ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

Archive for 'சிவவாக்கியர் பாடல்கள்'

பிறப்பறுக்க

சிவவாக்கியர் – 95 *************** ஆலவித்தி லாலொடுங்கி யாலமான வாறுபோல் வேறுவித்து மின்றியே விளைந்துபோக மெய்திடீர் ஆறுவித்தை யோர்கிலீ ரறிவிலாத மாந்தரே! பாருமித்தை யும்முளே பரப்பிரம மானதே. ஆலவிதையோ சிறியது. அதற்குள் பெரிய ஆலமரம் உள்ளதை உண்ர்ந்தீரா? ஆலவிதை போன்ற நம் மனதில் தோன்றும் எண்ணங்களால் உண்டாகும் ஆசைகளால் ஆலமரம் பெருகுவதுபோல் பிறப்புக்கள் உண்டாகின்றன. இந்த எண்ணங்களை ஒழித்துத் தன்னுள் ஒடுங்கி ஆறு ஆதாரங்களையும் தாண்டிப் பரப்பிரும்மத்துடன் ஒன்றிடப் பிறப்பறுக்கலாம்.

சிவவாக்கியர் – 94

சிவவாக்கியர் – 94 94. என்னவென்று சொல்லுவே னிலக்கண மிலாததைப் பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பென மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல் என்னகத்து ளீசனும் யானுமல்ல தில்லையே செந்தமிழ்ப் பாடலுக்கு இலக்கணமில்லையோ? அப்படியானால் அது செந்தமிழ்ப் பண் ஆகாது. ஆகாயத்தில் மின்னல் தோன்றி ஆகாயத்திலே மறைந்து விடுவது போல என் உடலிலே மின்னல் போலத் தோன்றி என்னுள் கலந்து ஐக்கியமாகிவிடும் சக்தியை உணர்ந்தால் என் உள்ளத்தில் ஈசனும் இல்லை; நானும் இல்லை. ஒன்று கலந்து விடும் நிலை [...]

சிவவாக்கியர் – 93

93. மந்திரங்க ளுண்டுநீர் மயங்குகின்ற மானிடர் மந்திரங்க ளாவது மரத்திலூற லன்றுகாண் மந்திரங்க ளாவது மதித்தெழுந்த வாயுவை மந்திரத்தை யுண்டவர்க்கு மரணமேது மில்லையே “இறைவனைத் துதிக்க மந்திரங்கள் உண்டு; அவைகள் எனக்குத் தெரியாதே!” என மயங்குகின்ற மானிடரே! மந்திரங்கள் மரத்தில் ஊற்றெடுத்து சாறாக வெளிவருவது அல்ல. மத்தித்து எழுந்த வாயுவை(வாசிக்குதிரை) மேலேற்றி அதன் மேலேறி சவாரி செய்ய அதுவே மந்திரமாகும். இப்படிச் செய்து பலனடைந்தோருக்கு மரணம் இல்லையாம்.