...

மக்கட் செல்வம் – விவேக சிந்தாமணி – 2.97

மக்கட் செல்வம்

விவேக சிந்தாமணி - 2.97

உந்து நீர்க்கட லுடுத்தபார் முழுவது மொருங்கே

வந்து தாடொழு மரசியல் வளமெலாம் பெறினும்

இந்தி ராதியர் பெரும்பதத் திருக்கை யெய்திடினும்

மைந்த ரின்றியே வாழ்வது வாழ்வுமற் றன்றே.

கடல் சூழ்ந்த இவ்வுலகில் மனிதர்கள் ஒருங்கே கூடிவந்து வணங்கக்கூடிய ஆட்சி முறையில் சிறப்புக்கள் யாவும் பெறினும், இந்திரன் முதலியோருடன் அமரசபையில் இடம் பெற்றிடினும், புத்திரர்கள் இல்லாத இல்வாழ்க்கையானது சிறந்த இல்வாழ்க்கையாகாது. அதாவது மனிதர்கள் உலகில் எத்தைகைய சிறப்புக்களுடன் வாழ்ந்தாலும், அவருக்கு மக்கட் செல்வம் இல்லையெனில் இல்வாழ்க்கை பயனற்றதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>