பிரபுலிங்க லீலை – 4.11 to 4.15
பிரபுலிங்க லீலை – 4.11 ************************* மூக்கிலே முத்துமூக்கணி புனைதல் ************************************ 4.11 தன்னை நிந்தைசெய் வெண்ணகை மேற்பழி சார மன்னி யங்கது நிகரற வாழ்மனை வாய்தன் முன்னி றந்திடு வேனென ஞான்றுகொள் முறைமை என்ன வெண்மணி மூக்கணி யொருத்திநின் றிட்டாள். வெண்நகை – வெண்பல்; மன்னி – நிலைபெற்று; நிகர் அற – ஒப்பில்லாமல்; வாய்தல் – வாசல்; ஞான்றுகொள் – தூக்குப் போட்டுக் கொள்கிற; வெண்மணி மூக்கணி – வெள்ளை முத்துக் [...]
Posted: May 21st, 2012 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none
மின் நூல் – சிவவாக்கியர் பாடல்கள் – 1
சிவவாக்கியர் பாடல்கள் பாகம் – 1 வலையேற்றம் காண்கிறது.
Posted: May 15th, 2012 under e-book, சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள், ஞானம்.
Comments: 4
சிவவாக்கியர் பாடல்கள் – 100
சிவவாக்கியர் பாடல்கள் – 100 ******************************* மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும் மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே ஈன்றதாயு மப்பரு மியங்குகின்ற நாதமும் தோன்றுமண்ட லத்திலே சொல்லவெங்கு மில்லையே. ஒரே எழுத்து அதுவாம். அதிலே மூவரும் தேவரும் தேடிடும் நவசக்தி. அவ்வெழுத்துள்ளே அஞ்செழுத்து மந்திரம் ஒலிக்கிறது. அதனால் உண்டாகும் நாத மண்டலத்திலே அம்மையும் அப்பனும் இயங்குகின்றனர். அவ்வெழுத்தின் கீர்த்தி சொல்லவும் அரிதே!
Posted: May 14th, 2012 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள், ஞானம்.
Comments: none





