திருப்பாவை – 14
நாள் பதினான்கு – பாடல் பதினான்கு உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். உன் வீட்டு தோட்டத்துக் கிணற்றில் செங்கழுனீர் மலர் மலர்ந்து, ஆம்பல் (அல்லி) மலர் கூம்பிவிட்டது பார். காவியுடை அணிந்த வெள்ளைப் பற்களையுடைய [...]
Posted: December 29th, 2009 under திருப்பாவை, பக்தி, வைணவம்.
Comments: none
திருப்பாவை – 13
நாள் பதின்மூன்று – பாடல் பதின்மூன்று புள்ளின் வாய்க் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார் வெள்ளியெழந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிர்ந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். திருப்பாவையின் பதின்மூன்றாவது பாடல் விடியலைக் குறிக்கிறது. கன்னியர் பாவை நோன்பிருக்கக் ஒன்றுகூடி வந்து சேர்ந்து விட்டார்கள். கொக்கைப் போலத் தோன்றிய பகாசுரனைக் [...]
Posted: December 27th, 2009 under திருப்பாவை, பக்தி, வைணவம்.
Comments: none
திருப்பாவை – 12
நாள் பன்னிரெண்டு – பாடல் பன்னிரெண்டு கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். தலைவியின் இல்லத்துச் செல்வம் ஏராளமான பால்வளத்தைக் குறிப்பதாக அமைகிறது. அவளது சகோதரன் வீட்டில் இருக்கும் எருமைகள் கணக்கிலடங்காது இருப்பதால் அனைத்திலிருந்தும் பால் [...]
Posted: December 27th, 2009 under திருப்பாவை, பக்தி, வைணவம்.
Comments: none





