...

ஞானக் குறள் – (121-130)

4 Responses to ஞானக் குறள் – (121-130)

  1. kannabiran, RAVI SHANKAR (KRS) says:

    ஞானம் ஐயா

    புலம்பு நிலை என்பது தான் கேவல நிலை என்று சொல்கிறோமா?
    இதற்கு ஏன் “கேவலம்” என்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள்! நீங்க தெளிவுபடுத்தினா தெரிஞ்சிக்குவோம்!

    //யுள்ளே விளக்கொளி யாகுமே//
    நல் அக விளக்கது நமசிவாயவே” என்று சமயக் குரவரின் சிந்தனையும் எப்படி ஒத்துப் போகிறது பாருங்கள்!

  2. ஞானவெட்டியான் says:

    அன்பு இரவி,

    //புலம்பு நிலை என்பது தான் கேவல நிலை என்று சொல்கிறோமா?
    இதற்கு ஏன் “கேவலம்” என்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள்! //

    இருள் மலத்துடன் கூடிய புலம்பு நிலையில் உயிர்கள் உள்ளன. அதாவது இறை உள்ளே இருக்கிறது என்று அறிவு சொல்லி உணர்ந்துபார்க்க இயலாத நிலை; அறியாமயுடன் கூடிய நிலை. அத்துடன், இறை உள்ளது, இல்லையெனக் குழப்பும் மக்களின் சொல்பேச்சுக் கேட்டு இன்னும் குழம்பிய குட்டையாகிவிடும் மனம். இந்தக் கழிவிரக்க நிலைக்குத்தான் புலம்புநிலை என்கிறோம். இதைவிடக் கொடிய நிலை இல்லாமையால் கேவலம் என்கிறார்.

    //யுள்ளே விளக்கொளி யாகுமே//
    //நல் அக விளக்கது நமசிவாயவே//

    அக(த்தி)ல் உள்ள விளக்கையறிய நமசிவய உணரலாம். இதுதான் தீபம் ஏற்றுவதன் தத்துவம். திருவண்ணாமலையே போற்றி!!

  3. kannabiran, RAVI SHANKAR (KRS) says:

    //இதுதான் தீபம் ஏற்றுவதன் தத்துவம். திருவண்ணாமலையே போற்றி!!//

    ஆகா, நினைத்த மாத்திரத்தில் அருளைத் தரும் திருவண்ணாமலை! கார்த்திகை தீபத் திருநாள் அன்று, ஒரு பதிவு போடலாம் என்று எண்ணம் தோன்றச் செய்து விட்டீர்கள்! நன்றி ஐயா!!

  4. ஞானவெட்டியான் says:

    அன்பு இரவி,

    //நினைத்த மாத்திரத்தில் அருளைத் தரும் திருவண்ணாமலை! கார்த்திகை தீபத் திருநாள் அன்று, ஒரு பதிவு போடலாம் என்று எண்ணம் தோன்றச் செய்து விட்டீர்கள்! நன்றி ஐயா!!//

    போடுங்கள். ஞான ஒளி ஏற்றுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>