ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

1.பிரணாயாமம், மூச்சு பயிற்சி

பிரணாயாமம், மூச்சு பயிற்சி என்றால் என்ன?
***********************************************
இரண்டுமே ஒன்றுதான்.

இரேசகம்: 32 மாத்திரை அளவு

உயிர்க் காற்றை (வாசிக் குதிரையை) உள்ளே இழுத்தல்.

கும்பகம்: 64 மாத்திரை அளவு

அதை அப்படியே உள்ளே அடக்கி வைத்தல். இதுதான் வாசிக் குதிரையை அடக்குவது.

பூரகம்: 16 மாத்திரை அளவு

அடக்கியதை உள்ளேயே மெதுவாக வெளிவிடல்.

மாத்திரை அளவு:

கண்ணிமைப் பொழுதும்,கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்.” – பவணந்தி

எடுத்துக் காட்டு: “சிவசிவ” - 4 மாத்திரை

பிராணாயாமம்:

இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில்
நிறைவுசெய். உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் செய்யப் பலனில்லை.

வளிப்பயிற்சி: மூச்சுப் பயிற்சி : வாசி யோகம்:

இவையெல்லாம் ஒன்றே.

ஆனால் வெளிக்காற்றை உள்வாங்கி வெளிவிடுவது இல்லை. உள்ளே இருக்கும் பிராண வாயுவை உள்ளேயே இழுத்து, அடக்கி வைத்துப் பின் மெதுவாக உள்ளேயே வெளிவிடுதலாம்.

நாகப் பாம்பு மூச்சு விடுவதைக் கவனித்து அதுபோலச் செய்ய வேண்டும்.

இது கைவரத்தான் “ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து” சூரிய, சந்திர
அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.

அவரவர்க்கு எதுஎது கைவருகிறதோ அதிலிருந்து ஆரம்பித்துக் கொள்ளலாம். இதுவே முதல் படி.

ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து” சூரிய, சந்திர அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.

இரு கண்களாலும் மூக்கின் நுனியை பார்க்கவேண்டும். குவிந்த பார்வையாக
(
ஊசி முனை போல) நிலை நிறுத்த வேண்டும்.

பிறவி அறுக்க எண்ணம் உதிக்கும் மனம் அடங்க வேண்டும். மனத்தில் சலனம்
இல்லாமல் வைக்க வேண்டும். மனத்தில், சிவனின் உருவமோ, குருவின் உருவமோ, கோவிலின் உருவமோ இருந்தால் மனம் காலியாக இல்லையே? சூனியம்தானே வேண்டும்.

ஞானக் குறள்
*******************
79.
பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு.

வெட்டாத சக்கரமாம் பிரிவுபட்ட கண்களினால் கபாலக் குகையினுள்ளே அசைவற்ற மனத்தையும், நினைவையும் ஒன்றாகக் கருத்தில் கலந்து அகத்தவம் செய்தலே பிறப்பறுக்கும் வழி.

இன்னுமொரு வழி:

தியான முறைகள் பலதரப்பட்டவை.ஒவ்வொருவரும் தன் முறையே உயர்வு என போற்றிக்கொள்வர். தியானத்தால் சாதிக்க வேண்டியது என்ன?

மனமடங்கி ஒருநிலைப் படுதல். ஆணவம், கன்மம், மாயை (ஒழிதல் மிகக் கடினம்) வெறுத்துக் குறைத்தல். சகல உயிர்களிடத்தும் கருணை, அன்பு காட்டல். இனிய வார்த்தை சொல்லல்.

காலம் வீணாக்காமை. எக்காலத்தும் இறைச் சிந்தனையோடு செயல்படல். சும்மா இருத்தல் (சோம்பி அல்ல).

அகம்பாவமற்ற பணிவுடைமை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஞானாசிரியன்(குரு) இல்லதவர்கள் செய்யவேண்டியது இரு முறைகள்:

1.எண்ணும் எழுத்தும் - தங்களுக்குப் பிடித்த ஒரு இறைநாமத்தை (சிவா,
நாராயணா, அம்மா, தாயே…) உச்சரித்தல். அப்படி உச்சரிக்கும்போது, கையில்
ஒரு மணிமாலை (ஏதாகவிருப்பினும் சரி. படிகம்தான் நல்லது. இல்லை!
இல்லை! உருத்திராக்கம்தான் நல்லது என்று யார் சொன்னாலும் செவிகொடாதீர்) வைத்துக் கொண்டு எத்தனை முறையென மனதிற்குள் எண்ணிவருதல் அவசியம்.

இதால், உச்சரிக்கும் மந்திரமும் எண்ணிக்கையும் மட்டும்தான் மனதில்
நிற்கும். மனமடங்கி ஒரு சுகம் கிட்டும்.

2. MEDITATION FOR DUMMIES
******************************
ஒன்றையும் நினையாது மூச்சுக்கற்றின் பாதையை மட்டும் நினைவினில்
நிறுத்தி, அந்த மூச்சு போகும் வழி, வரும் வழியைக் கூர்ந்து நோக்குதல். இவைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் முக்கலையொன்றித்தல் (சூரிய, சந்திர, அக்கினி) தானாகவே கைவரும்.

இதையாவது செய்து பாருங்களேன்.

பி.கு: ஞானத்தினால் முத்திபெற்ற ஞானி இல்லை. நான் சென்ற வழியென்று கைகாட்டி மரம்போல் வழிகாட்டுகிறேன். அவரவர்க்கு அதது.
இதற்குக் காணிக்கை யாரும் அனுப்பவேண்டாம். காசு வாங்கினால் எனக்குப் பலிக்காது.

Comments

Comment from செங்கம் சிவா
Time: April 4, 2008, 5:28 am

உள்ளே இருக்கும் ப்ராணவாயுவை உள்ளே இழுப்பதா? அது எப்படி ஐயா? கொஞ்சம்
சொல்ல முடியுமா??? தயய் கூர்ந்து???

அன்புடன்
செங்கம் சிவா

Comment from ஞானவெட்டியான்
Time: April 4, 2008, 5:28 am

அன்பு சிவா,

> உள்ளே இருக்கும் ப்ராணவாயுவை உள்ளே இழுப்பதா? அது எப்படி ஐயா? கொஞ்சம் சொல்ல
> முடியுமா???

அதற்கு ஒரு ஞானாசிரியன்(குரு) தேவை. இதற்காகத்தான் மூன்று கலைகளையும் ஒன்று சேர்க்க இரண்டாவது வழி ஒன்று சொல்லியிருக்கிறேனே?

அதை முயன்று பாருங்கள். கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது; கண் வலிக்கிறதுஎன விட்டு விடாதீர்கள்.

Comment from சிவசங்கர்.மு.
Time: April 4, 2008, 5:29 am

இரண்டாவது வழி அப்படினா என்னது ஐயா?

எனக்கு மானசீக குருவாக பாலகுமாரன் அவர்களை ஏற்று இருக்கிறேன் ஐயா…நிறைய விஷயங்களை அவர் எழுத்துக்கள் எனக்கு ஜனரஞ்சகமாக புரியவைத்திருக்கின்றன…இப்பொழுது சமீபமாக அவரின் உடையார் புத்தகம் படித்து மனம் முழுக்க தஞ்சை பெரியகோவில் வந்து அமர்ந்து இருக்கிறது, அதை ஒருமுறை சிறு வயதில் பார்த்துஇருக்கிறேன், ஆனாலும் இப்பொழுது பார்க்க நினைப்பது அதன் முழு பரிணாமமும் புரிந்து, அதுபோல் தங்களுக்கு ஏதேனும் புத்தகங்கள் தெரிந்து இருந்தாலும் சொல்லுங்களேன் ஐயா…
அன்புடன்
சிவசங்கர்.மு.

Comment from ஞானவெட்டியான்
Time: April 4, 2008, 5:30 am

அன்பு சிவா,

இது கைவரத்தான் “ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து” சூரிய, சந்திர
அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.

இரு கண்களாலும் மூக்கின் நுனியை பார்க்கவேண்டும். குவிந்த பார்வையாக
(ஊசி முனை போல) நிலை நிறுத்த வேண்டும்.

பிறவி அறுக்க எண்ணம் உதிக்கும் மனம் அடங்க வேண்டும். மனத்தில் சலனம் இல்லாமல் வைக்க வேண்டும். மனத்தில், சிவனின் உருவமோ, குருவின் உருவமோ,கோவிலின் உருவமோ இருந்தால் மனம் காலியாக இல்லையே?சூனியம்தானே வேண்டும்.

ஞானக் குறள்
*******************
79. பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு.

வெட்டாத சக்கரமாம் பிரிவுபட்ட கண்களினால் கபாலக் குகையினுள்ளே அசைவற்ற மனத்தையும், நினைவையும் ஒன்றாகக் கருத்தில் கலந்து அகத்தவம் செய்தலே
பிறப்பறுக்கும் வழி.

இன்னுமொரு வழி:

தியான முறைகள் பலதரப்பட்டவை.ஒவ்வொருவரும் தன் முறையே உயர்வு என
போற்றிக்கொள்வர். தியானத்தால் சாதிக்க வேண்டியது என்ன?

மனமடங்கி ஒருநிலைப் படுதல். ஆணவம், கன்மம், மாயை (ஒழிதல் மிகக் கடினம்)வெறுத்துக் குறைத்தல். சகல உயிர்களிடத்தும் கருணை, அன்பு காட்டல். இனிய வார்த்தை சொல்லல்.

காலம் வீணாக்காமை. எக்காலத்தும் இறைச் சிந்தனையோடு செயல்படல். சும்மா இருத்தல் (சோம்பி அல்ல).

அகம்பாவமற்ற பணிவுடைமை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஞானாசிரியன்(குரு) இல்லதவர்கள் செய்யவேண்டியது இரு முறைகள்:

1.எண்ணும் எழுத்தும் – தங்களுக்குப் பிடித்த ஒரு இறைநாமத்தை (சிவா,
நாராயணா, அம்மா, தாயே…) உச்சரித்தல். அப்படி உச்சரிக்கும்போது, கையில் ஒரு மணிமாலை (ஏதாகவிருப்பினும் சரி. ஸ்படிகம்தான் நல்லது. இல்லை! இல்லை! உருத்திராக்கம்தான் நல்லது என்று யார் சொன்னாலும் செவிகொடாதீர்).
வைத்துக் கொண்டு எத்தனை முறையென மனதிற்குள் எண்ணிவருதல் அவசியம்.

இதால், உச்சரிக்கும் மந்திரமும் எண்ணிக்கையும் மட்டும்தான் மனதில்
நிற்கும். மனமடங்கி ஒரு சுகம் கிட்டும்.

2.ஒன்றையும் நினையாது மூச்சுக்கற்றின் பாதையை மட்டும் நினைவினில் நிறுத்திப் போகும் வழி, வரும் வழியைக் கூர்ந்து நோக்குதல். இவைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் முக்கலையொன்றித்தல் (சூரிய, சந்திர,
அக்கினி) தானாகவே கைவரும்.

இதையாவது செய்து பாருங்களேன்.

Comment from venkatesh
Time: September 11, 2009, 8:39 pm

it is a very good useful for meditation

Comment from umasankar
Time: September 21, 2009, 10:49 pm

விவேகனந்தரின் ராஜ யோகம் படித்து பாருங்கள்… நான் பதினேழு வருடங்களுக்கு முன்பே அதன் மதிப்பை உணர்ந்துள்ளேன் ….

Comment from ஞானவெட்டியான்
Time: October 10, 2009, 10:44 am

அன்புடையீர்,
யாமும் 49 ஆண்டுகளாக வாசியோகம் செய்து வருகிறோம்!

Comment from balaji
Time: July 1, 2010, 8:45 pm

உள்ளே இருக்கும் பிராண வாயுவை உள்ளேயே இழுத்து, அடக்கி வைத்துப் பின் மெதுவாக வெளிவிடுதலாம்இல்லை! பிராண வாயுவை உள்ளேயே இழுத்துஉள்ளேயே விடுதலாம்

Comment from ஞானவெட்டியான்
Time: July 3, 2010, 9:46 am

அன்பு நண்பரே,
நாமும் அதைத்தான் சொல்லியுள்ளோம். இரு இடத்திலும் “உள்ளேயே” எனும் பதம் மறைபொருளாக உள்ளது. தங்களின் பின்னூட்டத்திற்கிணங்கி நாம் அதை மாற்றிவிட்டோம்.

Comment from kumaravel
Time: November 20, 2010, 1:29 pm

thank you sir,the details of your explanation is good. how to train the vasi yogam, please explain. how to attain the stage of siddar. for details please mail.

Comment from ஞானவெட்டியான்
Time: November 21, 2010, 11:55 am

பிரணாயாமம், மூச்சு பயிற்சி இரண்டுமே ஒன்றுதான்.

இரேசகம்: 32 மாத்திரை அளவு

உயிர்க்காற்றை (வாசிக் குதிரையை) உள்ளிருந்து இழுத்தல்.

கும்பகம்: 64 மாத்திரை அளவு

அதை அப்படியே உள்ளே அடக்கி வைத்தல். இதுதான் வாசிக் குதிரையை அடக்குவது.

பூரகம்: 16 மாத்திரை அளவு

அடக்கியதை மெதுவாக உள்ளேயே வெளிவிடல்.

மாத்திரை அளவு:

“கண்ணிமைப் பொழுதும்,கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்.” – பவணந்தி

எடுத்துக் காட்டு: “சிவசிவ” – 4 மாத்திரை

பிராணாயாமம்:

இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய். உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் செய்யப் பலனில்லை.

வளிப்பயிற்சி: மூச்சுப் பயிற்சி : வாசி யோகம்:

இவையெல்லாம் ஒன்றே.

ஆனால் வெளிக்காற்றை உள்வாங்கி வெளிவிடுவது இல்லை. உள்ளே இருக்கும் பிராண வாயுவை உள்ளேயே இழுத்து, அடக்கி வைத்துப் பின் மெதுவாக உள்ளேயே வெளிவிடுதலாம்.

நாகப் பாம்பு மூச்சு விடுவதைக் கவனித்து அதுபோலச் செய்ய வேண்டும்.

இது கைவரத்தான் “ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து” சூரிய, சந்திர
அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.

அவரவர்க்கு எதுஎது கைவருகிறதோ அதிலிருந்து ஆரம்பித்துக் கொள்ளலாம். இதுவே முதல் படி.

“ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து” சூரிய, சந்திர அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.

இரு கண்களாலும் மூக்கின் நுனியை பார்க்கவேண்டும். குவிந்த பார்வையாக
(ஊசி முனை போல) நிலை நிறுத்த வேண்டும்.

பிறவி அறுக்க எண்ணம் உதிக்கும் மனம் அடங்க வேண்டும். மனத்தில் சலனம்
இல்லாமல் வைக்க வேண்டும். மனத்தில், சிவனின் உருவமோ, குருவின் உருவமோ, கோவிலின் உருவமோ இருந்தால் மனம் காலியாக இல்லையே? சூனியம்தானே வேண்டும்.

ஞானக் குறள் :

79. பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு.

வெட்டாத சக்கரமாம் பிரிவுபட்ட கண்களினால் கபாலக் குகையினுள்ளே அசைவற்ற மனத்தையும், நினைவையும் ஒன்றாகக் கருத்தில் கலந்து அகத்தவம் செய்தலே பிறப்பறுக்கும் வழி.

இன்னுமொரு வழி:

தியான முறைகள் பலதரப்பட்டவை.ஒவ்வொருவரும் தன் முறையே உயர்வு என போற்றிக்கொள்வர். தியானத்தால் சாதிக்க வேண்டியது என்ன?

மனமடங்கி ஒருநிலைப் படுதல்.
ஆணவம், கன்மம், மாயை (ஒழிதல் மிகக் கடினம்) வெறுத்துக் குறைத்தல்.
சகல உயிர்களிடத்தும் கருணை, அன்பு காட்டல் .
இனிய வார்த்தை சொல்லல் .
காலம் வீணாக்காமை.
எக்காலத்தும் இறைச் சிந்தனையோடு செயல்படல் .
சும்மா இருத்தல் (சோம்பி அல்ல).
அகம்பாவமற்ற பணிவுடைமை.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஞானாசிரியன்(குரு) இல்லாதவர்கள் செய்யவேண்டியது இரு முறைகள்:

1.எண்ணும் எழுத்தும் – தங்களுக்குப் பிடித்த ஒரு இறைநாமத்தை (சிவா,
நாராயணா, அம்மா, தாயே…) உச்சரித்தல். அப்படி உச்சரிக்கும்போது, கையில்
ஒரு மணிமாலை (ஏதாகவிருப்பினும் சரி. படிகம்தான் நல்லது. இல்லை!
இல்லை! உருத்திராக்கம்தான் நல்லது என்று யார் சொன்னாலும் செவிகொடாதீர்) வைத்துக் கொண்டு எத்தனை முறையென மனதிற்குள் எண்ணிவருதல் அவசியம்.

இதனால், உச்சரிக்கும் மந்திரமும் எண்ணிக்கையும் மட்டும்தான் மனதில்
நிற்கும். மனமடங்கி ஒரு சுகம் கிட்டும்.

அதுவும் இயலாதோருக்கு::

ஒன்றையும் நினையாது மூச்சுக்கற்றின் பாதையை மட்டும் நினைவினில்
நிறுத்தி, அந்த மூச்சு போகும் வழி, வரும் வழியைக் கூர்ந்து நோக்குதல். இவைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் முக்கலையொன்றித்தல் (சூரிய, சந்திர, அக்கினி) தானாகவே கைவரும். இதையாவது செய்து பாருங்களேன்.

Comment from visvanathan mp
Time: February 18, 2011, 2:07 pm

master

i hav seen yr website pls send your address

visvanathan mp
9047005123

Comment from Kennedy
Time: May 25, 2011, 1:35 am

You are entirely wrong Mr.Gnana vettian,

All things are only simple calculation.That is 1:4:2.Do u understand?

Inhale 16 Seconds>Withhold 64 Seconds>Exhale 32 Seconds.

I have evidence!

Pooragam always first then kumbagam finally resagam.Mind it and republish accordingly….

Comment from ஞானவெட்டியான்
Time: August 20, 2011, 10:04 am

My dear Kennedy,
Sorry for the delay. Your comment was lying all along in “SPAM” folder.
சிவசிவ = 4 secs
Inhale = பூரகம் =16 secs = 4 times சிவசிவ
Withhold = கும்பம் = 64 secs = 16 times சிவசிவ
Exhale = இரேசகம் = 32 secs = 8 times சிவசிவ

“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.”

வாமம் = இடகலை.
ஈரெட்டு = பதினாறு மாத்திரை, அறுபத்தி நான்கு மாத்திரை.
மாறுதல் = மடை மாறுதல். சிவசிவ என்பது நான்கு மாத்திரை.

“சிவசிவ” எனும் மந்திரமே செந்தமிழ்த் திருமாமறை முடிபு.

ஏறுதல் – பூரகம்:
சிவசிவ என நான்குமுறை கணித்து(இடது நாசியை வலது கையின் மோதிர விரல், சுண்டு விரல்களால் அடைத்து) வலது நாசித்துவாரத்தினால் தூய மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல்.

ஆறுதல் – கும்பகம்:
சிவசிவ எனப் பதினாறுமுறை கணித்து உள்ளிழுத்த மூச்சை மூடி உள்ளே நிறுத்தல்.

ஊறுதல் – இரேசகம்:
உள் நிறுத்திய மூச்சை சிவசிவ என எட்டுமுறை கணித்து வல நாசித் துளை வழியே மெதுவாக வெளியில் விடுவது.

இவ்வாறே, மடைமாற்றி இடநாசி வழியாகவும் செய்தல் வேண்டும். இங்ஙனம் இயன்ற அளவு மாறிமாறிப் பயிலல் வேண்டும்.

256. முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி. (ஞானக்குறள்)

இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில் நிறைவுசெய்.

உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் இம்முறையில் செய்யப் பலனில்லை.

முதலில் உள்ளே இருக்கும் அசுத்தக் காற்றை வெளியே தள்ளினால்தான் உள்ளிருக்கும் உயிர்ப்புக் காற்றை உள்வாங்கி நிரப்ப இயலும். ஆகவே அவ்வை கூறியுள்ளாள் : முன்னம் இரேசி

//Mind it and republish accordingly….//
Can these words be placed LITTLE POLITELY?

என் வயது 71. ஐம்பத்தி மூண்றாண்டு யோகப்பயிற்சி செய்து பலன் கண்டபின், தாங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக மாற்ற இயலாது. உண்மை உண்மையே!

நூலாதாரங்கள் தந்துள்ளேன். முழுவதையும் படியுங்கள். பின்னர் ஐயமிருப்பின் யோகம் தெரிந்த நல்ல குருவிடம் கேட்டு அறிந்து கொள்ளவும்.

Write a comment