ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

Archive for 'ஞானம் எட்டி'

ஞானம் எட்டி – 104

ஞானம் எட்டி – 104 104.நாடித்தசவாய்வு வீரைந்துஞ்சேர்த்துமே நாடியட்டதிசையு நலமாகப் பூட்டியே வீட்டுக்குவாசலொன்பதுவு முண்டாக்கியே வேடிக்கையாகவு நாடிநரம்பாலே காட்டியசுக்கில சுரோணிதத்தாலே கருவியெனுங்கரணாதிகள் சூழ்ந்திடில் ஆட்டியமுட்டுமுடக்குக்கணுவுக ளாக்கைப்பலப்பட நாக்குவுண்ணாக்குடன். தசவாயு எனப்படும் 10 நாடிகளை ஒன்று சேர்த்து எட்டு திசைகளிலும் கட்டி, அப்படிக் கட்டப்பட்ட வீட்டுக்கு ஒன்பது வாசல்களையும் உண்டாக்கி வேடிக்கையாக நாடிநரம்பாலும், சுக்கில சுரோணிதத்தாலும் உண்டாக்கப்பட்ட ஐம்பொறிகளாகிய கருவிகரணாதிகள் சூழ, ஆட்டுவதற்கு முடக்கு, கணுவுகள், நாக்கு, உண்ணாக்குடனே இவ்வுடலை(ஆக்கையை) உண்டாக்கி

ஞானம் எட்டி – 103

103.நாலு முழத்தினுங் காலை வளர்த்தியே நாட்டியே சக்கரம் பூட்டியே வைத்துடன் மேலு மீரைந்துடன் தாது வினாடியால் வீட்டுக்கு ஆக்கையைப் பூட்டி வரிந்தியே மாலு நடுவணை காலு மடியனும் பாலு மதிவளர் மேலுஞ் சுடரினால் மூல வன்னிச் சுழிமூவ ரிருப்பிடம் வாலை குண்டலி தன்மாளிகை யாச்சுது. மால் – கொட்டில், திருமால், வீடு நான்கு முழம் வரைக்கும் காலை நீட்டி நட்டு, அதற்கு மேல் சக்கரம் ஒன்று வைத்து, பத்து நாடியினால் ஆக்கையாகிய வீட்டை வரிந்து கட்டி மால் [...]

ஞானம் எட்டி – 76

ஞானம் எட்டி ************* 76.ஓராறு மேலாறு முற்றபெருந் துறைதாண்டி சீரார் புகழவருந் தெய்வப் பதிதாண்டிக் காரார் மதகளிறு கன்னித் திருவீட்டில் பேராய்க் கருவுதித்துப் பேசி யிருந்தேன்காண். இப்படியாய்க் கருவுற்று, கீழாதாரம் ஆறு, மேலாதாரம் ஆறு, ஆகியபன்னிரண்டு ஆதாரங்களையுங்கடந்து சீருடையவர்கள் புகழ்ந்து பேசும் தெய்வப் பதியாம் கண்களைத் தாண்டி, அன்னை மனோன்மணி குடியிருக்கும் திருவீட்டில் அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். காண்பீரே! ஆண்டை மாரே! *விட்டுப்போன பதிவு – தொடர்ச்சி காரணமாக