Category Archives: விவேகாநந்தர்

சிந்தனைக்கு – 24

24.  பிரதிபலன் எதையும் கருதாமல் நாம் உலகிற்குச் செலுத்தும் ஒவ்வொரு நல்லெண்ணமும் நமக்குள் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த நல்லெண்ணமே பாவ புண்ணிய பலன்களில் இருந்து நம்மை விடுவிக்கிறது.

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு – 16 to 18

சிந்தனைக்கு - 16

****************

16.”முதலில் உங்களிடத்தில் நம்பிக்கை வையுங்கள்; பிறகு கடவுளிடத்தில் வையுங்கள். ஆற்றலும் தகுதியும் உள்ள பலசாலிகள் தாங்கள் விரும்பியவாறு உலகத்தை இயங்கச் செய்வர்; உணர்வதற்கு இதயமும், சிந்திப்பதற்கு மூளையும், உழைப்புக்கு வலிமை வாய்ந்த தோள்களும் நமக்குத் தேவை.”

சிந்தனைக்கு - 17

****************

17.”வேண்டும் என்று எதையும் தேடிச் செல்லவேண்டாம்; வேண்டாம் என் எதையும் ஒதுக்க வேண்டாம். எதிர்ப்படுவதை ஏற்றுக்கொள்ளுங்கள். எதனாலும் தடைப்படாமல் இருப்பதே சுதந்திரம்.”

சிந்தனைக்கு - 18

****************

18.”ஆரியர்களைப் பற்றியுள்ள கோட்பாடுகளையும் அவற்றின் விளைவாக ஏற்பட்டுள்ள தவறுகளையும், அத்தவறுகளின் விளைவாக விளைந்துள்ள தீமைகளையும், தென்னிந்தியாவின் நலத்தைக் கருதி ஒதுக்கித் தள்ளுவது அவசியம் ஆகிறது. இது தமிழர்களின் சுய மதிப்பு(மரியாதை)க்கு அவசியமாகும்.”

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு – 23

சிந்தனைக்கு – 23
******************

அன்பு ஒருபோதும் யாரையும் நிர்பந்திக்கவோ, கட்டாய படுத்தவோ, நிந்திக்கவோ செய்யத் துணிவதில்லை.

- விவேகாநந்தர்