Archive for 'ஞானரெத்தினக் குறவஞ்சி'
மின் – நூல் – ஞானரெத்தினக் குறவஞ்சி
பீரு முகமது அவுலியா ஆக்கிய ஞானக் கருவூலமாகிய “ஞானரெத்தினக் குறவஞ்சி” வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Posted: June 8th, 2010 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: 2
ஞானக் குறவஞ்சி(41-45)
41.கற்பக வாசி கலந்திடும் எவ்விடம் சிங்கி? – அது உற்பன மூலத்தி னுள்ளொளி யல்லவோ சிங்கா! கற்பக வாசி = மூலவாசி உற்பனம் = உண்மை = உள்மெய் மூலவாசியெனும் உயிர் மூச்சு கலந்த இடம் எதடி சிங்கி? அது, உள் மெய்க்குள் இருக்கும் உள்ளொளி உற்பத்தியாகும் மூல ஆதரத் தானமாகுமடா, சிங்கா. 42.சத்தம் பிறந்திடுஞ் சற்குரு வேதடி சிங்கி? – அது உற்ற சுவாசம் உயிர்நிலை யல்லவோ சிங்கா! ஒலி பிறக்கும் இடத்தில் உள்ள ஆசான் [...]
Posted: April 12th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none
ஞானக் குறவஞ்சி(36-40)
36.சித்த னொளிவு கலந்திட மெவ்விடஞ் சிங்கி? – அது அத்தன் நடனந்தா னாடிய தற்பரஞ் சிங்கா! சித்தத்தின் ஒளி எந்த இடத்தில் கலக்கும் சிங்கி? அது சீவன் நடனமாடும் சிதாகாயம் சிங்கா! 37.உத்தமப் பொருளுக்கு உயிரெழுத் தென்னடி சிங்கி? – அது நச்சர வாடும் நடுநிலை யல்லவோ சிங்கா! உயிரெழுத்து = உயிர்நிலை நச்சு அரவு = குண்டலினிப் பாம்பு சீவனாகிய உத்தமப் பொருளுக்கு உயிர்நிலை எங்கேயடி சிங்கி? அது (நச்சு அரவு) குண்டலினிப் பாம்பு ஆடுகின்ற [...]
Posted: April 12th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: 4


