Archive for 'ஞானக் குறள்'
ஞானக் குறள்-(281-290)
3. தன்பால் **************** 29. மெய்நெறி (281-290) ******************************** 281. செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ் சொல்லு மவுனத் தொழில். உந்திக்கமலத்தில் செய்யும் ஞானவினையினால் முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம். திருமந்திரம்: “விளங்கிடும் வாயுவை மேலெழ வுன்னி நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச் சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.” கும்பிச்சு = நிறைந்து. நலங்கிடுதல் = ஒடுங்குதல். ஒடுங்கும் கழுத்திலும் கொப்பூழிலும் உள்ள உயிர்ப்பை [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none
ஞானக் குறள்-(271-280)
3. தன்பால் ************* 28. ஞானம் பிரியாமை (271-280) ********************************************** 271. பிறந்திட மாலிடம் பேரா திருப்பின் இறந்திடம் வன்னி யிடம். ஞானவினைக்கு வேண்டிய தத்துவங்கள் வெளிப்படுமிடம், திருமால் வாழும் மணிபூரகமாகிய உந்திக் கமலமே. அவ்விடத்தைத் திறக்காமலிருப்பின், நாம் இறந்தபின் சேரவேண்டியது வன்னியாகிய அக்கினியிடமே. 272. சாகா திருந்த தலமே மவுனமது ஏகாந்த மாக விரு. இறவாது தடுக்கும் பொருள்களின் இருப்பிடமே மவுனமாகிய நாபிக்கமலம்தான். அங்கே, நோக்கைக் கருத்துடன் [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none
ஞானக் குறள்-(261-270)
3. தன்பால் ***************** 27. ஞான நிலை (261-270) ************************************* 261. தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந் துற்பன மஞ்சை யுரை. தற்புருடம் = பிந்துகலை; மா = பெருமைபொருந்திய; அஞ்சை = பஞ்சேந்திரியங்கள்; உற்பனம் = தோன்றும்; உரை = கலக்கிவை ( தயிர் எடுக்க உரை ஊற்றுதல்). பிந்து கலையின் பெருமை பொருந்திய முகத்தில் பார்வையை மட்டும் வைத்து அதை நிறுத்தி, தோன்றும் பஞ்சேந்திரிய சக்திகளைக் கலக்கவை. [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none





