறள்

எழுபத் தீராயிர நாடி யவற்றுள்

முழுபத்து நாடி முதல்.

உடலிலுள்ள எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்குள் உள்ள பூரணமான பத்து நாடிகளுக்குள் முதலானதும் ஆதியானதுமான உயிர் நாடியே தலையானது.

பூரணமான பத்து நாடிகள் :

இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு. இவற்ரை முறையே, இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு என்பர்.

வளி (காற்று) பத்து :

உயிர்வளி, மலக் காற்று, தொழிற் காற்று, ஒலிக் காற்று, நிரவு காற்று, தும்மற் காற்று, விழிக் காற்று, கொட்டாவி (கெட்ட ஆவி), இமைக் காற்று, வீங்கற் காற்று. இவைகளை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனக் கூறுவரும் உண்டு.

இவற்றை திருமூலர்,

“நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்” என்று அவத்தை பேதத்தில் கூறியுள்ளார்.

நாடிகள் உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய் பேய்ச் சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம்72,000 என நூல்கள் கூறுகின்றன. இவற்றின் சிலவற்றிற்கு முழு விவரம் மருத்துவ நூல்களில்தான் கிட்டுகின்றன.

தலயில் ………………….. 7,000

வலது காதில் ……………. 1,500

இடது காதில் …………….. 1,500

வலது கண்ணில் ………… 2,000

இடது கண்ணில் …………. 2,000

மூக்கில் ……………… …… 3,330

பிடரியில் …………………. 1,000

கண்டத்தில் ……………….. 1,000

வலது கையில் …………… 1,500

இடது கையில் …………… 1,500

தொண்டைக்கும்

நாபிக்கும் மத்தியில்…….. 8,990

பிடரியின் கீழ் ……………. 8,000

விலாவில் ……………….. 3,000

கால்களின் சந்தில் ………. 8,000

பீசத்தின் மேல் …………… 2,000

பீசத்தின் கீழ் ……………… 2,000

பாதத்தில் …………………. 1,000

பிடரிக்குப் பின்னால்………3,680

கோசம் …………………… 13,000

ஆக நரம்புகள் ……………. 72,000

பெருவாரியான ஞான நூல்கள் பத்து நாடிகளுக்குத்தான் முக்கியத்துவம்

தருகின்றன.

இதிலும் இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிவைகளே மிக அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.

இடகலை – வாத நாடி

பிங்கலை – பித்த நாடி

சுழிமுனை – சிலேத்தும நாடி

இம்மூன்றையும் வைத்துத்தான் நம் முன்னோர், அதிலும் வைத்தியர்கள் உடலின் நோய்களைக் கண்டறிந்தனர்.

இ(டை)ட கலை – இடது நாசியினுள்ளே செல்லும் கற்று. இதுவே சந்திர நாடி.

சக்தி நாடிஎன்போருமுண்டு.

பிங்கலை – வலது நாசியினுள்ளே செல்லும் மூச்சு. இதைச் சூரியநாடி, சிவநாடிஎன்பர்.

சுழிமுனை – அக்கினி நாடி. இடத்திற்கு இடம் மறுபடும்.

அதாவது அண்டம், பிண்டம், சூக்குமம், அதி சூக்குமம்.

அறிவாலுணர்வது அண்டம்.

உணர்வாலுணர்வது பிண்டம்.

நினைவால் உணர்வது சூக்குமம்.

கருத்தில் நிற்பது அதிசூக்குமம்.

சிகுவை – உள்நாக்கு நரம்பு

புருடன் – வலக்கண் நரம்பு

காந்தாரி – இடக்கண் நரம்பு

அத்தி – வலது காது நரம்பு

அலம்புடை – இடக் காது நரம்பு

சங்கினி – ஆண்(பெண்) குறி நரம்பு

குகு – குத நரம்பு

ரக்தவியானன் – இனப்பெருக்கத்திற்குறிய சுக்கிலம், முட்டை ஆகியவைகளை வெளித் தள்ளும் நரம்பு

ஞானம் எட்டி – 76
ஞானம் எட்டி

76.ஓராறு மேலாறு முற்றபெருந் துறைதாண்டி

சீரார் புகழவருந் தெய்வப் பதிதாண்டிக்

காரார் மதகளிறு கன்னித் திருவீட்டில்

பேராய்க் கருவுதித்துப் பேசி யிருந்தேன்காண்.

இப்படியாய்க் கருவுற்று, கீழாதாரம் ஆறு, மேலாதாரம் ஆறு, ஆகியபன்னிரண்டு ஆதாரங்களையுங்கடந்து சீருடையவர்கள் புகழ்ந்து பேசும் தெய்வப் பதியாம் கண்களைத் தாண்டி, அன்னை மனோன்மணி குடியிருக்கும் திருவீட்டில் அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். காண்பீரே! ஆண்டை மாரே!

*விட்டுப்போன பதிவு – தொடர்ச்சி காரணமாக

நண்பர் மாசிலாவுக்கு
தங்களின் பெயர் “மாசிலா” என வைத்துள்ளீர்கள்; ஆயினும் தங்களின் மின்னஞ்சலில் அது  உள்ளதே!

//வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய  பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில் புத்தியிழந்து எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான  தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி  கீழ்த்தனமாக எழுதி இருந்தால் நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில்  பதித்தீர்கள்?//

“வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய  பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில்” என்பதை எப்படி ஒத்துக்கொள்வது. கண்ணால்  காண்பதெல்லாம் மாயையே! சிவனைக் கண்ணால் பார்க்கவியலுமா? நான் எந்த இடத்திலும்  “வந்தேறி…….”

எனக் குறிக்கவில்லையே!

“எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான  தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி  கீழ்த்தனமாக எழுதி இருந்தால்”

எவனோ ஒருவன் அல்ல. அவன் உண்மையான சித்தன்.  அவன் பறையர்களைச் சாடவில்லை. உயர்த்தித்தான் எழுதியுள்ளான். அவன் சாதிவேறுபாடு  காட்டி எழுதவில்லை. முழுவதையும் படிக்காமல், புரிந்துகொள்ளாது குற்றம்  சுமத்தவேண்டாம். நம் உடலில் உள்ள வாயைப் “பறைச்சி” எனக் குறிப்பிடுள்ளான். வாயும்  சொல்லும் இல்லையெனில் உடலும் உள்ளமும் படும்பாடு பட்டால்தான்  தெரியும்.

“நட்டகல்லைத் தெய்வ மென்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து  முணமுணென்று சொல்லுமந்திர மேதடா?

நட்டகல்லும் பேசுமோ நாதன்  உள்ளிருக்கையில்?

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

இதுவும்  சிவவாக்கியரின் பாடல்தான்.

இப்பாடலில் முதல் இரண்டுவரிகளை மட்டும்  இறைமறுப்பாளர்கள் எடுத்துகொண்டு வசதியாக மற்றுமிரு வரிகளைப் புறக்கணித்து  விடுவர்.

அதுபோலன்றி முழுவதையும் படித்துப்பின் தங்களின் கருத்துக்களைக்  கூறுங்கள்.

“நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில்  பதித்தீர்கள்?”

ஆம் ஐயா. நான் பதிக்கவில்லை. நான் பதிந்ததோ என் பதிவில். என்  பதிவில் பதிப்பிக்க என்னைத்தவிற யாருக்கும் உரிமை இல்லை என்பதை யாரும்  மறுக்கவியலாது. தமிழ்மணம் ஒரு திரட்டி என்பதை நினைவுகூருங்கள். அது தன்னாலே  திரட்டித் தந்துவிட்டது. இதில் என் தவறொன்றுமில்லை.

மதச் சண்டைகளும்,  தனிமனிதச் சாடல்களும் மலிந்துவிட்ட தமிழ்மணத்தில் எனக்கு உரிமை இல்லை; வேண்டவும்  வேண்டாம். நீங்களே வைத்துக்கொள்ளலாம்.

//நீங்கள் துதிபாடும் சைவர்களைப்பற்றி  இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் சுவனப்பிரியனின்  (http://suvanappiriyan.blogspot.com/2006/11/blog-post_22.html)”சமண பௌத்த மதங்களை  அழித்த சைவம்” பதிப்பை படித்துவிட்டு வாருங்கள்.//

ஆமாம். அது ஒன்றுதான்  பாக்கி. உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்தால் அது தங்களின் அகராதியில் “துதிபாடுதல்”  எனப்பொருள் என்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மதமும்  அடுத்த மதத்தைப் போட்டு மிதித்துத்தான் மேலே வந்துள்ளதென நானும் அறிவேன். இதற்கு  அடுத்தவரின் பதிவைப் படிக்கவேண்டுமெனும் கட்டாயம் இல்லை. யார் என்ன எழுதினாலும்  திருத்த நான் யார்? அவரவர் கொள்கையை அவரவர் சொல்கிறார்கள். நான் யார் அவர்களை  மாற்ற? இல்லை அவர்கள் மாறித்தான் எனக்கு ஆகவேண்டியது என்ன?

ஞானம் எட்டியின்  முதல் பகுதியிலேயே என் வேண்டுகோளை இட்டுவிட்டேன். அதையும் கொஞ்சம்  படியுங்கள்.

“அன்புடையீர்.

“ஞானமெட்டி” நூல் முழுவதுமே சாதிப்  பாகுபாடு உள்ளதைப் போல்தான் திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

கீழ்சாதிக்காரன்  தன் ஆண்டையை நோக்கி, “ஞான விளக்கம்” கொடுப்பதாக உள்ளது.

“மதமென்னும் பேய்  பிடியாதிருத்தல் வேண்டும்”

“எம்மதமும் சம்மதமே”

“நாமத்தை நீக்கித்  தத்துவங்கண்டு உணருவதுவே மனுவின் நோக்கம்”

“எப்பொருள்  யார்………….மெய்ப்பொருள் காண்பதறிவு.”

“மனுவை மனுவாக  மதி.”

இதுவே எமது கோட்பாடு.

நண்பர்கள் இதனால் மனம் நொந்து புறக்கணித்தால்  பல அரிய ஞானக் கருத்துக்களைப் புறக்கணித்து விடுவர்.

ஆகவே, சுட்டும் விரல்  நோக்காது, சுட்டும் பொருளை அறிந்து உணர்ந்து பலன் பெற வாருங்கள் என  அழைக்கும்,

ஞானவெட்டியான்”

தங்களின் வினாக்களுக்கு  விடையிறுக்கவேண்டியிருந்ததால்தான் இவ்விடுகை.

இன்னும் வலைப்பதிவர்களுக்கு  ஆட்சேபம் இருப்பின் தெரியப்படுத்துங்கள். “சிவவாக்கியர் பாடல்களையும், ஞானம் எட்டி”  ஆகிய இரு பதிவுகளையும் நீக்கிவிடுகிறேன்.

அதன் இழப்பு வரும் இளைய  தலைமுறைக்கே! எனக்கல்ல.

எனக்கே காலம் போதவில்லை. என் நேரத்தையும், திறனையும்  வீணடிக்க விரும்பாததால் முடித்துக்கொள்கிறேன்.

ஞானம் எட்டி-102
102.வஞ்சகமான தோரஞ்சு பெரும்பூதம்

பஞ்சறிவாகவுங்குஞ்சர வீட்டினில்

அஞ்செழுத்துள் வளரைம்பத்தோரட்சரம்

ஆனந்தமாகவலங்கார மாளிகை

கொஞ்சிவிளையாடும் ரஞ்சிதவீட்டினில்

நெஞ்சறியுங் கமலாலயமைம்பொறி

செஞ்சொல்மொழிசிவ சிங்காதனத்தினில்

கஞ்சமலராயிரத்தெட் டிதழினால்.

குஞ்சரம் = மருள்

பஞ்சறிவு = அறிதல், உணர்தல், கல்வி, புத்தி, போதனை

கஞ்சம் = தாமரை

பெரிய பூதங்கள் ஐந்தும், ஐந்து அறிவாகக் கபடமாய் வசிக்கும் மருள் நிறைந்த மனத்துடன், ஐம்பத்தோரெழுத்தும் அடங்கித் திருவைந்தெழுத்து எனப்படும் “நமசிவய” என்னும் எழுத்தால் கட்டப்பட்ட ஆநந்தம் நிறைந்த அலங்கார மாளிகையாம் உடலில் கொஞ்சி விளையாடுகின்றன. அதில் உள்ள நெஞ்சினை அறியும் கமலாலய வீட்டில், செம்மொழியாலாகிய சிவசிங்காதனத்தில், ஆயிரத்தெட்டிதழ்களையுடைய தாமரை மலராசனத்தினால்.