பழமொழி நானூறு – 1.3

1.3 சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொற்ந்தான் கல்லாத வாறு.

சோர்வு குற்றம், மனத் தளர்வு
கல்தொறும் கற்குங் காலத்தே
வழியிறங்கி வருந்தி
உற்று ஒன்று மனம் ஒருமைப்பட்டு
உழன்று வருந்தி

கற்றார் முன் ஒன்றைச் சொல்லும்போது குற்றம் உண்டாதலால் மனத் தளர்வின்றி, கற்கும்போது நான் கல்லாதவன் எனக் கருதி, விரயம் செய்த நாட்களுக்காக வருந்தி, மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து வருந்தி, அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின், பின்னும் நூல்களைக் கற்குந்தோறும் தன் கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவான்.

படிக்குந்தோறும் அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவனும் படிக்கவேண்டும்.

பழமொழி
*********
உற்று ஒன்று சிந்தித்து உழன்று ஒன்று அறியுமேல்

One Response to பழமொழி நானூறு – 1.3

 1. valaipookkal says:

  Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  வலைபூக்கள் குழுவிநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *