Siththan.com » சிவவாக்கியர் பாடல்கள்

பிறப்பறுக்க
சிவவாக்கியர் – 95

ஆலவித்தி லாலொடுங்கி யாலமான வாறுபோல்

வேறுவித்து மின்றியே விளைந்துபோக மெய்திடீர்

ஆறுவித்தை யோர்கிலீ ரறிவிலாத மாந்தரே!

பாருமித்தை யும்முளே பரப்பிரம மானதே.

ஆலவிதையோ சிறியது. அதற்குள் பெரிய ஆலமரம் உள்ளதை உண்ர்ந்தீரா? ஆலவிதை போன்ற நம் மனதில் தோன்றும் எண்ணங்களால் உண்டாகும் ஆசைகளால் ஆலமரம் பெருகுவதுபோல் பிறப்புக்கள் உண்டாகின்றன. இந்த எண்ணங்களை ஒழித்துத் தன்னுள் ஒடுங்கி ஆறு ஆதாரங்களையும் தாண்டிப் பரப்பிரும்மத்துடன் ஒன்றிடப் பிறப்பறுக்கலாம்.

சிவவாக்கியர் – 94
சிவவாக்கியர் – 94

94. என்னவென்று சொல்லுவே னிலக்கண மிலாததைப்

பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பென

மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்

என்னகத்து ளீசனும் யானுமல்ல தில்லையே

செந்தமிழ்ப் பாடலுக்கு இலக்கணமில்லையோ? அப்படியானால் அது செந்தமிழ்ப் பண் ஆகாது. ஆகாயத்தில் மின்னல் தோன்றி ஆகாயத்திலே மறைந்து விடுவது போல என் உடலிலே மின்னல் போலத் தோன்றி என்னுள் கலந்து ஐக்கியமாகிவிடும் சக்தியை உணர்ந்தால் என் உள்ளத்தில் ஈசனும் இல்லை; நானும் இல்லை. ஒன்று கலந்து விடும் நிலை அடையலாம்.

சிவவாக்கியர் – 93
93. மந்திரங்க ளுண்டுநீர் மயங்குகின்ற மானிடர்

மந்திரங்க ளாவது மரத்திலூற லன்றுகாண்

மந்திரங்க ளாவது மதித்தெழுந்த வாயுவை

மந்திரத்தை யுண்டவர்க்கு மரணமேது மில்லையே

“இறைவனைத் துதிக்க மந்திரங்கள் உண்டு; அவைகள் எனக்குத் தெரியாதே!” என மயங்குகின்ற மானிடரே! மந்திரங்கள் மரத்தில் ஊற்றெடுத்து சாறாக வெளிவருவது அல்ல. மத்தித்து எழுந்த வாயுவை(வாசிக்குதிரை) மேலேற்றி அதன் மேலேறி சவாரி செய்ய அதுவே மந்திரமாகும். இப்படிச் செய்து பலனடைந்தோருக்கு மரணம் இல்லையாம்.

சிவவாக்கியர் பாடல் – 92
92. அவ்வெனு மெழுத்தினா லகண்டமேழு மாகினாய்

உவ்வெனு மெழுத்தினா லுருத்தரித்து நின்றனை

மவ்வெனு மெழுத்தினால் மயங்கினார்கள் வையகம்

அவ்வுமுவ்வு மவ்வுமா யமர்ந்ததே சிவாயமே

அகாரமாகிய “அ” எனும் எழுத்தால் அகண்டம் ஏழும் ஆகினாய்.

உகாரமாகிய “உ” எனும் எழுத்தால் அவ்வகண்டங்கள் ஏழிலும் உயிர் இனங்கள் ஆகினாய்.

மகாரமாகிய “ம” எனும் எழுத்தால் அவ்வகண்டங்கள் ஏழிலும் உள்ள உயிர் இனங்களை மாயையில் மூழ்க வைத்தாய்.

அ, உ, ம ஆகியவை சேர்ந்த “ஓம்” எனும் பிரணவமாய் (மாயையிலிருந்து விடுவிக்க) அமர்ந்ததே சிவாயமே.

அ,உ,ம எனுமெழுத்துக்களானது பிரணவமாகிய ஓம். இதுவே தூலம்.

ஓங்காரம் = பிரணவம்

பிரணவம் இரு வகை. தூலம், சூக்குமம்.(அதிசூக்குமம் நீங்கலாக)

விந்து நாதமாக உணர்த்துவதே சூக்குமப் பிரணவமான பராசத்தி.

சீவன் ஒளிமயமான சிவத்தினிடமாகும்.

இதை உணர்த்துவதே பிரணவம்.

தூலப் பிரணவம் பருவுடலுக்கு இன்பத்தையும், சூக்குமப் பிரணவம் சூக்கும

உடலுக்கு ஆநந்தத்தையும் அளிக்கும். காரணப் பிரணவம் அருட்சக்தியை

நிலைக்கச் செய்யும். மகாப் பிரணவம் வேதாந்த வீட்டில் சேர்ப்பதாகவும் உள்ளது.

ஓங்காரம் ஓரெழுத்து மந்திரம்.

ஓமென்பது முதல்நிலைத் தொழிற் பெயர் – ஒப்புதல், காத்தல்.

ஆகாரம், ஊகாரம் போல ஓம்காரம் பெற்றது சாரியை.

ஓங்காரத்திலிருந்து ஐந்து பூதங்களும் தோன்றின. அவைகளை இயக்கும்

தெய்வங்கள் (ஆண்டவன் அல்ல) அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன்

அதிலிருந்தே தோன்றினர். சரம் (அசைவது), அசரம் (அசைவில்லாதது),

(இவையிரண்டும் சேர்ந்ததே சராசரம்) ஆகிய இயங்குதிணை, நிலைத்திணைப் பொருட்கள் யாவையும் அதிலிருந்தே தோன்றின.

மூவகை உயிர்களும் [ ஒருமலமுடைய (ஆணவம் மட்டுமுடைய விஞ்ஞான கலர்), இருமலமுடைய (ஆணவம்,கன்மம் ஆகியவற்றை உடைய பிரளய கலர்), மும்மலமுடைய (ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை உடைய சகலர்) ] பிரணவத்திலிருந்தே தோன்றின.

ஓங்காரத்தின் உட்பொருளைக் குறிக்கவே கணேசப் பெருமானின் உருவத்தைக் கீழ்க்கண்டவாறு அமைத்துள்ளனர். ஓமே தலையாகவும், சுழி இரண்டும் கண்களாகவும், துதிக்கை சிரத்தினுள்ளே ஊறும் அமிர்தத்தை உறிஞ்சிப் பருகவும், மகாரமே வாயாகவும் விளங்கும்.

ஓங்கார விளக்கம் ஒரு கடல்.

பழமொழி 600
1.அகத்தினழகு முகத்தில் தெரியும்.

2.அகல உழுகிறதை விட ஆழ உழு.

3.அகல் வட்டம் பகல் மழை.

4.அக்கா இருக்கும்வரைதான் மச்சான் உறவு

5.அக்கா வைச்சிருந்தா அரிசி; தங்கை வச்சிருந்தா தவிடு.

6.அசடுக்கு வாக்கப்பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிட, சமத்துக்கு வாக்கப்பட்டு சட்டுன்னு தாலி அறுக்கலாம்.

7.அசைந்து தின்பது யானை, அசையாமல் தின்பது வீடு.

8.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

9. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.

10.அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

11.அடக்கமே பெண்ணுக்கு அழகு

12.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

13.அடாது செய்தவன் படாது படுவான்.

14.அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் தேனும்.

15.அடிக்கடி  அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே

16.அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் முகத்துக்கு முன் ஆடும்.

17.அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

18.அடியாத மாடு படியாது

19.அடியைப் போல அண்ணன் தம்பி உதவான்.

20.அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரன் நிம்மதி போச்சு.

21.அடுப்பிலெ இருக்கும் சட்டி பொறுத்தாலும் மூடி பொறுக்காதாம்.

22.அடுப்பே வனவாசம்; கடுப்பே கைலாசம்.

23.அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

24.அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது

25.அதை விட்டாலும் கதியில்லை; அப்புறம் போனாலும் விதியில்லை.

26.அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

27.அந்தி மழை அழுதாலும் விடாது.

28.அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

29.அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்

30.அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

31.அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?

32.அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

33.அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

34.அயலூரானுக்கு ஆத்தோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.

35.அயல்வீட்டானுக்குப் பரிந்துகொண்டு ஆம்படையானை அடித்ததுபோல்

36.அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

37.அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

38.அரிசி அளக்கும் படிக்கு அரிசியின் விலை தெரியுமா?

39.அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி(கல்) மூன்று வேண்டும்.

40.அரிசி என்று அள்ளிப்பார்ப்பாரும் இல்லை; உமி என்று ஊதிப்பார்ப்பாரும் இல்லை.

41.அரிசி பகையும் ஆம்படையான் பகையும் போல்(கணப்பொழுது)

42.அருக்காணி முத்து கரிக்கோலமானது போல்

43.அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

44.அரைத்துட்டிலே கலியாணம், அதிலே கொஞ்சம் வாணவேடிக்கை

45.அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

46.அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

47.அறச் செட்டு முழு நட்டம் .

48.அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்.

49.அறமுறுக்கினால் அத்துப் போகும்.

50.அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

51.அறிய அறியக் கெடுவார் உண்டா?

52.அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

53.அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

54.அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

55.அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

56.அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

57.அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

58.அறுதாலி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை

59.அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி

60.அறுப்புக் காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்.

61.அற்ப அறிவு அல்லற்கிடம்.

62.அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

63.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

64.அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

65.அழகுக்குச் செய்தது ஆபத்துக்கு உதவும்.

66.அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

67.அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

68.அழுது அழுது பெத்தாலும் அவளே பெறவேண்டும்

69.அவுசாரி ஆனாலும் முகராசி வேணும்