சிவவாக்கியர் பாடல்கள் – 99
சிவவாக்கியர் பாடல்கள் – 99 ****************************** மூன்றுமண்ட லத்தினு முட்டினின்ற தூணிலும் நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த வட்சரம் ஈன்றதாயு மப்பனு மெடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோ ரெழுத்துளே சொல்லவெங்கு மில்லையே. குண்டலினிப் பாம்பை எழுப்பி, சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்களிலும், அதை இணைக்கும் தண்டுவடத்தின் மூலம் மேலேற்றும் மந்திரம், தந்தை தாய் உரைத்த ஓரெழுத்தே! அதுவே குத்தெழுத்து. அவ்வோரெழுத்தைப் பற்றி சொல்லவொண்ணாதே!
Posted: May 14th, 2012 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள், ஞானம்.
Comments: none
சிவவாக்கியர் பாடல்கள் – 98
சிவவாக்கியர் பாடல்கள் – 98 ****************************** கடலிலே திரியுமாமை கரையிலேறி முட்டையிட்டுக் கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல் மடலுளே யிருக்குமெங்கள் மணியரங்க சோதியை உடலுளே நினைந்துநல்ல வுண்மையான வுண்மையே. கடலில் உள்ள ஆமை கரையேறி வந்து முட்டைகளை இடும். பின்னர் கடலுக்குள் செல்லும் ஆமை, கடலுக்குள்ளேயே இருப்பினும் தன் கவனம் முழுவதையும் தன் முட்டைமீதே வைத்திருக்கும். அச்சூட்டில் ஆமை குஞ்சு பொரிக்கும். அது போல, மனம், பார்வை ஆகியவற்றை ஒன்றித்து கவனமுடன் மடலுக்குள் இருக்கும் [...]
Posted: May 14th, 2012 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள், ஞானம்.
Comments: none
சிவவாக்கியர் பாடல்கள் – 97
சிவவாக்கியர் பாடல்கள் – 97 ****************************** இரண்டுமொன்று மூலமா யியங்குசக் கரத்துளே சுருண்டுமூன்று வளையமாய் சுணங்குபோற் கிடந்ததீ முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி யூடுபோய் அரங்கன்பட் டணத்திலே யமர்ந்ததே சிவாயமே. சூரிய சந்திர கலைகள் மூலாதாரத்தில் ஒன்றாகி, அங்கு, மூன்று வளையமாய் தேமல் போல் சுருண்டு கிடக்கும் குண்டலினித் தீயை எழுப்ப, அப்பொழுது சங்கின் ஓசை மூலநாடியின் உள்ளே போய் அரங்கன் பட்டணமாம் திரு+அரங்கத்துள்(சகஸ்ரகாரம்) வந்து அமரும்.
Posted: May 14th, 2012 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள், ஞானம்.
Comments: none





