ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

பிரபுலிங்க லீலை – 2.44

2.44 படிகொள் மாமுடிக் கங்கணத் திறைபதம் படுமொண்
முடிகள் யாவையும் படுகழல் நந்தியம் முதல்வன்
அடிகள் ஏந்துகை யுறவடித் தொதுக்கியவ் வவையைக்
கடிகொள் மாலையம் பிரம்பொடு திரிந்தனன் களித்து.

படி – நிலம்.
பதம்படு – திருவடிகளிலே படுகின்ற,
ஒண்முடி – ஒளிபொருந்திய மணிமுடிகள்.
கழல்-அடி.
கடிகொள் – நன்மணத்தைக் கொண்ட.
படிகொள் மாமுடிக் கங்கணத்து இறை – பூமியைத் தாங்கிய பெரிய தலையையுடைய ஆதிசேடனாகிய பாம்புக் கங்கணத்தையுடைய இறைவன் (சிவன்.)

நந்திதேவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தல்

இறைவன் நிலவுலகைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்பையே காப்பாக அணிந்தவர். அத்தகைய இறைவனை வணங்கவருவார் அனைவரும் நந்திதேவரையும் வணங்குவர். ஆதலால், இறைபதம்படும் ஒண்முடிகள் யாவையும் படுகழல் நந்தி என்றார். அத்தகைய நந்தி பிரான் கையில் பிரம்பெடுத்து அவையில் கூடியுள்ளோரை ஒழுங்கு படுத்தினர்.

Comments

Comment from சிவா
Time: February 7, 2010, 6:56 pm

அய்யா,
http://siththan.com/archives/1316 என்ற முகவரி கொண்ட இந்த பிரபுலிங்க லீலை – 2.44 தலைப்பிட்ட கட்டுரை படிக்க இயலுகிறது. தற்போது தமிழ்மணத்தில் பட்டியலிடப் பட்டுள்ள
pl bear எனும் தலைப்பிட பட்டுள்ள pl bear with me எனும்
http://siththan.com/archives/1320 கட்டுரை படிக்க இயலவில்லை. Page not found. 1317, 1318, 1319, 1320 ஆகிய எண்ணுள்ள கட்டுரைகள் அனைத்தும் படிக்க இயலவில்லை.

நன்றி.

அன்புடன்,
சிவா

Comment from ஞானவெட்டியான்
Time: February 9, 2010, 11:36 am

அன்பு சிவா,
பிரபுலிங்க லீலை – 2.44 தலைப்பிட்ட கட்டுரை தமிழ்மணத்தில் ஒருமணிநேரம் தெரியவில்லை. சொதனைக்காகpl bear என ஒரு சோதனைப் பதிவிட்டேன். அதை அழித்துவிட்டேன்.
எனது வலைப்பூக்களின் புதிய வடிவம் கண்டு கருத்திடவும்.
மிக்க நன்றி.

Write a comment