ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'ஞானக் குறள்'

மின் – நூல் – ஞானக் குறள்

ஒளவைப் பிராட்டி அருளிச் செய்த நீதி நூல்கள் பல. ஞான நூல்கள் பல. ஞான நூல்களில் தலை சிறந்து விளங்குவது இந்த “ஞானக் குறள்”. இதில் சூக்குமங்கள் நிறைந்திருப்பதாலும், அவைகளை நடைமுறை அனுபவத்தில் உணராததாலும் இந் நூலுக்கு விரிவாக உரை எழுத யாரும் முன் வரவில்லை. 50 ஆண்டுகள் செய்த தவப் பயனாலும், என் ஞானாசிரியன் திரு.த.பொன்ராமன் அவர்கள் தந்த ஊக்கத்தாலும் உரையெழுதத் துணிந்தேன்.

ஞானக் குறள்-(301-310)

  3. தன்பால் ************* 31. உயர்ஞான தரிசனம் (301-310) ************************************************   301. கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப் பிண்டமு மூழி பிரியா.   சூரிய சந்திர அக்கினி கலைகளை உந்திக்கமலத்தில் உள்ள அக்கினி மண்டலத்தில் சேர்த்துவிட்டால், உயிரையும் உடலையும் காலம்(ன்) பிரிக்கச் சக்தியற்றுப் போய்விடும்.   302. வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத் தள்ளுமின் கால சரம்.   திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று கிழமைகளிலும், சந்திர கலையைப் பிங்கலையில் சேர்க்க வேண்டும். [...]

ஞானக் குறள்-(291-300)

  3.தன்பால் *************** 30. துரிய தரிசனம் (291-300) **************************************   291. வன்னிய தெட்டு மதியம் பதினாறு முன்னிய பன்னிரண்டு முள்.   முதன்மையான சூரியனுக்குப் பன்னிரண்டு கலைகளும், அங்கிக்கு எட்டு கலைகளும், சந்திரனுக்குப் பதினாறு கலைகளுமுள்ளன.   292. சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம் பாருமி னீது பயன்.   சூரியனோடு அக்கினி கலந்தபின் சந்திரன் உதிப்பான். அந்த ஆநந்தத்தை நீங்களே உணர்ந்து அறிக.   திருமந்திரம்:   “குரவ னுயிர்முச் சொரூபமுங் கைக்கொண் [...]