தமிழ்நாட்டு சிவாலயங்கள் சிலவற்றில் கருவறை லிங்கங்கள் மண்ணால் ஆனவை. அப்படிப்பட்ட மண்லிங்கங்கள் இரண்டு வகைப்படும்.
1.ஆமலிங்கம்.
2.பக்குவலிங்கம்.
ஆமலிங்கமானது, புண்ணிய தீர்த்தங்களான ஆறு, கடல், குளம், மண், மலை, நந்தவன மண், புற்று மண் முதலிய மண்ணை பொடி செய்து தானியம், கோதுமை, உளுந்து, குங்கிலியம், குக்கில், அரக்கு, பிசின் இவற்றோடு பசுவின் ஐந்து வகை பொருட்களும் சேர்த்து பிசைந்து படிகப்பொடி அல்லது நவரத்தின பொடி கலந்து உருவாக்குவதாகும்.
இந்த ஆமலிங்கத்தை பக்குவமாக சுட்டெடுப்பது பக்குவலிங்கம் எனப்படும்.
இந்த இரண்டு வகையான லிங்கங்களும்,மயிலாடுதுறை அருகிலுள்ள திருப்பந்தணைநல்லூர், திருப்புன்கூர், திருச்சிறுகுடி தலங்களிலும், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் காணப்படுகின்றன.