ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்க

“சித்தர்கள் இராச்சியம்” என்னும் ஒரு வலைப்பூவில் “இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்க” என்னும் இடுகையைப் படிக்க நேர்ந்தது.

பின்னூட்டம் மிக அதிகமாக இருப்பதால்தான் இவ்விடுகை. அவ்வாக்கத்தில் உள்ள கருத்துக்களிலிருந்து நாம் மாறுபடுகிறோம். அவ்வாசிரியர் அருள்கூர்ந்து பொருத்தருள்க.

“சித்தம் தெளிந்து சித்தத்துக்குள் ஒடுங்கியவனே சித்தன்.” சித்தன் பேசமாட்டான்; அதுவும் இரசவாதம், மாந்திரீகம் ஆகிவைகளைப் பற்றி சுத்தமாகப் பேசமாட்டான். இப்பாடல் இடைச்செருகலாக இருக்கலாமோ எனும் ஐயப்பாடு என்னுள் எழுகிறது.

இவைகளையடைய பக்தி, யோகம், ஞானம் ஆகிய படிகள் உள்ளன. தந்திரம், இயந்திரம், மாந்திரீகம் ஆகியவைகளால் அடைய இயலாது.

மனத்தின் திறம் = மந்திரம்
மனத்தை வலிமைப்படுத்த சொற்றொடர்கள்; இவையே பீசங்கள்.

“விஷ்ணு வாங்க செடிக்கு” என்னும் பெயரில் செடி இருப்பதாக நாமறியோம். சரி. “விஷ்ணு சாபம் வாங்க செடிக்கு” என எடுத்துக்கொள்வோம். அப்படியெனில் என்ன செடிக்கு? எமக்குத் தெரிந்து “விஷ்ணு கரந்தை” என்னும் கொடி உள்ளது. சிறிய ஊதாப்பூக்கள் கொண்டது. விஷ்ணுவின் சாபம் மட்டும்தானா?
“வாங்க செடிக்கு” எனக்கொண்டால் “வாங்க” எனும் தாவரமே இல்லையே! இதில் ஏதோ சாத்திரப் பூட்டு இருப்பதாக எண்ணுகிறோம்.

அப்படியே சாப நிவர்த்தி செய்வதாகக் கொள்வோம். அதற்கு வெறும் “சிம்,சிம்,சிம்” மட்டும் போதாதே!

“ஓம் மூலி; சர்வ மூலி. உன் உயிர் உன் உடலில் நிற்க. …………..” என்னும் மந்திரத்தை அல்லவா செபிக்கவேண்டும்.

எம்மைப் பொருத்தவரை இப்பாடல் மக்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லுகிறதோவெனும் அச்சம் வருகிறது. அதனால்தான் “பஞ்சபட்சி சாத்திரம்” என்னும் தலைப்பில் தொடராது விட்டுவிட்டோம்.

“மக்களை நல்வழிப்படுத்த யோகம், ஞானம் ஆகியன பற்றியுள்ள சித்தர் பாடல்களை இயன்றவரை எடுத்துரைத்தல் நலம்” என்பது எம் கோட்பாடு.

“இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்க” எனும் ஆக்கத்தின் கருத்துக்களை மறுதலித்தமைக்கு வருந்தும்….

Comments

Comment from தோழி
Time: March 24, 2010, 1:57 pm

அகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலிலிருக்கும் அகத்தியர் பாடலைத்தான் சொல்லியுள்ளேன். நானாக கற்பனையாக எதுவும் சொல்லவில்லை.
அத்துடன்,
மலையாள மாந்திரீகம் என்ற நூலில் தான் ” ஓம் மூலி, சர்வ மூலி, தேவ மூலி உன் உயிர் உன் உடலில் நிற்கக் கடவ சுவாகா” என்ற மந்திரம் சொல்லப் பட்டுள்ளதே தவிர எந்த சித்தர் பாடலிலும் சொல்லப்படவில்லையே.

மலையாள மாந்திரீகத்தையும் சித்தர் பாடல்களையும் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

//“சித்தம் தெளிந்து சித்தத்துக்குள் ஒடுங்கியவனே சித்தன்.” சித்தன் பேசமாட்டான்; அதுவும் இரசவாதம், மாந்திரீகம் ஆகிவைகளைப் பற்றி சுத்தமாகப் பேசமாட்டான்.///

என்றால் சித்தர் பாடல்களில் சொல்லப் பட்ட அனைத்துமே பொய் என்று ஆகிறதே… அப்படியானால் சித்தர்கள் எதுவும் சொல்லவில்லையா?

அப்படியானால் சித்தர்கள் சொன்ன யோக ஞானம், வைத்தியம், வாதம், சோதிடம், மாந்திரீங்கம் என்ற ஐந்து வகை காவியங்களும் பொய்யா?

Comment from ஞானவெட்டியான்
Time: March 24, 2010, 5:03 pm

அன்பு தோழி,

//அகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலிலிருக்கும் அகத்தியர் பாடலைத்தான் சொல்லியுள்ளேன். நானாக கற்பனையாக எதுவும் சொல்லவில்லை.//

நன்று. நன்று

//அத்துடன், மலையாள மாந்திரீகம் என்ற நூலில் தான் ” ஓம் மூலி, சர்வ மூலி, தேவ மூலி உன் உயிர் உன் உடலில் நிற்கக் கடவ சுவாகா” என்ற மந்திரம் சொல்லப் பட்டுள்ளதே தவிர எந்த சித்தர் பாடலிலும் சொல்லப்படவில்லையே.//

அது சித்தர் பாடல்களில் கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிடவில்லையே. அது எனக்கு என் குரு குருகுலத்தில் உபதேசிக்கப்பட்ட மந்திரம். அதிலும் ஒருபாதிதானே சொல்லியுள்ளேன். மறுபாதி சொல்லக்கூடாதவை ஆயிற்றே!

//மலையாள மாந்திரீகத்தையும் சித்தர் பாடல்களையும் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

அப்படிப்பட்ட பொத்தகங்களைப் பார்த்ததுமில்லை; பார்த்தாலும் படிக்கமாட்டேன்.

//“சித்தம் தெளிந்து சித்தத்துக்குள் ஒடுங்கியவனே சித்தன்.” சித்தன் பேசமாட்டான்; அதுவும் இரசவாதம், மாந்திரீகம் ஆகிவைகளைப் பற்றி சுத்தமாகப் பேசமாட்டான்.”
என்றால் சித்தர் பாடல்களில் சொல்லப் பட்ட அனைத்துமே பொய் என்று ஆகிறதே…//

சித்தர் பாடல்களில் சொல்லப் பட்ட அனைத்துமே பொய் எனக் கூறமாட்டேன்.

சித்தர் பாடல்களில் கிடைத்தவை பாதி; இட்டுக்கட்டியவை மீதி.

பத்து உரூபாய்க்கும் 15உரூபாய்க்கும் விற்கும் பொத்தகங்களில் கூறப்பட்டுள்ளவைகள் இடைச்செருகலாக இருக்க வாய்ப்புகள் நிறைய உண்டு.

//அப்படியானால் சித்தர்கள் எதுவும் சொல்லவில்லையா?//

அவர்கள் பக்தி, யோகம், ஞானம், சோதிடம், மருத்துவம் என நிறையக் கூறியுள்ளனர். அவைகள் உண்மை என நம்புகிறேன். ஏனெனில் அவைகளை முறையாகப் பயின்றால் நல்ல விளைவுகள் உண்டு.

//அதுவும் இரசவாதம், மாந்திரீகம் ஆகிவைகளைப் பற்றி சுத்தமாகப் பேசமாட்டான்//

அதுவும் இரசவாதம், மாந்திரீகம் ஆகிவைகளைப் பற்றி வாய்வழி உபதேசம் மட்டும்தான்.

//அப்படியானால் சித்தர்கள் சொன்ன யோக ஞானம், வைத்தியம், வாதம், சோதிடம், மாந்திரீங்கம் என்ற ஐந்து வகை காவியங்களும் பொய்யா?//

அவர்கள் பக்தி, யோகம், ஞானம், சோதிடம், மருத்துவம் என நிறையக் கூறியுள்ளனர். அவை மட்டுமே மனித இனத்துக்கு வழிகாட்டி.

இவ்வளவு விளக்கங்கள் அளித்துவிட்டு மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லாவிடில், நான் செலவிட்ட காலம் அனத்தும் விரயமே!

எனது வேண்டுகோள்:

காலம் கலிகாலம். உலகில் தகவிலர் நிறையப் பெருத்துவிட்டனர். எனது செல்பேசியில் தொடர்புகொண்டு “இரசக்குளிகை” செய்யும் முறை என்ன? என ஒரு அன்பர் வினவுகிறார். செல்பேசியில் விளக்கும் அளவுக்கு அதுதான் மலிவாகிவிட்டதா? அல்லது நான்தான் ஏதேனும் ஒரு இடுகையையில் இரசமணியைப் பற்றிக் குறிப்பிடும் தவறு செய்துவிட்டேனா?

இப்படிப்பட்ட காலத்தில் மனிதர்களின் பேராசையைத் தூண்டும் இரசவாதம் & மாந்திரீகம் ஆகியன பற்றி விளக்கம் தருவது எமக்கு நல்லதாகப் படவில்லை. அவர்கள் ஒன்றிருக்க ஒன்று செய்து தீங்கை விலைக்கு வாங்கிக் கொள்வர். அப்புறம் தங்களின் விருப்பப்படி செய்துகொள்ளலாம்.

சித்தர் இலக்கியத்தில் பக்தி, யோகம், ஞானம், சோதிடம், மருத்துவம் பற்றி நிறைய எழுதுங்களேன்.

Comment from தோழி
Time: March 24, 2010, 5:54 pm

மன்னிக்க வேண்டும், என்னிடம் இருக்கும் சித்தர் பற்றிய சில நூல்களின் பக்கங்கள் தொட்டதும் உதிர்ந்துவிடும் நிலையில் உள்ளது, அவற்றை காப்பி செய்து வைத்துக் கொள்ள முடியவில்லை, ஆகவே அதில் உள்ள முக்கியமானவைகளை சேமிக்கும் களஞ்சியமாக இந்த வலைப் பூவைப் பயன்படுத்த எண்ணினேன்.

//காலம் கலிகாலம். உலகில் தகவிலர் நிறையப் பெருத்துவிட்டனர். எனது செல்பேசியில் தொடர்புகொண்டு “இரசக்குளிகை” செய்யும் முறை என்ன? என ஒரு அன்பர் வினவுகிறார். செல்பேசியில் விளக்கும் அளவுக்கு அதுதான் மலிவாகிவிட்டதா? அல்லது நான்தான் ஏதேனும் ஒரு இடுகையையில் இரசமணியைப் பற்றிக் குறிப்பிடும் தவறு செய்துவிட்டேனா?

இப்படிப்பட்ட காலத்தில் மனிதர்களின் பேராசையைத் தூண்டும் இரசவாதம் & மாந்திரீகம் ஆகியன பற்றி விளக்கம் தருவது எமக்கு நல்லதாகப் படவில்லை. அவர்கள் ஒன்றிருக்க ஒன்று செய்து தீங்கை விலைக்கு வாங்கிக் கொள்வர். அப்புறம் தங்களின் விருப்பப்படி செய்துகொள்ளலாம்.///

இதைக் காரணமாகக் கொண்டு தான் மூலிகைகளின் தற்கால வழக்கிலுள்ள பெயர்களை வெளியிடாமல் இருக்கிறேன்.

இடைச் செருகல்கள் என்பதை இல்லாதொளிக்கவே சித்தர்களின் மூல நூல்களை ஆதாரமாகக் கொண்டு நான் பதிவுகளை எழுதுகிறேன்.

இனிமேல், உங்கள் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு பதிவுகளை வெளியிடுகிறேன்… மிக்க நன்றி.

Comment from ஞானவெட்டியான்
Time: March 24, 2010, 6:00 pm

அன்பு தோழி,
இந்த 70 வயது கிழவனின் கருத்துக்கு(உலக நன்மைக்காக) மதிப்பளித்தமைக்கு நன்றி.
இயன்றால் என் வலைப்பூக்களைப் படியுங்கள்(கட்டாயமல்ல).

Comment from தோழி
Time: March 24, 2010, 6:21 pm

உங்கள் அனுபவம் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் வலைப் பூவை நான் முன்பிருந்தே படிப்பதுண்டு, உங்கள் வலைப் பூவில் வந்த விவேக சிந்தாமணி யின் விளக்கங்களைப் பார்த்து தான் நானும் தனியாக ( நேரம் கிடைக்கும் பொது) விளக்க உரை எழுத முயல்கிறேன்.அதை இங்கு பதிந்துள்ளேன் ( http://thangaththamil.blogspot.com/ ).

உங்கள் தளத்துடன் நான் முன்பிருந்தே இணைந்தே இருக்கிறேன். தொடர்ந்தும் இருப்பேன்.

மிக்க நன்றி.

Comment from R.Chandrasekaran
Time: March 25, 2010, 12:18 am

இருவரின் மன கருத்துக்களும் நல்லதாக உள்ளது. அவரவர் வழியில் சேவை செய்யுங்கள் சமுதாயத்திற்கு.

Comment from ஞானவெட்டியான்
Time: March 25, 2010, 12:47 pm

நன்றி ஐயா.

Comment from Nakinam Sivam
Time: April 5, 2010, 8:36 pm

அன்புடைய அய்யா,
உங்களது ஆராய்ச்சிக்கு நன்றி.
சித்தர்கள் ஞானத்தில் ஒருவருக்கு உண்மையில் ஆர்வம் உள்ளதா என்று சோதிப்பதற்காக வாதம், வைத்தியம், மாந்தரீகம், சோதிடம் போன்றவற்றை வைத்தார்கள்.
யார் இவற்றில் மனதை செலுத்தாமல் ஞான பாதைக்கு வருகிறார்களோ அவர்க்ளுக்கே ஞானம் கிடைக்கும். மற்றவர்கள் இடையிலேயே நிற்க வேண்டியதுதான்.
அன்புடன்
சிவம்

Comment from ஞானவெட்டியான்
Time: April 6, 2010, 11:12 am

அன்பு சிவம்,
இதில் வைத்தியம் சிறிது வேறுபடுகிறது. உண்மையில் இதில் ஈடுபாடு உள்ளவர்கள் நாடிபிடித்தே நோயைக்கண்டுபிடிக்கும் வல்லமை பெற்றுள்ளனர்; அதிலும் அவர்கள் அருகி வருகிறார்கள். மற்றவையில் ஈடுபட்டவர்கள் பேராசையால் சித்தம் கலங்கிப் பித்துப் பிடித்து அலைகின்றனர்.
நன்றி

Comment from vivek
Time: July 6, 2010, 3:50 pm

respected sir,
iam b.vivek, i want to know about the mantras while waking in the morning and when bathing and having food and before sleeping kindly tell me the mantras
yours truly
vivek

Comment from ஞானவெட்டியான்
Time: July 7, 2010, 12:30 pm

My dear VivEk,
There is no necessity to chant mantras at all times. Pl note to watch the air entering into your nose and the path and how it goes out. If you are very particular about mantras: Saiva – om sivayanama ; vaishnava – om namonarayanaaya namaha. that os all.

Comment from prabhakaran
Time: September 2, 2010, 8:35 pm

good night sir ………..your explanation is excellent &unbeleivables matters are suberb…………..

Comment from prabhakaran
Time: September 2, 2010, 8:35 pm

plz any reply sir

Comment from prabhakaran
Time: September 2, 2010, 8:43 pm

respected sir,
intha kaliyugathil sutthamilaml ruthiraatchai anibavarkalai patri ungal nilaipaadu or karutthu?
yours truly,
m.prabhakaran

Comment from ஞானவெட்டியான்
Time: September 3, 2010, 9:31 am

My dear praba,
One man’s suththam is another man’s asuththam. You think that Rudhraksham is a holy symbol. Good. So your contention is Rudhraksham should not be worn by people who have asuththam. But they think Rudhraksham is only an ornament without any holyness.

Rudhraksham, by itself does not have any holyness. Only after wearing it, the person who wears chants mantras and afterwards only the sound waves get absorbed and Rudhraksham becomes holy.

//intha kaliyugathil sutthamilaml ruthiraatchai anibavarkalai patri ungal nilaipaadu or karutthu?//

They think Rudhraksham is only an ornament without any holyness. so let them wear it. After all it is his money spent for purchase of Rudhraksham. It is his wish. Who can prevent it. pl leave it alone and try to concentrate on your life.

Comment from அடியேன்S.வீரமனிகண்ணன்
Time: October 29, 2010, 10:19 am

அய்யா

உங்கள் அனுபவம் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் உலக நன்மைக்காக என்பதில் சந்தேகமில்லை.

Comment from ஞானவெட்டியான்
Time: November 3, 2010, 10:20 am

என் கடன் பணிசெய்து கிடப்பதே.

Comment from Balaji
Time: February 15, 2011, 8:02 pm

Hello Sir,
I’m Balaji. Is it possible to predict our future by sidda jodhidam?
Apart from fake astrologers do you know any sidda astrologer who is good in prediction..?
Plz…Reply me…

Comment from ஞானவெட்டியான்
Time: February 16, 2011, 9:24 am

My Dear Balaaji,
There is no such thing called Siddha Jothidam. There are so many books which deal Jothidam as said by Siddhas. Identify fake astrologers and avoid going to them. There may be one in a lac who are really good at prediction. It is pretty hard to pinpoint them. GOD IS GREAT.

Comment from Balaji
Time: February 25, 2011, 4:18 pm

Thank u Very much Sir.I’ll check.

Comment from devi
Time: March 27, 2011, 9:27 pm

very good website

Comment from marx
Time: November 2, 2011, 11:14 pm

Nandri.yellorukkum.

Comment from prabhakaran m
Time: December 15, 2011, 8:58 pm

vannakkam iyya,
enn annanukku valippu noi ullathu.athanai mulumaiyaaga theerkka siddharkal valiyil ,avarkal arulasiudan oru theervinai koorunkal entru thalnda panivanbudan kettukolkiran .

Comment from ஞானவெட்டியான்
Time: December 16, 2011, 9:38 am

அன்பு நண்பரே,
வணக்கம். தங்கள் தமயனின் நோய் குறித்து வருந்துகிறேன். உள்ளபடி சொல்லவேண்டுமெனில், நல்ல ஒரு வைத்தியரை அணுகவும். நல்ல வைத்தியர் கிடைப்பது அரிது. சிவனை முழுமனதுடன் வேண்டுங்கள். அவரே நல்வழி காட்டுவார். நல்ல வைத்தியரும் கிட்டுவார். அண்ணனும் குணமாவார். நானும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

Write a comment