Category Archives: சிந்தனைக்கு
சிவ வாக்கியம் – 306
சிவவாக்கியர் பாடல்கள் - 306
**********************************************
306. மூன்றுபத்து மூன்றையு மூன்றுசொன்ன மூலனே
தோன்றுசேர ஞானிகாள் துய்யபாத மென்றலை
என்றுவைத்த வைத்தபின் னியம்பு மஞ்செழுத்தையும்
தோன்றவோத வல்லிரேல் துய்யசோதி காணுமே.
தொண்ணூற்றி ஆறு தத்துவங்களையும் தன்னுடைய திருமந்திரத்தில் சொன்ன திருமூலன் வழியில் வந்த ஞானிகளே! துய்ய பாதத்தைக் கண்ணாக என் தலையில் வைத்துள்ளான் ஈசன். அதை அறிந்து ஓதும் ஐந்தெழுத்தையும் நினைவில் அழுத்தி ஓத வல்லவர்கள் ஆனால் பரிசுத்த சோதியான ஈசனைக் காணலாம்.
சிந்தனைக்கு 29 – 31
சிந்தனைக்கு 29 – 31
*******************
29. உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். கோழையாகவும் வேடதாரியாகவும் இருக்காதீர்கள்.
30. கொடுக்கும் சக்தி உங்களிடம் உள்ள வரையில் கொடுங்கள். அத்துடன் விட்டுவிடுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே மீளும்.
31. உள்ளத்தையும் உடலையும் பற்றிய கேடுகள் அனைத்தையும் எதிர்த்து நில்லுங்கள். அதில் வெற்றி பெறும் போது நீங்கள் நினைத்த அத்தனையும் கைகூடும் வல்லமை பெற்றிடுவீர்கள்.
- விவேகாநந்தர்
சிந்தனைக்கு 26 to 28
உழைப்பே வடிவெடுத்த சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடிச் செல்கிறாள்.
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்வீகத்தை வெளியே வரவழைக்கும்.
தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காக உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால், அதன்மூலம் நீ பாக்கியம் பெற்றவனாகிறாய்.
- விவேகாநந்தர்










