ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

தனித் தமிழில் உரையாடத் தவிற்கவேண்டிய சொற்கள்

தனித் தமிழில் உரையாடத் தவிற்கவேண்டிய சொற்கள்
**************************************************************
தவிற்கவேண்டிய சொற்கள்

Comments

Comment from பெருவிஜயன்
Time: April 8, 2008, 10:41 pm

நல்ல பதிவு. தகவலுக்கு நன்றி.

Comment from நற்கீரன்
Time: April 8, 2008, 10:42 pm

நல்ல தொகுப்பு. பொதுவாக தமிழ் மொழியில் ஒரு தொடர்ச்சியை பேணுவதற்காகத்தான் தமிழ் சொற்கள் பயன்படுத்தல் நன்று என்று நினைக்கின்றேன். அதாவது, சுமார் 2000 வருடங்களுக்கு முன்னே எழுதப்பட்டவை கூட சற்று பயிற்சி எடுத்தால் இன்றும் புரிந்து கொள்ளலாம் என்று எங்கேயோ படித்த நினைவு. நன்றி.

Comment from மணியன்
Time: April 8, 2008, 10:43 pm

ஐயா,நல்ல பயனுள்ள பதிவு. ஆனால் படமாக உள்ளதால் படிப்பது கடினமாக உள்ளது. நேரிடையாக இடமுடியுமா?
உங்கள் குடமுழுக்கு பாடலையும் சரியாக படிக்க முடியவில்லை :(

Comment from சம்மட்டி
Time: April 8, 2008, 10:49 pm

ஐயா,
உங்கள் பணி சிறப்பாக உள்ளது. இந்த அட்டவனையில் உள்ள பைந்தமிழ் சொற்கள் இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது என்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. 1900- 1960 வரையில் அட்டவணையில் உள்ள வடமொழிச்சொற்கள் புழக்கதில் இருந்தன என்பது அன்றை தமிழ் நூல்களைப்பார்க்கும் போது தெரிகிறது. அன்று பத்திரிக்கை எல்லாம் வடமொழிக்கார்களிடமிருந்தது தான் காரணம் என்று எண்ணத்தோன்றுகிறது. இன்றைக்கு தமிழ்சொற்கள் மீண்டும் புழங்குவது பெரியார்காலத்திற்கு பிறகு ஏற்பட்ட ஒரு நல்ல மாற்றமாகும். இவை வலைப்பூக்களில் தொடர்ந்தால் நம் தமிழ் அழுக்குகளிலிருந்து ஒளிர ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன்.
மணிப்ரளவ நடையிலிருந்து நாம் மீண்டுகொண்டிருக்கிறோம்

சம்மட்டி

Comment from முத்து (தமிழினி)
Time: April 8, 2008, 10:50 pm

உருப்படியான காரியம் அய்யா..நன்றி

உங்கள் பெயரில் ஒரு சித்தர் இருந்தாராமே..உண்மையா?

Comment from குமரன்(kumaran)
Time: April 8, 2008, 10:51 pm

ஐயா,

உங்கள் அனுமதி இருந்தால், நேரம் கிடைக்கும் போது இங்கு படத்தில் இருப்பவைகளைத் தனிப் பதிவாகவே இடுகிறேன்.

தொகுப்பு அருமையாக இருக்கிறது. நானும் இதிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். மிக்க நன்றி ஐயா.

Comment from ஞானவெட்டியான்
Time: April 8, 2008, 10:51 pm

அன்பு மணியன்,

// ஐயா,நல்ல பயனுள்ள பதிவு. ஆனால் படமாக உள்ளதால் படிப்பது கடினமாக உள்ளது. நேரிடையாக இடமுடியுமா?
உங்கள் குடமுழுக்கு பாடலையும் சரியாக படிக்க முடியவில்லை :( //

தொழில் நுட்ப அறிவு சிறிது குறைவு. அப்படியே PDF ஆக வலையேற்றமுடியவில்லை. என்ன செய்வது. EXCELL கோப்பில் உள்ளது. யார் கேட்டாலும் தருகிறேன்; அதை அனுப்பும் வழி,உறை சொன்னால்.

Comment from sk
Time: April 8, 2008, 10:52 pm

ஒரு ‘படத்தின்’ மேல் சொடுக்குங்கள்.
அது தனியாக ஒரு திரையில் வரும்.
அப்போது, அதன் கீழே, அதனைப் பெரிது படுத்தும் ‘அம்புக்குறி’ தெரியும்.
இப்போது, அதன் மேல் சொடுக்குங்கள்.
படம் பெரிதாகத் தெரியும்.
நகலும் எடுக்க முடியும்.
இப்படியே, எல்லாப் படத்தையும், ‘சொடுக்கி’,
‘அம்புக்குறி’யின் மேல் மீண்டும் சொடுக்கி,
‘பெரிது பண்ணி’,
‘நகல்’ எடுத்துப் பயனடையுங்கள் !

Comment from கோபி(Gopi)
Time: April 8, 2008, 10:53 pm

ஐயா,

அருமையான பதிவு!

Excel கோப்பிலிருந்து Blogger – Create Postல் அப்படியே வெட்டி ஒட்டினால் TABLEவடிவில் வரும். பிறகு அதனை வேண்டிய மாற்றங்களுடன் பதிக்கலாம்.

படமாக பதிக்க விரும்பினால், JPGக்கு பதிலாய் 2 Color GIFஆகச் சேமித்து பிறகு பதித்தால் இன்னும் சிறிய கோப்பாய் சேமிக்க முடியும். பதிவிறங்கும் நேரமும் குறையும்.

Comment from திருப்பாச்சி
Time: April 8, 2008, 10:54 pm

நல்ல பதிவு. பயனுள்ள பதிவு.

Comment from ரவிசங்கர்
Time: April 8, 2008, 10:54 pm

நல்ல பட்டியல். இது போன்ற இன்னும் பல சொற்களை தொகுத்து தந்தால் பயனுள்ளதாய் இருக்கும். இச்சொற்களை கட்டற்ற அகரமுதலியான தமிழ் விக்சனரி தளத்திலும் உள்ளிட்டு வருகிறேன். இதனால், இச்சொற்களுக்கு பரவலான அறிமுகம் கிடைக்கும். நன்றி

Comment from sivabalan
Time: April 8, 2008, 10:55 pm

அய்யா

மிகவும் உபயோகமான பதிவு.

வாழ்த்துக்கள் அய்யா.

பதிவுக்கு மிக்க நன்றி

Comment from பெத்தராயுடு
Time: April 8, 2008, 10:56 pm

//தொழில் நுட்ப அறிவு சிறிது குறைவு. அப்படியே PDF ஆக வலையேற்றமுடியவில்லை. என்ன செய்வது. EXCELL கோப்பில் உள்ளது. யார் கேட்டாலும் தருகிறேன்; அதை அனுப்பும் வழி,உறை சொன்னால்.//

ஐயா,

இதற்கு ஒரு வழியுண்டு.

1. தங்கள் கணினியில் ‘cutepdf writer’ ( http://www.cutepdf.com/download/CuteWriter.exe ) என்ற இலவச மென்பொருளை நிறுவுங்கள்.
2. எந்த ஆவணத்தை pdf ஆக மாற்றவேண்டுமோ அந்த ஆவணத்தை அதன் application-ல் திறந்து print option-ல் cutepdf-ஐத் தேர்ந்தெடுத்து ஒரு கோப்பின் பெயர் கொடுத்தால், அந்த கோப்பில் pdf முறையில் சேமிக்கப்பட்டுவிடும்.

Comment from FloraiPuyal
Time: April 8, 2008, 10:57 pm

பல சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றவை. அவற்றையும் தமிழல்ல என்று ஒதுக்குவது முறையல்ல என்றே எண்ணுகிறேன்.

Comment from G.Ragavan
Time: April 8, 2008, 10:58 pm

நல்லதொரு பதிவு. ஒருமுறை படித்தேன். அவ்வப்பொழுது படித்து முடிந்த அளவிற்குப் பயன்படுத்துகிறேன்.

மயிலாடுதுறையைப் பார்த்ததும் குரங்காடுதுறை நினைவிற்கு வந்தது (கபிஸ்தலம்) :-)

மிக நல்ல பணி ஐயா.

Comment from வெற்றி
Time: April 8, 2008, 10:58 pm

ஐயா,
மிகவும் பயனுள்ள பதிவு. அதேநேரம் சில ஐயங்களும் எழுகின்றன. என் குழப்பத்தைத் தெளிவு படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சில சொற்கள்:
1.பசு
2.ஆதி
3.தீபம்
4.சுகம்
5.பிச்சைக்காரன்

ஐயா,மேற் குறிப்பிட்ட சொற்கள் தமிழ்ச்சொற்கள் இல்லையா? அய்யன் வள்ளுவனே ஆதி எனும் சொல்லைப் புழங்கியுள்ளாரே!
எடுத்துக்காட்டு:-
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பசு என்பதும் தமிழ்ச் சொல் இல்லையா?

யாவர்க்கு மாம் பசு வுக்கொரு வாயுறை

என திருமூலர் பசு எனும் சொல்லைப் புழங்கியுள்ளாரே.

சுகம் எனும் சொல் தமிழில்லையா? ஈழத்தில் நலமா/செளக்கியமா எனும் சொற்களுக்குப் பதிலாகப் பேச்சுத்தமிழில் சுகம் எனும் சொல்லைத்தான் புழங்குவார்கள். நன்றி.

Comment from அ.பசுபதி
Time: April 8, 2008, 10:59 pm

ஆகவும் சிறந்த இடுகை.
-தேவமைந்தன்

Comment from ஞானவெட்டியான்
Time: April 8, 2008, 11:09 pm

அன்பு பெருவிஜயன்,, திருப்பாச்சி, இரவிசங்கர், சிவபாலன், பெத்தராயுடு, இராகவன், பசுபதி,

மிக்க நன்றி.

Comment from ஞானவெட்டியான்
Time: April 8, 2008, 11:10 pm

அன்பு நற்கீரனாரே,

//சுமார் 2000 வருடங்களுக்கு முன்னே எழுதப்பட்டவை கூட சற்று பயிற்சி எடுத்தால் இன்றும் புரிந்து கொள்ளலாம் //

ஆமாம். உரையாடும்பொழுது ஒரு மணித்தியாலம் சிந்தித்தால் இவைகளப் படிப்படியாகத் தடுத்துவிடலாம் என்பது எம் புரிதல்.

Comment from ஞானவெட்டியான்
Time: April 8, 2008, 11:10 pm

அன்பு சம்மட்டி,

//இன்றைக்கு தமிழ்சொற்கள் மீண்டும் புழங்குவது வலைப்பூக்களில் தொடர்ந்தால் நம் தமிழ் அழுக்குகளிலிருந்து ஒளிர ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன்.//

ஆமாம். அப்பயன் கருதியே மிகுந்த பாடுபட்டு இவ்விடுகையை இட்டுள்ளேன்.

பலன் கிட்டுமாயின் மகிழ்வேன்.

Comment from ஞானவெட்டியான்
Time: April 8, 2008, 11:10 pm

அன்பு முத்து(தமிழினி),

மிக்க நன்றி.

“ஞானவெட்டியான்” என வழங்கப்பெறும் நூல் முன்னர் “ஞானம் எட்டி” எனத் திருவள்ளுவர் என்பவரால் எழுதப்பட்டதென்பர். ஆயினும் அதில் காணப்பெறும் கிரந்த எழுத்துக்களும், வடமொழிச் சொற்களும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவரால் எழுதப்பட்டிருக்காது என ஆய்வு செய்தவர்களின் கருத்து. என் கருத்துமதே.

இதன் நடையைக் கூர்ந்து நோக்கின், 16 அல்லது 17 நூற்றாண்டு எழுதப்பெற்றிருக்கலாம். ஔவையில் பலரிருந்ததைப்போல் திருவள்ளுவர் (2) எனும் புனைப் பெயரில் அடையாளம் காட்டவிரும்பா ஒருவரால் எழுதப்பட்டிருக்கலாம்.

இந்நூல் “ஞானம் வெற்றி” என வழங்கியதாகவும், இதுவே பின்னர் “ஞானம் வெட்டி”என்றாகி “ஞானவெட்டியான்” என்றாகியது எனவும் மெய்வழி குழந்தைசாமிக் கவுண்டர் கூறுவார்.

அந்த ஞானவெட்டியானின் பெயரையே எமக்கு திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் ஐயா ஈந்தார். ஞானவெட்டியான் எனும் பெயரில் சித்தர் இருந்ததாகத் தெரியவில்லை.

Comment from ஞானவெட்டியான்
Time: April 8, 2008, 11:11 pm

அன்பு குமரன்,
கரும்பு தின்னக் கூலியா?
நன்றாகச் செய்யுங்கள்.
மகிழ்ச்சி.

Comment from ஞானவெட்டியான்
Time: April 8, 2008, 11:11 pm

அன்பு SK,

படியெடுக்கும் முறை கற்றுத்தந்தமைக்கு நன்றி.

அன்பு கோபி,
வழி கற்றுத் தந்தமைக்கு மிக்க நன்றி.

Comment from சம்மட்டி
Time: April 8, 2008, 11:12 pm

//அந்த ஞானவெட்டியானின் பெயரையே எமக்கு திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் ஐயா ஈந்தார். ஞானவெட்டியான் எனும் பெயரில்//
வசிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிசிப்பட்டம் என்பது போல் இருக்கிறது. உங்களுக்கு மிகவும் பொருத்தமான பட்டம் தான்.

Comment from ஞானவெட்டியான்
Time: April 8, 2008, 11:13 pm

அன்பு சம்மட்டி,
மிக்க நன்றி.

Comment from ஞானவெட்டியான்
Time: April 8, 2008, 11:14 pm

அன்பு FloraiPuyal,
ஆம். சொற்களின் வேர், கிளை ஆகியவற்றின் இனம்கண்டு முடிவெடுக்கலாம்.

Comment from ஞானவெட்டியான்
Time: April 8, 2008, 11:14 pm

அன்பின் வெற்றி,
// ஐயா,
மிகவும் பயனுள்ள பதிவு. அதேநேரம் சில ஐயங்களும் எழுகின்றன. என் குழப்பத்தைத் தெளிவு படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சில சொற்கள்:
1.பசு
2.ஆதி
3.தீபம்
4.சுகம்
5.பிச்சைக்காரன்

ஐயா,மேற் குறிப்பிட்ட சொற்கள் தமிழ்ச்சொற்கள் இல்லையா? அய்யன் வள்ளுவனே ஆதி எனும் சொல்லைப் புழங்கியுள்ளாரே!
எடுத்துக்காட்டு:-
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

பசு என்பதும் தமிழ்ச் சொல் இல்லையா?

யாவர்க்கு மாம் பசு வுக்கொரு வாயுறை

என திருமூலர் பசு எனும் சொல்லைப் புழங்கியுள்ளாரே.

சுகம் எனும் சொல் தமிழில்லையா? ஈழத்தில் நலமா/செளக்கியமா எனும் சொற்களுக்குப் பதிலாகப் பேச்சுத்தமிழில் சுகம் எனும் சொல்லைத்தான் புழங்குவார்கள். நன்றி.//

பசு, ஆதி ஆகியவை தமிழ்ச் சொற்களே. இவற்றைவிட நல்ல தனித்தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டவே இவ்வட்டவணையில் சேர்க்கப்பட்டன.

தீபம்,சுகம்,பிச்சைக்காரன் ஆகியவை தமிழ்ச் சொற்கள் அல்ல. எடுத்துக்காட்டாக,
பிக்ஷை என்பதிலிருந்து வந்தது பிச்சைக்காரன்.
தீப் என்பதிலிருந்து வந்தது தீபம். ஸுகம் என்பதிலிருந்து வந்தது சுகம்.

Comment from வெற்றி
Time: April 8, 2008, 11:14 pm

ஐயா,
என் ஐயங்களைத் தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

Write a comment