ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'சித்தர் இலக்கியம்'

மின் நூல் – சிவவாக்கியர் பாடல்கள் – 1

  சிவவாக்கியர்   பாடல்கள் பாகம் – 1 வலையேற்றம்  காண்கிறது.

சிவவாக்கியர் பாடல்கள் – 100

சிவவாக்கியர் பாடல்கள் – 100 *******************************   மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும் மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே ஈன்றதாயு மப்பரு மியங்குகின்ற நாதமும் தோன்றுமண்ட லத்திலே சொல்லவெங்கு மில்லையே.   ஒரே எழுத்து அதுவாம். அதிலே மூவரும் தேவரும் தேடிடும் நவசக்தி. அவ்வெழுத்துள்ளே அஞ்செழுத்து மந்திரம் ஒலிக்கிறது. அதனால் உண்டாகும் நாத மண்டலத்திலே அம்மையும் அப்பனும் இயங்குகின்றனர். அவ்வெழுத்தின் கீர்த்தி சொல்லவும் அரிதே!  

சிவவாக்கியர் பாடல்கள் – 99

சிவவாக்கியர் பாடல்கள் – 99 ******************************   மூன்றுமண்ட லத்தினு முட்டினின்ற தூணிலும் நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த வட்சரம் ஈன்றதாயு மப்பனு மெடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோ ரெழுத்துளே சொல்லவெங்கு மில்லையே.   குண்டலினிப் பாம்பை எழுப்பி, சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்களிலும், அதை இணைக்கும் தண்டுவடத்தின் மூலம் மேலேற்றும் மந்திரம், தந்தை தாய் உரைத்த ஓரெழுத்தே! அதுவே குத்தெழுத்து. அவ்வோரெழுத்தைப் பற்றி சொல்லவொண்ணாதே!