ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

8.விதியும் சோதிடமும்

விதியும் சோதிடமும்
***********************

//சோதிடம் அறிவியலா? //

ஆம் அறிவியலே. வானவியலை அடிப்படையாகக் கொண்ட அறிவியல்.

//விதி என்பதைப்பற்றி எனக்கொரு கருத்து உள்ளது. அதனை இங்கு கூற விரும்புகிறேன். உங்கள் கருத்தையும் தெரிந்துகொள்ள ஆவல். நம் முன்னோர்கள் கர்மவினை என்னும் பதத்தையே உபயோகித்திருக்கின்றனர். கர்மவிளைவு எனக்கூறப்படவில்லை. அதனால் முற்பிறவிக்கருமங்கள் கர்மவினையைத்தான் தோற்றுவிக்கும். அந்தவினையால் வரும் விளைவை மாற்றலாம் வள்ளுவர் கூறியது போல் (ஊழையும் உப்பக்கம் காண்பர் தம் முயற்ச்சியில் தாளாது உழற்றுபவர் – குறள் சரிதானே). ஒரு மேசையிலிருந்த்து ஒரு பொருள் ஒருவினையால் (கை வீசி தட்டுவதால்) கீழே விழலாம். இது ஒரு வினையென்றால் அது கீழே விழுவதற்கு முன் வேகமாக விரைந்து செயல்பட்டால் உடையாமல் காத்திடலாம். ஒரு வினையின் விளைவை மற்றொரு வினையின் மூலம் தடுக்கலாம் என்பது தெளிவாகிறது. கர்மவினையையும் அதுபோல் காலம் அறிந்து செயல்பட்டால் (இதற்கு ஒரு குறள் இருப்பதாக நினைவு) ஊழ்வினையையும் மாற்றலாம் என்பதும்//

தமிழில் ‘தெய்வம்’ என்ற சொல்லுக்கு ‘விதி’ என்ற பொருளும் உண்டு. ‘விதி’யை
யார் விதித்தார்கள், யாருமல்ல. நாமேதான். அதனால்தான் சங்கப் புலவன்
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று மிக உறுதியாகக் கூறினான்.

அண்டப் பெருவெளி ஒரு காந்த மண்டலம். ஒரு காந்த மண்டலத்துக்குள் ஈர்க்கப்பட்ட நிலையில் இருக்கும் அத்தனையும் காந்தமாய் ஆகி விடுகின்றன என்று விஞ்ஞான விதிகள் கூறுகின்றன. கடவுள் என ஒன்றிருந்தால், அது அண்டவெளியில் தன்னை ஒரு காந்த சக்தியாய் வெளிப்படுத்துகிறது. பூமி மட்டும் அல்ல. சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் அத்தனையும் காந்தங்களே. இந்தக் காந்தங்கள் ஒன்றையொன்று ஈர்த்துக் கொள்வதால் தான் வான் வெளியில் அந்தரத்தில் நிற்கின்றன. இயங்கவும் செய்கின்றன. பூமி ஒரு காந்தம். அதில் உள்ள பொருட்கள் எல்லாம் காந்தமாகிவிடுகின்றன. எனவே அவைகளுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கின்றது. அந்த ஈர்ப்பு சக்தி நம் எல்லோரையும் கணப்பொழுது தவறாது ஈர்த்துக் கொண்டே இருக்கின்றது. இயக்கங்களுக்கு இதுவே காரணம். இதுதான் விதிக்கப்பட்டது. இதுவே விதி.

அண்ட வெளியில் பூமியால் ஈர்க்கப்பட்ட நிலையில் இருப்பதால் தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒரு காந்தமாகவே ஆகி விட்டோம். எனவே தான் நம் உடலில் மின் காந்த அலைகள் உண்டாகின்றன. இந்த மின் காந்த அலைகளே நம்மை இயக்குகின்றன.

கர்மவினை தாங்கள் கூறியபடி, செய்யும் வினைகளுக்கு ஏற்ப வேறுபடும். நல்லவை செய்தால் நற்பலன் உடனே விளையும். நீங்கள் ஒருவருக்குத் தக்க காலத்தில் உதவினால், “நீங்கள் நல்லா இருக்கணும்” எனும் வாழ்த்து வருகிறதே! அதுவே நல்வினைப் பயன்.

ஒருவருக்குத் தீங்கு செய்துவிட்டுப் பின்னர் மன சாட்சி குத்துகிறதே அதுவும், “நீ நல்லா இருப்பியாடா! பாவி” எனும் வசைச் சொல்லும் தீவினையின் பலன்கள்.

நீங்கள் வானத்தை நோக்கி எச்சில் துப்பினீர்கள், அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது. உடனே வானம் என்மீது எச்சில் துப்பியது என்று அலறி என்ன பயன்? வானம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. வானம் மிக மேலே இருக்கிறது. உங்களைப் பழிவாங்க அதற்கு நேரம் இல்லை. நீங்கள் துப்பியதை இயற்கை மீண்டும் உங்கள் மேலேயே விழுமாறு செய்தது. கைமேல் பலன்.

இங்ஙனம், நல்வினைப் பயன், தீவினைப்பயன் ஆகியவற்றை அவ்வப்பொழுதே தீர்த்து விடும்பொழுது, அவை எப்படிச் சேர்ந்து பாவ, புண்ணியமான மூட்டையாய் நிற்கின்றன?

நம் வீட்டுக்கணக்கைச் சரிபார்க்கவே நமக்கு நேரம் போதவில்லை. இத்தனை சீவராசிகளின் கணக்கைப் பார்ப்பதுதானா இறைவனின் வேலை. அப்படியே பார்த்தாலும் அவனுக்குப் பைத்தியம்தான் பிடிக்கும்.

“ஊழ்” என்பது கர்மவினை இல்லை. அணுவிலிருந்து பிரிந்து வந்தவன் அணுவிலே சேரவேண்டும். எந்த அணுவுடன் என்பதை கர்மவினை நிர்ணயிப்பதில்லை. மனிதனாகப் பிறந்தவன் ஆறு அறிவுடன் பிறந்தான். அவன் ஏழாம் அறிவை அடையவேண்டும். அதற்கு அவன் (ஞான)வினை செய்தாக வேண்டும். அவன் எந்தப் பக்குவத்தில் (திட, திரவ) இருக்கிறானோ அந்த அணுவுடன் சேருவான்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
திருவாசகத்தில் (சிவபுராணம், 26-32)

இந்த அண்டம் ஒரு அணுக்கடல். இந்த அணுக்கடலில் ஏற்படும் சுழிகள், குமிழிகள் போன்றவை தான் நாமெல்லாம். அணுக்கடலின் அலைகள் ஓயாது. ஆனால் அந்த அலைகளின் இன்றைய தொகுப்புக்கள் அனைத்தும் அழிந்து வேறொரு புதிய தொகுப்பு தோன்றும். ஆனால் இந்த அணுக்கடல் அழியவே அழியாது.

ஒரு பொருள் திடப் பொருளாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ இருப்பதற்குக் காரணம் அப்பொருளில் உள்ள அணுக்களின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபட்ட வேகமே காரணம். இன்று நம் உடலை ஒளியின் வேகத்தில் செலுத்தினால் நாமும் ஒளியாகவே மாறி விடுவோம்.

எப்படி நாம் ஒளியின் வேகத்தில் சென்றால் ஒளியாகவே மாறி விடுவோமோ, அதைப் போன்றே நம் இயக்கத்தின் வேகத்தை நிறுத்தினால் இந்த அண்டத்தில் இருக்கும் ஒரே ஒரு பொருளாகிய பரிபூரணப் பரம்பொருளாகவே மாறி விடுவோம்.

//ஒரு மேசையிலிருந்த்து ஒரு பொருள் ஒருவினையால் (கை வீசி தட்டுவதால்) கீழே விழலாம். இது ஒரு வினையென்றால் அது கீழே விழுவதற்கு முன் வேகமாக விரைந்து செயல்பட்டால் உடையாமல் காத்திடலாம். ஒரு வினையின் விளைவை மற்றொரு வினையின் மூலம் தடுக்கலாம் என்பது தெளிவாகிறது.//

இது அனிச்சைச் செயல். இதற்கு அதிபதி முகுளம். இதையே திருமாலாக உருவகித்திருக்கிறார்கள். காக்கும் செயலல்லவா? விதியை மதியால் வெல்லலாம் என்பதுவும் இதுவே.

//அந்தக்காலத்தை அறியும் ஒரு கருவியாக சோதிடம் இருக்கிறது என்பது என் கருத்து.//

சரியே. சோதிடம் ஒரு கைவிளக்கு. இரவில் செல்கிறோம். சாலையின் நடுவில் ஒரு பள்ளம் இருக்கிறது. கைவிளக்கு இருந்ததால் பள்ளம் தெரிகிறது. விலகிப்போய்விடுகிறோம். ஆனால் கைவிளக்கை எப்பொழுது, எந்த அளவுக்கு நம்பிப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு சோதிடத்தைப் பயன்படுத்தினால் அறிவுடையவன்.

Comments

Comment from செல்வன்
Time: April 2, 2008, 11:56 pm

ஐயா,
நாடி சோதிடம்,கிரக பலன்கள்,கை ரேகை ஜோசியம்,எண் கணிதம் என பலவகை சோதிடங்கள் உண்டே.இவற்றில் எது உண்மை,எது பொய்?
குறிப்பாக நியூமராலஜி மோகம் பலரை பிடித்து ஆட்டுகிறதே?விளக்க வேண்டுகிறேன்

Comment from சம்மட்டி
Time: April 2, 2008, 11:56 pm

சோதிடம் உண்மையென்றால் பரிகாரம் பொய் (இதை தருமி அவர்களின் பதிவிலும் தெரிவித்திருக்கிறேன்)

சோதிடத்தின் மூலம் நடக்கப் போவதை தெரிந்து கொள்வதாவதால் என்ன நன்மை ? நடப்பது நடக்கத்தானே செய்யும்.

சோதிடம் உண்மையாக இருந்தால் அது வெறும் கலைதான், அதனை பார்க்கும் யாருக்கும் நன்மையோ தீமையோ இல்லை வேண்டுமானால் மன உளைச்சல் வரும் என்று சொல்லலாம். சோதிடம் பார்பவர்கள் மட்டும் விதியை வெல்லுபவர்களா என்ன ? பார்காதவர்கள் எந்த வித தீமைகளிலிருந்தும் மீண்டுவருவதில்லையா ?

சோதிடத்தால் முன்னால் நடப்பதை அறிந்து கொண்டாலும் அதற்கு மாற்றாக ஒன்றும் செய்ய இயலாது என்பதற்கு விக்ரமாதித்தனின் மகன் மரணமுற்ற கதையையும் புராண இதிகாசங்களில் உள்ளது.

Comment from ஞானவெட்டியான்
Time: April 2, 2008, 11:57 pm

அன்பு சம்மட்டி,
// சோதிடம் உண்மையென்றால் பரிகாரம் பொய் //
ஆம். பரிகாரம் செய்வதற்குப் பதிலாக, பசியெடுத்துள்ள, உழைக்கமுடியாத 10 பேருக்கு அன்னமீந்தால் போதும். ஆங்கோர் ஏழைக்குக் கல்வி புகட்டினால் போதும். இதுவும் மன ஆறுதலுக்காகவும், 10 பேருக்கு உதவி செய்யும் கட்டயத்தை உண்டாக்கவே!

//சோதிடத்தின் மூலம் நடக்கப் போவதை தெரிந்து கொள்வதாவதால் என்ன நன்மை ? நடப்பது நடக்கத்தானே செய்யும்.//

சோதிடம் ஒரு கைவிளக்கு. இரவில் செல்கிறோம். சாலையின் நடுவில் ஒரு பள்ளம் இருக்கிறது. கைவிளக்கு இருந்ததால் பள்ளம் தெரிகிறது. விலகிப்போய்விடுகிறோம். ஆனால் கைவிளக்கை எப்பொழுது, எந்த அளவுக்கு நம்பிப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு சோதிடத்தைப் பயன்படுத்தினால் அறிவுடையவன்.

//சோதிடம் உண்மையாக இருந்தால் அது வெறும் கலைதான், அதனை பார்க்கும் யாருக்கும் நன்மையோ தீமையோ இல்லை வேண்டுமானால் மன உளைச்சல் வரும் என்று சொல்லலாம். சோதிடம் பார்பவர்கள் மட்டும் விதியை வெல்லுபவர்களா என்ன ? பார்காதவர்கள் எந்த வித தீமைகளிலிருந்தும் மீண்டுவருவதில்லையா ?//

மன உளைச்சல் வருமென்பவர்கள் பார்க்காமலிருப்பதுதான் வழி. மன உறுதி இருப்பவர்கள் பார்த்தால் இவ்வகை தீம்பு வருகிறதெனத் தெரிந்துகொண்டால், அதைக் குறைக்க என்ன வழி என யோசித்து முனெச்சரிக்கைகள் எடுக்கலாம். நோய் வர்மெனத் தெரிந்தால், மருத்துவமனைக்கு பணம் சேர்த்து வைக்கலாம். விதியை வெல்லுவது சோதிடத்தில் இல்லை. பார்க்காதவர்களுக்குவரும் தீமைகளிலிருந்து மீண்டு வந்தால் அவர்களின் மன, பண பலம் நிரைய உள்ளது எனப் பொருள்.

//சோதிடத்தால் முன்னால் நடப்பதை அறிந்து கொண்டாலும் அதற்கு மாற்றாக ஒன்றும் செய்ய இயலாது என்பதற்கு விக்ரமாதித்தனின் மகன் மரணமுற்ற கதையையும் புராண இதிகாசங்களில் உள்ளது.//

கதை, புராணம், இதிகாசங்கள் நடக்கும் உலக வாழ்வுக்கு ஒத்து வராது. அவைகள் தத்துவங்கள்தான் கூறும் (சில நேரங்களில்).

Comment from mala
Time: June 20, 2009, 11:52 pm

good

Comment from xxxxxxxxxxxx
Time: August 20, 2010, 5:31 pm

jothidam enbathu poai

Comment from ஞானவெட்டியான்
Time: August 22, 2010, 11:35 am

XXXXXXXXXXXXXX

Write a comment