செய்யாதே! – விவேக சிந்தாமணி – 2.99

செய்யாதே!

விவேக சிந்தாமணி – 2.99

தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்

ஊன் கெடினு முண்ணார்க்கைத் துண்ணற்க – வான் கவிந்த

வையக மெல்லாம் பெறினு முரையற்க

பொய்யோ டிடை மிடைந்த சொல்.”

ஒருவன் தான் கெட்டுப் போயிருந்தாலும், யோக்கியருக்கு உதவி செய்யவேண்டும்; அவருக்குத் தீங்கு செய்து பொருளைத் தேடுவதால், தனக்கு சுகம் கிடைப்பதாயினும் அங்ஙனம் தீங்கு நினைக்கலாகாது. நல்ல உணவு அகப்படாமல் உடல் மெலிந்தாலும், உண்ணத் தகாதவரிடத்தே உணவு உண்ணலாகாது. பொய் கூறுவதால் பூமி முழுவதுமே கிடைப்பதாயினும் பொய் கலந்த சொற்களைக் கூறலாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *